Latest Updates
-
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்
முதுகின் இந்த இடத்தில் வலிக்குதா? அப்ப அது மாரடைப்பா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்!
Heart Attack Warning Symptoms In Tamil: தற்போது நிறைய பேர் தினசரி சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் முதுகு வலி. இந்த முதுகு வலியானது ஒருவருக்கு பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். இதற்கு தற்போதைய பணியிட சூழல் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. அதில் சிலர் நீண்ட நேரம் உட்கார்ந்தவாறும், இன்னும் சிலர் நீண்ட நேரம் நின்றவாறும் வேலை செய்கின்றனர்.
இதனால் முதலில் சந்திப்பது முதுகு வலியாகத் தான் இருக்கும். இதுதவிர முதுகு வலியால் பெண்கள் அதிகம் சிரமப்படுவதுண்டு. குறிப்பாக உடல் பருமன் அதிகமாக இருந்தால், அத்தகையவர்களுக்கு முதுகு வலி அதிகமாக இருக்கும். இது தவிர வாய்வு தொல்லையினாலும் முதுகு வலியை சிலர் சந்திக்க நேரிடும்.

இப்படி சந்திக்கும் முதுகு வலியை ஒருபோதும் சாதாரணமாக எண்ணிவிடாதீர்கள். ஏனெனில் இந்த முதுகு வலியும் மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என்பது தெரியுமா? கம்பத்தை சேர்ந்த இதய நோய் நிபுணரான டாக்டர் விஜயசாரதி பிப்ரவரி 01 ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுக்குறித்து பகிர்ந்துள்ளார். அதுவும் அவர் தன்னிடம் முதுகு வலி என்று வந்த நோயாளி ஒருவரைக் குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "நேற்று என்னிடம் ஒருவர் முதுகு வலி என்று வந்திருந்தார். நானே எதிர்பார்க்கவில்லை, அவருக்கு மாரடைப்பு இருந்தது. அதற்காக அனைத்து முதுகு வலியும் மாரடைப்பு என்று சொல்லவில்லை. எந்த இடத்தில் வலித்தால் மாரடைப்பாக சந்தேகப்பட வேண்டும், யாருக்கு வலித்தால் உடனே மருத்துவரை பார்க்க வேண்டும் என்பது குறித்து சொல்கிறேன், தெரிந்து கொள்ளுங்கள்" என்று கூறினார்.
அதன் பின் அந்த நோயாளியின் வழக்கு குறித்து கூறினார். அப்போது அவர் கூறியதாவது, "65 வயதுள்ள முதியவர் ஒருவருக்கு 10 நாட்களாக விட்டுவிட்டு முதுகு வலி வந்துள்ளது. இப்படி முதுகு வலி வந்தால், நாம் அனைவரும் சாதாரண தசைப்பிடிப்பு என்று தான் நினைப்போம். அப்படி தான் அவரும் நினைத்துள்ளார். ஒருநாள் அவருக்கு சுமார் 1 மணிநேரமாக முதுகு வலி கடுமையாக இருந்ததோடு, அதிகமாகவும் வியர்த்துள்ளது. இதனால் என்னிடம் உடனே வந்தார்.
அவருக்கு ஈசிஜி, எக்கோ என அனைத்து பரிசோதனைகளையும் செய்து பார்த்ததில், ஈசிஜியில் லேசான மாற்றங்கள் தெரிந்தன, எக்கோவில் பெரிதளவில் எதுவும் தெரியவில்லை. ஆனால் எனக்கு உறுதியாக ஒரு சந்தேகம் இருந்தது, அவருக்கு மாரடைப்பு தான் ஏற்பட்டுள்ளது. உடனே ஆஞ்சியோகிராம் செய்ய பரிந்துரைத்தேன்.
ஆனால் அவரது குடும்பத்தினர் அனைவருமே என்னை சந்தேகமாக பார்த்தார்கள். இவரது ஈசிஜி, எக்கோ ரிப்போர்ட்டுகளை குடும்ப மருத்துவரிடம் காண்பித்துள்ளார்கள். பதிலுக்கு அந்த மருத்துவர் உடனே எனக்கு ஃபோன்கால் செய்து, அனைத்தும் நன்றாகத் தானே உள்ளது, ஏன் ஆஞ்சியோ செய்ய சொல்கிறீர்கள், இரத்த பரிசோதனை செய்து பார்க்கலாமே என்று கேட்டார்கள்.
நான் உறுதியாக கூறினேன், அவருக்கு வலி தீவிரமாகி 1 மணிநேரம் தான் ஆகிறது. இரத்த பரிசோதனை செய்தால், முடிவு தெரிய 6 மணிநேரம் ஆகும். அதுவரை காத்திருந்தால் ஆபத்து என்று கூறி, ஆஞ்சியோ செய்ய கூறினேன். ஆஞ்சியோ செய்ததில் அவருக்கு இரண்டு அடைப்பு இருந்தது, அங்கு ஸ்டென்ட் வைத்த பின், தற்போது அவர் நன்றாக உள்ளார்" என்று டாக்டர் கூறினார்.
முதுகு வலி எப்படி மாரடைப்பின் அறிகுறியாக இருக்கும்?
"இதயத்தின் பின்புறத்தில் அட்டாக் வரும் போது, அப்போது முதுகு வலியின் மூலம் அறிகுறி தெரியலாம். எல்லா முதுகு வலியும் மாரடைப்பு என்று சொல்லவில்லை. மேல் முதுகு பகுதி, அதாவது இதயம் இருப்பதற்கு அப்படியே பின்புறத்தில் வலியை சந்தித்தால், சந்தேகப்படலாம். அதேப் போல் 40 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு, இரத்த சர்க்கரை, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், புகைப்பிடிக்கும் பழக்கம் போன்றவை இருந்து, முதுகு வலியை சந்தித்தால், உடனே மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்" என்று கூறினார்.
எனவே நண்பர்களே! உங்களுக்கு அடிக்கடி முதுகு வலி வந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்யுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
