Latest Updates
-
கொசுக்களுக்கு ஏன் மனித இரத்தம் தேவைப்படுகிறது? கொசுக்கள் கடித்தால் ஏன் அரிப்பு ஏற்படுகிறது தெரியுமா? -
செப்டம்பர் மாதத்தில் வெற்றிகளையும், கோடிகளையும் குவிக்கும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் ரவா லட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
ஹை பிபி இருக்கா? மருந்து மாத்திரை இல்லாமலேயே பிபி-யை குறைக்கணுமா? அப்ப இந்த 5 பானங்களை குடிங்க.. -
வறுத்து அரைச்ச கோவக்காய் சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
1 வருடம் கழித்து வக்ரமடையும் சுக்கிரனால் பணத்தையும், புகழையும் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
இந்தியாவின் எத்தனை செயற்கைகோள்கள் விண்வெளியில் உள்ளது? எந்த நாட்டிடம் மிக அதிக செயற்கைகோள்கள் உள்ளது தெரியுமா? -
கர்நாடகா ஸ்பெஷல் அக்கி ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணம் கொட்டும் நாளாக இருக்குமாம் -
புதன் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு மூடப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா?
உங்க இடது கை அடிக்கடி வலிப்பதோடு, மரத்து போகுதா? அப்ப உங்களுக்கு மாரடைப்பு வர நிறைய வாய்ப்பிருக்கு.. உஷார்..
Heart Attack Symptoms In Tamil: தற்போதைய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையினால் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளை தினசரி சந்தித்து வருகிறோம். ஆனால் ஒருசில பிரச்சனையை தினமும் சந்தித்து வந்தால், அதை சாதாரணமாக விட்டுவிடக்கூடாது.
ஏனெனில் அது உடலில் உள்ள மோசமான ஆரோக்கிய பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். அதுவும் குறிப்பிட்ட சில அறிகுறிகளை திடீரென்று அனுபவித்தால், அது உயிரைப் பறிக்கும் நோயின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். அதில் ஒன்று தான் இடது கையில் உணர்வின்மை மற்றும் வலி.

இப்படி இடது கையில் உணர்வின்மை அல்லது வலியான தவறான தூக்க நிலையின் காரணமாக இருக்கலாம். இருப்பினும் இது மாரடைப்பு அல்லது பக்கவாதத்திற்கான அறிகுறியும் கூட. நிபுணர்களின் கூற்றுப்படி, எப்போது ஒருவரது கையில் இரத்த ஓட்டம் இல்லாமல் மரத்துப் போயிருப்பதை உணர்கிறார்களோ, அவர்கள் புற நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
இல்லாவிட்டால் மாரடைப்பு அல்லது பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கலாம். எதுவாயினும் இவ்விரண்டு நிலைகளுமே உயிரைப் பறிக்கக்கூடிய அளவில் ஆபத்தானது. எனவே இந்த அறிகுறியை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டியது முக்கியம்.
ஒருபோதும் லேசாக எடுத்துக் கொள்ளக்கூடாத சில அறிகுறிகள்
* நெஞ்சு பகுதியின் மையப் பகுதி அல்லது இடது பக்கத்தில் வலி.
* இரண்டு கைகள், கழுத்து, முதுகு, தாடை அல்லது வயிற்றுப் பகுதியில் வலி, மரத்துப் போவது அல்லது குத்துவது போன்று இருப்பது.
* சுவாசிப்பதில் சிரமம்
* வழக்கத்திற்கு மாறாக உடல் சோர்வு
* வாந்தி மற்றும் குமட்டல்
* பக்கவாதம்
* பேசுவதில் அல்லது புரிந்து கொள்வதில் சிரமம்
* கைகள், முகம் அல்லது கால்கள் மரத்துப் போவது
* பார்வை பிரச்சனைகள்
* தொடர்ச்சியான மற்றும் அடிக்கடி தலைவலி
* நடப்பதில் சிரமம், தலைச்சுற்றல்
மோசமான இரத்த ஓட்டம்
நமது உடலில் உள்ள சுற்றோட்ட அமைப்பு தான் இதயத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்கு இரத்தத்தை எழுத்து செல்கின்றன. இப்படி அனைத்து பகுதிகளுக்கும் இரத்தம் கிடைப்பதால் தான், செல்களுக்கு தேவையான சத்துக்கள் பெறப்படுகின்றன. ஆனால் இந்த இரத்த ஓட்டத்தில் சிக்கல்களை சந்திக்கும் போது, உடலின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு இரத்தம் சரியாக செல்லாமல், சில சமயங்களில் கைகள், கால்கள் போன்றவை மரத்துப் போகின்றன.
மருத்துவர்களின் கூற்றுப்படி, மோசமான இரத்த ஓட்டம் பின்வரும் காரணங்களால் ஏற்படலாம். அவை:
* புறதமனி நோய் - இந்நிலையில் தமனிகள் சுருங்கி, கைகள் மற்றும் கால்களுக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைகிறது.
* இரத்த கட்டிகள் - இந்த இரத்த கட்டிகளானது உடலின் எந்த பகுதிகளில் வேண்டுமானாலும் உருவாகலாம். இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய அளவில் ஆபத்தானது.
* சர்க்கரை நோய் - சர்க்கரை நோயானது உடலில் மோசமான இரத்த ஓட்டத்தை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.
* வெரிகோஸ் வெயின் - இந்நிலையில் இரத்தம் சரியாக நரம்புகள் வழியாக நகராமல் இருக்கும்.
புற நரம்பியல் நோய்
எப்போது ஒருவரது புற நரம்பு மண்டம் சேதமடைகிறதோ, அப்போது இந்நிலை ஏற்படுகிறது. இந்த புற நரம்புகள் தான் மூளை மற்றும் முதுகுத்தண்டு ஆகியவற்றில் இருந்து தகவல்களை அனுப்புகிறது. இந்த நரம்புகள் சேதமடைந்தால் பின்வரும் அறிகுறிகள் தென்படும்.
* கூச்ச உணர்வு
* உணர்வின்மை
* எரிச்சலுடன் வலி
* தசை சுருக்கம்
* தொட்டால் மிகுதியான வலி
* பக்கவாதம்
வேறு எந்த காரணங்களுக்கு எல்லாம் கைகளில் உணர்வின்மை மற்றும் மிகுந்த வலியை சந்திக்க நேரிடும் என்பதை இப்போதுக் காண்போம்.
மல்டிபிள் ஸ்களீரோசிஸ்
இந்த பிரச்சனையின் போது மூளைக்கும், உடலின் பிற உறுப்புகளுக்கும் இடையே தொடர்பு சிக்கல் ஏற்படும். இதன் விளைவாக சில சமயங்களில் கைகள் மரத்துப் போய் உணர்வின்மையை ஏற்படுத்தும்.
சிசைந்த வட்டு நோய்
இந்நிலையில் முதுகுத்தண்டின் வட்டுகள் தேய்ந்து போகத் தொடங்கும். இந்த நிலையானது பொதுவாக வயதான காலத்தில் ஏற்படும். இம்மாதிரியான சூழ்நிலையின் போது கைகள், தோள்பட்டை போன்ற பகுதிகளில் வலியுடன் உணர்வின்மையையும் ஏற்படுத்தும்.
ஹெர்னியேட்டட் டிஸ்க்
பல நேரங்களில் முதுகு தண்டுவடத்தின் டிஸ்க்குகள் சிதைந்து, நரம்புகளின் வேர்ப் பகுதியில் அதிக அழுத்தத்தைக் கொடுக்கும் போது, அதன் விளைவாக கைகள் பலவீனமாகி, உணர்வில்லாதவாறு ஏற்படுத்தும்.
எலும்பு முறிவு
கைகளில் எலும்பு உடைந்தால், அது கடுமையான வலி மற்றும் வீக்கத்தை உண்டாக்கும். இந்நிலையில் மருத்துவரை அணுகி கைக்கு கட்டு போட்டால், சில வாரங்களில் சரியாகிவிடும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications