Latest Updates
-
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
உடலை என்றும் ஃபிட்டாக வைக்க உதவும் விதவிதமான ஃபிரிட்ஜ் சாலட் வகைகள்!
Healthy Salads In Tamil: பொதுவாக நிறைய சாலட் வகைகளை நாம் அறிந்து இருப்போம். இது என்ன ஃபிரிட்ஜ் சாலட் வகைகள் என்ன என்று யோசிக்கிறீர்களா? ஃபிரிட்ஜ் சாலட் என்பது வித விதமான சாலட் வகைகளை உங்கள் குளிர்சாதன பெட்டியில் சிறிது நேரம் வைத்து விட்டு சாப்பிட வேண்டிய சாலட் வகைகளாகும்.
இந்த ஃபிரிட்ஜ் சாலட் வகைகளில் நிறைய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. இந்த ஃபிரிட்ஜ் சாலட் வகைகளை உங்கள் வீட்டு குளிர் சாதன பெட்டியில் வைத்து விட்டு எப்பொழுது வேண்டுமானாலும் எடுத்து சாப்பிடலாம். காய்கறிகள் மற்றும் பழங்கள் இவற்றை கொண்டு இந்த சாலட் தயாரிக்கப்படுகிறது.

மூன்று நாட்களுக்கு ஃபிரிட்ஜில் வைத்து குளிர்விக்கலாம். 5 நாட்களுக்கு மேல் சாலட்டை பிரிட்ஜில் வைத்திருக்க கூடாது. இந்த ஃபிரிட்ஜ் சாலட்டை உங்கள் இரவு டின்னருக்கு கூட நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
எனவே அடிக்கடி சாலட் வகைகளை தயாரிக்க வேண்டும் என்ற கஷ்டமும் உங்களுக்கு கிடையாது. சரி வாங்க உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வித விதமான ஃபிரிட்ஜ் சாலட் வகைகளை பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
லெமனி அர்டிகோக் மற்றும் திணை சாலட்
இந்த சாலட் ஸ்பானிஷ் கொண்டைக்கடலை மற்றும் அரிசி கொண்டு செய்யப்படுகிறது. இதில் எலுமிச்சை, திணை, வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம் போன்ற பல பொருட்கள் சேர்க்கப்பட்டு செய்யப்படுகிறது. இது ஒரு கோடை கால சாலட் வகையாகும். இது உங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்க கூடியது. இதை நீங்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்து பரிமாறலாம். இது உங்கள் புரோட்டீன் தேவையை பூர்த்தி செய்ய உதவுகிறது.
தேன், கடுகு மற்றும் ப்ராக்கோலி சாலட்
இந்த சாலட் எப்பொழுதும் உங்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும். இதில் இனிப்பு தேன், ப்ராக்கோலி, சிவப்பு வெங்காயம், பாதாம் பருப்பு, உலர்ந்த க்ரான் பெர்ரி, பூண்டு போன்ற பல பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இந்த சாலட் உங்களுக்கு ஒரு மொறு மொறுப்பான சுவையை தரும். இந்த கோடை காலத்தில் சில நிமிடங்களில் தயார் செய்ய இந்த சாலட் சிறந்த தேர்வாக இருக்கும். இதில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகளவில் காணப்படுகிறது. உங்கள் இதயத்திற்கு நல்லது.
தக்காளி மொசரெல்லா பாஸ்தா சாலட்
இதில் பாஸ்தா, கீரை, தக்காளி மற்றும் மொசரெல்லா போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டு செய்யப்படுகிறது. இது இந்த கோடை க்கு சிறந்த உணவாக இருக்கும். இதையும் ஃபிரிட்ஜில் வைத்து குளிர்வித்து நீங்கள் சாப்பிடலாம். இதில் பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் சோடியம் போன்றவை காணப்படுகிறது. இது உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
குளிர் வேர்க்கடலை நூடுல்ஸ் சாலட்
இந்த குளிர் வேர்க்கடலை நூடுல்ஸ் சாலட் கோடை காலத்திற்கு ஏற்ற சிறந்த உணவாகும். இந்த கலர்ஃபுல்லான சாலட் மொறு மொறுப்பான சுவையுடன் உங்களுக்கு பிடித்த டிஷ்ஷாக இருக்கும். இதில் வேர்க்கடலை, பச்சை வெங்காயம், சிவப்பு முட்டைக்கோஸ் போன்ற பொருட்களை சேர்த்து செய்கின்றனர். இதை ஃபிரிட்ஜில் வைத்து பரிமாறலாம். இது சிறந்த புரோட்டீன் ஆதாரத்தை தருகிறது.
வெள்ளரிக்காய் மற்றும் கருப்பு பீன்ஸ் சாலட்
இந்த சாலட் உங்களுக்கு சிறந்த கோடை கால சைடிஷ்ஷாக இருக்கும். இதை நீங்கள் ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது சிற்றுண்டியாக எடுத்து வரலாம். இதை ஒரு முறை செய்து வாரம் முழுவதும் சாப்பிட்டு வரலாம். இந்த சாலட்டை எளிதாக செய்ய முடியும். இதில் கருப்பு பீன்ஸ், வெள்ளரிக்காய், சிவப்பு வெங்காயம் போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டு செய்யப்படுகிறது. இதில் புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் காணப்படுகிறது.
பார்ஸ்லி, ஆப்ரிகாட் மற்றும் பாதாம் பருப்பு சாலட்
இந்த பார்ஸ்லி, ஆப்ரிகாட் சாலட் சுவையாகவும், சிறந்த ஆரோக்கியத்தையும் தரக் கூடியது. இது சாப்பிடுவதற்கு மொறு மொறுப்பாக இருக்கும். இதை குளிர் சாதனப் பெட்டியில் வைத்து பரிமாறலாம். இதில் மொறு மொறுப்பான பாதாம் பருப்பு, பார்ஸ்லி, ஆப்ரிகாட் போன்ற பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இதில் நிறைய புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகளவில் காணப்படுகிறது.
வறுத்த காலிஃபிளவர் மற்றும் திணை சாலட்
இந்த வறுத்த காலிஃபிளவர் மற்றும் திணை சாலட்டை ஃபிரிட்ஜில் வைத்து பல நாட்கள் பயன்படுத்தலாம். இது மதிய உணவிற்கு உதவுகிறது. இதில் காலிஃபிளவர், வெங்காயம், திணை மற்றும் உலர்ந்த க்ரான்பெர்ரி போன்ற பொருட்கள் சேர்த்து செய்யப்படுகிறது. இதில் புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் காணப்படுகிறது.
ஸ்வீட் க்ரஞ்ச் விண்டர் சாலட்
இந்த சாலட் வகை குளிர்கால காய்கறிகள் கொண்டு செய்யப்படுகிறது. இதில் முட்டைக்கோஸ், கேரட் மற்றும் ப்ராக்கோலி போன்ற குளிர்கால காய்கறிகளைக் கொண்டு இந்த சாலட் செய்யப்படுகிறது. இதில் சோடியம், புரோட்டீன், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்துக்கள் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது.
சூப்பர் ப்ரஷ்ஷான வெள்ளரிக்காய் தக்காளி சாலட்
இந்த சாலட் குளிர்ச்சியான மற்றும் மொறு மொறுப்பான சாலட் வகையாகும். இதில் ரெட் ஒயின் மற்றும் ஆர்கனோ வினிகர் சேர்க்கப்படுகிறது. இதில் வெள்ளரிக்காய், சிவப்பு வெங்காயம், பார்ஸ்லி போன்ற பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இது பிரிட்ஜில் சில நாட்கள் வைத்திருந்து சாப்பிடலாம். இதில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகளவில் காணப்படுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications