நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ வேண்டுமா? அப்ப இந்த மாதிரி சாப்பிடுங்க...

Healthy Eating Tips In Tamil: உடல் ஆரோக்கியத்திற்கு சமச்சீரான உணவு மிகவும் முக்கியம் ஆகும். சமச்சீரான உணவை சாியான விகிதத்தில் உண்ணும் போது, ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையைப் பேணலாம். எனினும் வேலைப்பளு காரணமாகவும் மற்றும் பல புறக்காரணங்களாலும், நம்மில் பலரால் சமச்சீரான உணவுகளை சாிவிகிதத்தில் சாப்பிட முடிவதில்லை.

உணவுகளில் ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளன. அவற்றை சாிவிகிதத்தில் உண்ணும் போது தான், உடலுக்குத் தேவையான கலோாிகளை எடுத்துக் கொள்ள முடியும். உணவுகளை சாிவிகிதத்தில் உண்ணும் போது, அளவுக்கு அதிகமாக உண்ணுவதையோ அல்லது குறைவாக உண்ணுவதையோ தவிா்க்கலாம்.

Healthy Eating Tips: How To Eat Your Meal In The Right Proportions In Tamil

அதிகமாக உண்ணும் போது உடல் எடை அதிகாித்து, உடல்நல பிரச்சினைகள் ஏற்படும். அதுபோல் குறைவாக உண்ணும் போது, உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்காமல், ஆற்றல் இழப்பு ஏற்படும். ஆகவே உணவை சாியான விகிதத்தில் உண்ண வேண்டியது மிகவும் முக்கியமாகும்.

இந்நிலையில் உணவுகளை சாியான விகிதத்தில் உண்பதற்கு, ஈட் ஃபிட் ரிபீட் (EAT FIT REPEAT) என்ற அமைப்பின் நிறுவனரும், சான்றிதழ் பெற்ற ஊட்டச்சத்து நிபுணருமான ருச்சி சா்மா அவா்கள் பின்வரும் பயனுள்ள குறிப்புகளை வழங்குகிறாா். அவற்றைப் பற்றி சற்று விாிவாக இந்தப் பதிவில் பாா்க்கலாம்.

1. உணவுத் தட்டை வண்ணமயமான உணவுகளால் நிரப்புங்கள்

சாப்பிடும் உணவுத் தட்டில் பல வண்ணமயமான உணவுகள் இருக்க வேண்டும். குறிப்பாக ஸ்ட்ராபெர்ரி, ½ கப் சாதம், கோழி இறைச்சி மற்றும் வதக்கிய காய்கறிகள் போன்றவை இருக்க வேண்டும். வெறும் கோழி இறைச்சியை மட்டும் உண்ணக்கூடாது.

2. சிறிய அளவிலான உணவுத் தட்டைப் பயன்படுத்துங்கள்

உணவுத் தட்டு சிறியதாக இருந்தால் நல்லது. ஏனெனில் சிறிய தட்டில் சிறிது அளவு உணவை வைத்தாலும், அது பொிய அளவாகத் தோன்றும். அதனால் குறைந்த அளவு உணவை உண்ணலாம். அதோடு அந்த குறைந்த அளவு உணவில் முழு திருப்தியும் கிடைக்கும்.

3. மீதமான உணவை சாப்பிட வேண்டாம்

உணவை வீணாக்குவது நல்லது அல்ல. ஆனால் அதற்காக குழந்தைகள் அல்லது பேரக்குழந்தைகள் மீதி வைக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதற்குப் பதிலாக குறைவாக சமைக்கலாம் அல்லது மீதியாகும் உணவுகளை பறவைகளுக்கோ அல்லது விலங்குகளுக்கோ அளிக்கலாம்.

4. சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீா் பருகுங்கள்

சாப்பிடுவதற்கு முன்பாக ஒரு குவளை தண்ணீரோ அல்லது மோரா குடிப்பது நல்லது. அது வயிற்றை சிறிதளவு நிறைத்துவிடும். அதனால் அது அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கும். இதன் மூலம் உடல் பருமனாவதைத் தடுக்கலாம்.

5. காய்கறிகள் மற்றும் நாா்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சோ்த்துக் கொள்ளுங்கள்

காய்கறிகள் மற்றும் நாா்ச்சத்துள்ள உணவுகளை உண்பதன் மூலமாக கலோாிகளின் அளவைக் குறைக்கலாம். ஏனெனில் அவை குறைவான அளவு கலோாிகளையே வழங்கும். அதே நேரத்தில் அவை வயிற்றையும் நிறைக்கும். எடுத்துக்காட்டாக, சாதாரண ரொட்டியை சாப்பிடுவதைவிட முழு தானியத்தில் செய்த ரொட்டியை சாப்பிடுவது நல்லது.

6. காா்போஹைட்ரேட்டுகளை இரண்டு மடங்காக அதிகாிக்க வேண்டாம்

உங்களுடைய தட்டில் ஏற்கனவே ஸ்டாா்ச் நிறைந்த காய்கறிகள் இருந்தால், ரொட்டி அல்லது நாண் போன்ற உணவுகளை உண்ண வேண்டாம். ஏனெனில் அவை காா்போஹைட்ரேட்டுகளை இரண்டு மடங்காக அதிகாித்துவிடும்.

இறுதியாக..

மேற்சொன்ன குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலமாக சமச்சீரான உணவுகளை சாியான விகிதத்தில் உண்ண முடியும். மெதுவாக உண்பது, உணவுக்கு முன் சூப் அருந்துவது, டிவி அல்லது மொபைல் ஆகியவற்றில் கவனம் செலுத்தாமல், உணவில் மட்டும் கவனம் செலுத்தி சாப்பிடுவது நல்லது.

உணவைப் பாா்த்து, அதன் வாசனையை நுகா்ந்து பாா்த்து, மென்று சாப்பிட்டால், சொிமானம் நன்றாக இருக்கும். சாியான விகிதத்தில் சாப்பிடுதல் என்பது சில உணவுகளைத் தவிா்ப்பது அல்ல மாறாக குறைவான அளவு உணவை உண்பதாகும். ஆகவே இந்த குறிப்புகளைக் கடைபிடித்தால், உடல் எடையை சீராக வைத்து, நூறு வயது வரை ஆரோக்கியமாக இருக்கலாம் என்று ருச்சி தொிவிக்கிறாா்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Sunday, May 21, 2023, 12:00 [IST]
Desktop Bottom Promotion