Latest Updates
-
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?
தினமும் இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் பாலில் 1 ஸ்பூன் தேன் கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள்!
Health Tips In Tamil: உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஒருசில பழக்கங்களை தினசரி வழக்கமாக கொள்வது நல்லது. அப்படிப்பட்ட ஒரு நல்ல பழக்கம் தான் இரவு தூங்கும் முன் பால் குடிப்பது.
ஆனால் அப்படி குடிக்கும் பாலுடன் ஒருசில பொருட்களை சேர்த்துக் குடிக்கும் போது, அந்த பால் இருமடங்கு நன்மைகளை உடலுக்கு வழங்கும். நிறைய பேருக்கு பாலுடன் தேனை கலந்து குடிக்கும் பழக்கம் இருக்கும். அப்படி குடிப்பதால் நல்ல தூக்கம் கிடைக்கும் என்பதை அனைவரும் அறிவோம்.

ஆனால் தேனுடன் பாலை கலந்து குடிக்கும் போது உடலினுள் இன்னும் ஏராளமான மாற்றங்கள் நிகழும் என்பது தெரியுமா? கீழே தினமும் இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் தேன் கலந்த பாலைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
1. சருமத்திற்கு நல்லது
நீங்கள் உங்கள் சரும அழகை மேம்படுத்த நினைக்கிறீர்களா? அப்படியானால் தினமும் இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் தேன் கலந்த பாலைக் குடியுங்கள். இது இரத்தத்தை சுத்தம் செய்ய உதவி புரிகிறது. இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பொருட்களின் அளவு குறைந்து, சருமம் பொலிவோடும், ஆரோக்கியமாகவும் காணப்படுகிறது.
2. செரிமானம் மேம்படும்
உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் உள்ளதா? அடிக்கடி செரிமான பிரச்சனையால் அவதிப்படுவீர்களா? அப்படியானால் தேன் கலந்த பாலை தினமும் குடியுங்கள். இதனால் தேனில் உள்ள ஆன்டி வைரல் பண்புகள் குடலில் உள்ள தொற்றுக்களை தடுப்பதோடு, வயிற்று பிரச்சகைளையும் தடுக்க உதவுகிறது. மேலும் தேன் கலந்த பாலை தினமும் குடிக்கும் போது, அது வயிற்றில் தேவையில்லாத பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும். இதன் விளைவாக செரிமானம் பிரச்சனைகளை தடுக்கப்படும்.
3. உடல் ஆற்றலுடன் இருக்கும்
தினமும் இரவு தூங்கும் முன் தேன் கலந்த பாலைக் குடிக்கும் போது, உடலுக்கு புரோட்டீன் மற்றும் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் கிடைக்கும். இதன் விளைவாக உடலின் மெட்டபாலிசம் மேம்படும். அதுவும் இந்த பாலை இரவு மட்டுமின்றி, காலையிலும் குடித்து வந்தால், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்படலாம். ஏனெனில் தேனில் க்ளுக்கோஸ் அதிகமாக இருப்பதால், இது உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது.
4. எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்
பாலில் கால்சியம் அதிகம் உள்ளன. அதே சமயம் தேனில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலால் எளிதில் உறிஞ்ச உதவுகின்றன. ஆய்வுகளில், பாலில் தேன் கலந்து குடிப்பது, கால்சியம் உறிஞ்சுதலை அதிகரிப்பது தெரிய வந்துள்ளது. கால்சியமானது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. ஆகவே உங்களுக்கு எலும்பு தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடாதெனில் தேன் கலந்த பாலை தினமும் குடியுங்கள்.
5. நோயெதிர்ப்பு சக்தி வலுபெறும்
பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டிருந்தால், அடிக்கடி நோய்வாய்ப்படக்கூடும். தேனில் ஆன்டி மைக்ரோபியல், ஆன்டிபயாடிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. ஆய்வுகளில் தேனானது பல வகையான தொற்றுக்களை தடுக்க உதவுவது தெரிய வந்துள்ளது. அப்படிப்பட்ட தேனை பாலுடன் சேர்த்து தினமும் குடித்து வந்தால், நோயெதிர்ப்பு சக்தி வலுபெற்று, சளி, இருமல் மற்றும் பிற சுவாச பிரச்சனைகள் தடுக்கப்படும்.
6. நல்ல தூக்கம் வரும்
இரவு நேரத்தில் தூக்கம் வருவதில்லையா? நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற வேண்டுமா? அப்படியானால் தினமும் இரவு தூங்கும் முன் பாலில் தேன் கலந்து குடியுங்கள். இதனால் அதில் உள்ள சத்துக்கள் செரடோனின் என்னும் நல்ல மனநிலையைப் பெற வைக்கும் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து, மனதை ரிலாக்ஸாக்கி, இரவு நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவி புரியும்.
7. முதுமையை தடுக்கும்
நீங்கள் நீண்ட காலம் இளமையாக காட்சியளிக்க வேண்டுமா? அப்படியானால் தினமும் இரவு பாலில் தேன் கலந்து குடியுங்கள். இப்படி செய்வதன் மூலம், சருமம் விரைவில் முதுமைத் தோற்றத்தைப் பெறுவதைத் தடுக்கிறது. குறிப்பாக இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ப்ரீ ராடிக்கல்களால் சரும செல்களில் ஏற்படும் சேதத்தைத் தடுக்கிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











