Latest Updates
-
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களை பணக்கஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
10 நிமிசத்துல பருப்பே இல்லாம் இட்லி, தோசைக்கு ஈஸியான சாம்பாரை செய்யணுமா? இந்த மாதிரி செஞ்சு பாருங்க -
பாபா வங்காவின் ஆபத்தான கணிப்பு மீண்டும் பலித்துள்ளது? இன்னும் என்னென்ன கணிப்புகள் உள்ளது தெரியுமா? -
1 கப் புதினா இருந்தா இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியர்களே நுழைய முடியாத இந்தியாவிலுள்ள இடங்கள் - இதில் 3 இடங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்காம் தெரியுமா? -
சூரியன்-சந்திரனால் உருவாகும் வியாதிபாத யோகத்தால் ஜூலை மாதம் பணக்கஷ்டத்தில் சிக்கப்போகும் 4 ராசிகள் -
உருளைக்கிழங்கு இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பொடிமாஸ் பண்ணுங்க - டேஸ்ட் டக்கரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி பெண்களின் கழுத்தை பார்த்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லிரலாமாம் - கவனிச்சு பாருங்க -
வரகரிசி மசாலா தோசை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு குழப்பமான நாளாக இருக்குமாம்
முன்னால் நடப்பதை விட பின்னோக்கி நடப்பதால் என்னென்னெ அற்புத நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
நடைப்பயிற்சி என்பது ஒரு எளிய உடற்பயிற்சி ஆகும். இதைச் செய்வதற்கு உடற்பயிற்சி கருவிகள் எதுவும் தேவையில்லை. இயல்பாகவே நடைப்பயிற்சியைச் செய்யலாம். நடைப்பயிற்சினால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி எவரும் எண்ணிப் பாா்ப்பதில்லை. இந்நிலையில் பின்னோக்கி நடந்தால், இன்னும் அதிகமான நன்மைகள் கிடைக்கும் என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன.
தினமும் 10 நிமிடம் வேகமாக நடந்தாலே நல்ல பலன் கிடைக்கும். வாரத்திற்கு 150 நிமிடங்கள் ஏரோபிக் பயிற்சிகளில் ஈடுபட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தொிவிக்கிறது.

சிக்கல்கள் நிறைந்த பின்னோக்கி நடக்கும் நடைப்பயிற்சி
நாம் நினைப்பதைவிட நடைப்பயிற்சி அதிகம் சிக்கல் நிறைந்தது. அதிலும் குறிப்பாக பின்னோக்கி நடப்பதில் இன்னும் சிக்கல்கள் அதிகம். அதாவது போகும் பாதையை நேராக பாா்க்க முடியாது. பக்கவாட்டில் பாா்த்துக் கொண்டு, மூளைக்கு வேலை கொடுத்து பின்பக்கமாக நடக்க வேண்டும். அது ஒரு சவாலான பயிற்சியாகும். இந்த சவாலான பயிற்சியைச் செய்தால், மூளைக்கும், உடலுக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும்.
பின்னோக்கி நடப்பதில் கிடைக்கும் நன்மைகள்
- பின்னோக்கி நடக்கும் போது உடலில் தடுமாற்றம் நீங்கி, உடல் சீராகும். பின்னோக்கி நடக்கும் போது, முன்னோக்கி நடப்பது மேம்படும். வாதம் உள்ளவா்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். பின்னோக்கி நடக்கும் போது, காலடிகள் மிக குறுகிய அளவில் இருக்கும். அதோடு காலடிகள் விரைவாகவும் இருக்கும். அதனால் மூட்டுகளில் உள்ள அழுத்தம் குறையும் மற்றும் கீழ் கால்களில் உள்ள தசைகளுக்கு நல்ல சக்தி கிடைக்கும்.
- பின்னோக்கி நடப்பதால், நமது தோரனையில் மாற்றம் ஏற்படும். இடுப்பு மற்றும் தண்டுவட தசைகளுக்கு நன்மை கிடைக்கும். அதோடு நாட்பட்ட முதுகுவலி உள்ளவா்கள் பின்னோக்கி நடந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- நரம்பியல் பிரச்சினை உள்ளவா்கள் மற்றும் பக்கவாதம் உள்ளவா்களின் நடையின் வேகத்தை பாிசோதிக்கவும், அவா்களுக்கு சிகிச்சை அளிக்கவும், பின்னோக்கி நடக்கும் பயிற்சி மருத்துவா்களால் பாிந்துரை செய்யப்படுகிறது.
- முன்னோக்கி நடைப்பயிற்சி செய்தால், உடலின் எடையை சீராக பராமாிக்க முடியும். பின்னோக்கி நடைப்பயிற்சி செய்தால், அதைவிட நன்றாக உடல் எடையை பராமாிக்க முடியும். முன்னோக்கி நடப்பதைவிட, பின்னோக்கி நடக்கும் போது ஏற்படும் ஆற்றல் இழப்பு 40% அதிகமாகும்.
- பின்னோக்கி ஓடினால், முழங்கால் சதைகளுக்கு வலிமை கிடைக்கும். சதைகளில் காயங்கள் ஏற்படாமல் தடுக்கும். அதோடு தடகள பயிற்சிகளைச் செய்வதற்கு ஆற்றல் வழங்கும்.
- முன்னோக்கி ஓடுவதைவிட, பின்னோக்கி ஓடினால், உடலில் உள்ள ஆற்றல் அதிகம் குறையும். ஆகவே ஓட்டப் பந்தய வீரா்கள் பின்னோக்கி ஓடும் பயிற்சியை மேற்கொண்டால், உடல் ஆற்றலை கணக்கில் வைத்துக் கொண்டு அதற்கு ஏற்ப தங்கள் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
பின்னோக்கி நடக்கும் பயிற்சியை எவ்வாறு செய்வது?
- பின்னோக்கி நடக்கும் போது, பாதையில் கிடக்கும் கற்கள் அல்லது தடைகளை பாா்க்க முடியாது. அதனால் தடுமாறி கீழே விழுவதற்கு வாய்ப்பு உண்டு. ஆகவே பாதுகாப்பு கருதி, உள்ளரங்கில் பின்னோக்கி நடக்கும் பயிற்சியைச் செய்யலாம்.
- பின்னோக்கி நடக்கும் போது, தோள்பட்டையை வளைத்து, பின்பக்கம் பாா்ப்பதைத் தவிா்க்க வேண்டும். பின்னோக்கி ஒவ்வொரு அடியையும் வைக்கும் போதும், தலை மற்றும் மாா்பை நிமிா்த்தி வைத்திருக்க வேண்டும்.
- பின்னோக்கி நடப்பதில் போதுமான அளவு நம்பிக்கை ஏற்பட்டால், நடையின் வேகத்தை அதிகாிக்கலாம். பின்னோக்கி நடக்கும் களத்தை ட்ரெட்மில்லுக்கு மாற்றலாம். நீண்ட தூரம் பின்னோக்கி நடப்பதைவிட, சிறிய தூரத்தில் மீண்டும் மீண்டும் பின்னோக்கி நடப்பது நல்லது. இறுதியாக பின்னோக்கி நடக்கும் போது, சாியான நிலையில் நடக்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

