Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
வஜ்ராசனம் செய்வது எப்படி? அதன் நன்மைகள் என்ன? யாரெல்லாம் செய்யக்கூடாது?
Vajrasana Benefits: உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு வகையான உடற்பயிற்சி தான் யோகா. இந்த யோகாவில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு யோகாசனமும் உடலுக்கு ஒவ்வொருவிதமான நன்மைகளை வழங்கும்.
அதில் மிகவும் எளிமையான மற்றும் அனைவருமே செய்யக்கூடிய ஒரு யோகாசனம் தான் வஜ்ராசனம். இந்த வஜ்ராசனம் உடலை வைரம் போன்று வலுவாக்கும். முக்கியமாக இது தியானம் செய்வதற்கு ஏற்ற ஆசனம்.

வஜ்ராசனமானது வயிறு தொடர்பான பிரச்சனைகளை போக்குவதில் சிறந்தது. முக்கியமாக இந்த ஆசனத்தை உணவு உண்டதும் கூட செய்யலாம். இந்த ஆசனத்தை எந்த வயதினரும் செய்யலாம். வஜ்ராசனத்தை தினமும் ஒருவர் செய்து வந்தால், அது உடலுக்கும், மனதுக்கும் பலவிதமான நன்மைகளை வழங்குகிறது. இப்போது வஜ்ராசனம் செய்வதால் பெறும் நன்மைகளையும், அதை எப்படி செய்வது மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பன போன்றவற்றைக் காணலாம்.
வஜ்ராசனம் செய்யும் முறை:
* முதலில் தரையில் இரண்டு கால்களையும் நீட்டி நேராக உட்கார வேண்டும்.
* பின் வலது குதிகாலை வலப் பிட்டத்தின் அடியில் மடித்து வைக்க வேண்டும்.
* பின்பு இடது குதிகாலை இடப் பிட்டத்தின் அடியில் மடித்து வைக்க வேண்டும்.
* இந்நிலையில் முழுங்கால்கள் இரண்டும் இணைந்து இருக்க வேண்டும். உள்ளங்கைகள் இரண்டும் முழங்கால்கள் மீது வைக்க வேண்டும்.
* பின் மெதுவாக 4 வரை எண்ணிக் கொண்டே மூச்சை உள்ளிழுத்து, பின் 8 வரை எண்ணிக் கொண்டே மெதுவாக மூச்சை வெளிவிட வேண்டும்.
* பின்பு மெதுவாக ஒவ்வொரு கால்களை நீட்டி, பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.
இந்த ஆசனத்தை முதலில் 3-4 நிமிடங்கள் செய்ய வேண்டும். பின் போக போக மெதுவாக 5-7 நிமிடங்கள் வரை அதிகரித்து செய்யலாம்.
வஜ்ராசனத்தை எப்போது செய்ய வேண்டும்?
வஜ்ராசனத்தை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றிலும் செய்யலாம். இல்லாவிட்டால் மதியம் அல்லது இரவு உணவு உண்ட பின்னரும் செய்யலாம். இதுவெல்லாம் ஒருவரது வலிமை மற்றும் சௌகரியத்தைப் பொறுத்தது.
வஜ்ராசனத்தின் நன்மைகள்
வஜ்ராசனம் செய்வதால் பின்வரும் நன்மைகள் கிடைக்கும். அவை:
* உடலில் இரத்த ஓட்டம் மேம்படும்.
* தோரணையை மேம்படுத்தும்.
* அஜீரண கோளாறு, வாய்வு தொல்லையில் இருந்து விடுவிக்கும். செரிமானம் மேம்படும்
* கீழ் முது வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
* இடுப்பு பகுதியில் உள்ள தசைகள் வலுவாகும்.
* மனம் அமைதியடையும்.
* நல்ல தூக்கம் கிடைக்கும்.
* எடை இழப்பிற்கு உதவும்.
* பாலியல் உறுப்புகள் வலுவடையும்.
* மாதவிடாய் வலியைக் குறைக்க உதவும்.
யாரெல்லாம் வஜ்ராசனத்தை செய்யக்கூடாது?
* மூட்டு வலி உள்ளவர்கள் அல்லது சமீபத்தில் மூட்டு அறுவை சிகிச்சை செய்தவர்கள் வஜ்ராசனத்தை செய்யக்கூடாது.
* கர்ப்பிணிகள் வஜ்ராசனத்தை செய்யலாம். ஆனால் முழங்கால்களுக்கு இடையே இடைவெளியை விட்டு செய்ய வேண்டும். மேலும் அளவுக்கு அதிகமாக அடிவயிற்றில் அழுத்தத்தைக் கொடுக்கக்கூடாது.
* ஹெர்னியா மற்றும் குடல் தொடர்பான பிரச்சனைகளை கொண்டவர்கள் நிபுணத்துவம் பெற்றவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மட்டுமே செய்ய வேண்டும்.
* முதுகு தண்டுவட பிரச்சனையைக் கொண்டவர்கள் வஜ்ராசனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
* கடுமையான ஆர்த்ரிடிஸ் பிரச்சனையைக் கொண்டவர்கள் வஜ்ராசனத்தை செய்யக்கூடாது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications