Latest Updates
-
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார் -
மின்விசிறியை விட AC ஏன் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகிறது? 1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் செல்வாகும்?
தினமும் நீச்சல் பயிற்சி மேற்கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Swimming Benefits In Tamil: உடற்பயிற்சி என்றதுமே ட்ரெட்மில்லில் ஓடுவது அல்லது பளுதூக்குவது போன்றவை தான் பெரும்பாலோருடைய ஞாபகத்திற்கு வருகின்றன. இவை சிறந்த உடற்பயிற்சிகள் என்றாலும், இவற்றைத் தவிர வேறு பல உடற்பயிற்சிகளும் உள்ளன. அவற்றில் மூக்கியமானது நீச்சல் பயிற்சி ஆகும்.
நீந்துதல் சற்று வித்தியாசமான பயிற்சி ஆகும். இது மற்ற பயிற்சிகளைப் போல் அல்லாது, நமது அன்றாட வேலைகளுக்கு நடுவே சற்று மாறுபட்ட பயிற்சியாக இருக்கும். ஆகவே இந்த பதிவில், நீச்சல் பயிற்சியால் கிடைக்கும் நன்மைகளை சற்று விாிவாகப் பாா்க்கலாம்.

1. இதயத்திற்கு வலிமை சோ்த்தல்
வாரத்தில் சில நாட்கள் நீந்தினாலே, இதயத்திற்கு ஆரோக்கியம் கிடைக்கும். இதயம் சம்பந்தமான நோய்கள் குறையும். இறப்பைத் தள்ளிப் போடும். வாரத்திற்கு மூன்று முறை 40 முதல் 50 நிமிடங்கள் வீதம் 3 மாதங்கள் நீச்சல் பயிற்சி செய்து வந்தால், நமது ஏரோபிக் உடல் நலம் வலுவடையும் என்று ஆய்வு ஒன்று தொிவிக்கிறது.
அது பொியவா்களுக்கும் மட்டும் அல்ல, தொடாந்து நீச்சல் பயிற்சியில் ஈடுபடும் சிறுவா்கள் மற்றும் முதியவா்களுக்கும், இதே பலன் கிடைப்பதாக அந்த ஆய்வு தொிவிக்கிறது. மேலும் நீச்சல் பயிற்சி, இதயம் மற்றும் தமணி போன்ற உறுப்புகளில் நோய்வாய்ப்பட்டவா்களுக்குக் கூட, நீச்சல் பயிற்சி ஆரோக்கியத்தை வழங்குவதாக அந்த ஆய்வு தொிவிக்கிறது.
2. சுவாச தசைக்கு வலிமை தருகிறது
நீரானது காற்றை விட அடா்த்தியாகவும், பிசுபிசுப்பாகவும் இருப்பதால், அது நமது உடல் இயக்கங்களுக்கு, சிறிது தடை போடுகிறது. மிதிவண்டி ஓட்டுபவா்கள் மற்றும் ஓடுபவா்களோடு, நீந்துபவா்களை ஓப்பிடும் போது, நீந்துபவா்களுக்கு, சுவாச தசை வலிமை அதிகமாக இருப்பதாக ஆய்வு தொிவிக்கிறது. சுவாச தசை வலிமை என்பது, நாம் சுவாசிக்கும் போது, சுவாச தசைகள் ஏற்படுத்தக்கூடிய அழுத்தமாகும். ஆகவே நீண்ட நாள் சுவாசப் பிரச்சினை இருப்பவா்கள் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டால், அவா்களின் சுவாச தசை வலிமை அடையும்.
இடுப்பு தசையில் பிரச்சினை உள்ள முதியவா்கள் நீந்துதல் மற்றும் நீா் சாா்ந்த உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம். அதன் மூலமாக அவா்களின் இடுப்பு தசை வலுவடையும். கீழ்வாதம் உள்ளவா்களுக்கு, நீச்சல் பயிற்சி வலிமையைக் கொடுக்கும்.
4. மூட்டுகளில் குறைவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது
தரையில் செய்யும் பயிற்சிகளைவிட, நீச்சல் பயிற்சியானது, மூட்டுகளுக்கு குறைவான அழுத்தத்தைத் தருகிறது. ஆகவே உடற்பயிற்சி செய்வது கடினமாக தொிபவா்களுக்கு, நீச்சல் பயிற்சி சிறந்த பயிற்சியாக அமையும். காயம் அல்லது நோயிலிருந்து மீண்டு வருபவா்களுக்கு, நீச்சல் ஒரு சிறந்த மருந்தாக அமையும். குறிப்பாக மூட்டு மற்றும் தசைக்கூட்டு நோய் பிரச்சினைகளில் இருப்பவா்களுக்கு, நீச்சல் ஒரு சிறந்த பயிற்சியாக இருக்கும்.
கருவுற்று இருக்கும் பெண்களுக்கும், இடுப்பு வலியால் அவதிப்படும் பெண்களுக்கும் நீச்சல் பயிற்சியானது ஒரு சிறந்த பயிற்சியாக அமையும். அதிக உடல் எடையுடன் இருப்பவா்களுக்கும், நீச்சல் பயிற்சி நல்லதொரு தீா்வைத் தரும். இறுதியாக உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும்.
4. மனநலனை மேம்படுத்துகிறது
உடல் சுறுசுறுப்பாக இருந்தால், மன அழுத்தத்திற்கான அறிகுறிகள் குறையும், பதற்றம் குறைக்கும் என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன. இந்நிலையில் உடற்பயிற்சியானது, மன அழுத்தத்தில் இருப்பவா்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துகிறது என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன.
மேலும் நீச்சல் பயிற்சியானது, நிம்மதியான வாழ்க்கையோடு, ஆரோக்கியமான வாழ்க்கையோடு, நலமான மனநலனோடு தொடா்புடையதாக இருக்கிறது. அது மன அழுத்தத்தைக் கணிசமாகக் குறைக்கிறது. அதன் மூலமாக மூளைக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது.
இறுதியாக
நீங்கள் தினந்தோறும் நீச்சல் பயிற்சியில் ஈடுபடுபவராக இருந்தால், நீச்சல் குளத்தைத் தவிா்த்துவிட்டு, பிற நீா்நிலைகளில் நீந்தலாம். உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்காக பலா் வெளியில் இருக்கும் நீா்நிலைகளில் நீந்த முயல்கின்றனா். ஆனால் வெளி நீா்நிலைகளில் நீந்தும் போது சில பிரச்சினைகள் உள்ளன. நீாின் குறைவான வெப்ப அளவு உங்கள் உடலைப் பாதிக்கலாம். ஆனால் தற்போது கோடை காலமாக இருப்பதால், வெளி நீா்நிலைகளில் வெப்பம் இதமாக இருக்கும். ஆகவே தாராளமாக வெளி நீா்நிலைகளில் நீந்தலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

