Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
நவாசனம் செய்வது எப்படி? அதன் நன்மைகள் என்ன? யாரெல்லாம் செய்யக்கூடாது?
Navasana Benefits: ஒருவரது ஆரோக்கியமானது அவரது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பொறுத்தது. இவ்விரண்டும் ஆரோக்கியமாக இருந்தால், உடல் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம். இந்த இரண்டையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள யோகாசனங்கள் பெரிதும் உதவி புரிகின்றன. நாம் தினமும் ஒரு யோகாசனம் குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் காணவிருப்பது நவாசனம் பற்றி தான்.
சமஸ்கிருதத்தில் நவ என்றால் படகு, ஆசனம் என்றால் நிலை என்று பொருள். படகு போன்ற நிலையைக் கொண்டிருப்பதால், இந்த ஆசனம் நவாசனம் என்று அழைக்கப்படுகிறது. நவாசனத்தை ஒருவர் தினமும் செய்து வந்தால், அது உடலின் சமநிலையைப் பராமரிக்க உதவும். இடுப்பு மூட்டு, கால்கள் போன்றவற்றை வலுவாக்குவதோடு, நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது.

இதுப்போன்று பல நன்மைகள் நவாசனம் வழங்குகிறது. இப்போது நவாசனம் செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும், நவாசனத்தை செய்வது எப்படி, யாரெல்லாம் நவாசனம் செய்யக்கூடாது என்பன போன்றவற்றை விரிவாக காண்போம்.
நவாசனம் செய்முறை
* முதலில் தரையில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் கைகள் இரண்டையும் பக்கவாட்டில் உடலை ஒட்டியவாறு வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மெதுவாக இரண்டு கால்களையும் மேலே உயர்த்த வேண்டும்.
* பிறகு தலை, மார்பு, கை மற்றும் முதுகுப் பகுதிகளை மெதுவாக மேலே உயர்த்த வேண்டும்.
* இரண்டு கைகளையும் முட்டிக்கு மேலே இணையாக நீட்ட வேண்டும். இப்போது உடலானது படகு நிலையில் இருக்கும்.
* இந்த நிலையில் 5-10 நொடிகள் இயல்பான மூச்சுக்களை விட்ட பின், பழைய நிலைக்கு மெதுவாக திரும்ப வேண்டும்.
* இப்படி மூன்று முறை இந்த ஆசனத்தை செய்ய வேண்டும்.
நவாசனம் செய்வதால் பெறும் நன்மைகள்
நவாசனத்தை தினமும் செய்து வந்தால் பின்வரும் நன்மைகளைப் பெறலாம். அவையாவன:
* தொடை மற்றும் முழங்கால்கள் வலுவடையும்.
* செரிமானம் மேம்படும்.
* குடல்கள், தைராய்டு, சிறுநீரகங்களின் செயல்பாடுகள் தூண்டப்படும்.
* ஹார்மோன்கள் சமநிலையில் இருக்கும்.
* மன அழுத்தம் மற்றும் பதட்டத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
* கல்லீரலின் செயல்பாடு மேம்படும்.
* உடல் சோர்வு குறையும்.
* உடலில் இரத்த ஓட்டம் மேம்படும்.
* தொப்பை குறையும்.
யாரெல்லாம் நவாசனத்தை செய்யக்கூடாது?
என்ன தான் நவாசனம் பார்க்க ஒரு எளிமையான ஆசனமாக தெரிந்தாலும், அதை செய்தால் தான் அதன் கஷ்டம் தெரியும். மேலும் இந்த ஆசனத்தை ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள் செய்யக்கூடாது.
* நவாசனத்தை கழுத்து அல்லது முதுகு பகுதிகளில் காயங்களைக் கொண்டவர்கள் செய்யகூடாது.
* இதய பிரச்சனைகளைக் கொண்டவர்கள் இந்த நவாசனத்தை செய்யக்கூடாது.
* கர்ப்பிணிப் பெண்கள் அல்லது மாதவிடாய் காலத்திலும் பெண்கள் நவாசனத்தை செய்யக்கூடாது.
* வயிற்றுப் போக்கு, தூக்கமின்மை, ஆஸ்துமா மற்றும் தலைவலியைக் கொண்டவர்கள் கூட நவாசனத்தை செய்யக்கூடாது.
* குறைவான இரத்த அழுத்தம் கொண்டவர்கள் நவாசனத்தை செய்யக்கூடாது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications