Latest Updates
-
Aippasi Horoscope 2026: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
காளான் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன்கள் (அக்டோபர் 18-24) - இந்த வாரம் 4 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
கர்நாடகா மட்டன் சாறு ரெசிபி - இந்த மாதிரி மட்டன் குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
100 ஆண்டுகளாக சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடாத வினோத கிராமம் - ஆனா மட்டன் சாப்பிடுவாங்க - காரணம் என்ன தெரியுமா -
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம் -
மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
இந்த இந்திய உணவு பொருட்கள நீங்க பச்சையா சாப்பிட்டா... உங்க உடல் எடை சீக்கிரமா குறையுமாம்...!
நீங்கள் அடிக்கடி நோய்வாய்படுகிறீர்களா? மிகவும் பலவீனமாகவும் சோர்வாகவும் உணர்கிறீர்களா? ஆம் எனில், இந்த இந்திய சூப்பர்ஃபுட்கள் நிச்சயமாக உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவும்.
பெரும்பலான இந்திய உணவுகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. அவை நல்ல சுவையை உங்களுக்கு வழங்குவதுடன் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது. வெளிநாட்டு உணவுகளை காட்டிலும், உள்நாட்டு உணவுகள் அதிக சத்தானவை. பல்துறை உணவாக பயன்படுவதால், அதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் உட்கொள்ளலாம்.

ஆதலால், சில இந்திய உணவுகளை உங்கள் வழக்கமான உணவோடு சேர்த்துக்கொள்ளுங்கள். அந்த உணவுகள் நிச்சயமாக உங்களை ஆரோக்கியமாக வாழ வைக்கும். உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் எடையையும் குறைக்க உதவும். அத்தகைய உணவுகள் என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
நெய்
நிபுணர்களின் கூற்றுப்படி, நெய் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களால் நிரம்பியுள்ளது. தொடர்ந்து நெய்யை உட்கொள்ளும்பொது, அவை கர்ப்பத்தை எளிதாக்குகிறது மற்றும் தைராய்டு செயல்பாட்டை ஆதரிப்பதன் மூலம் ஆரோக்கியமான பிரசவத்தை ஊக்குவிக்கிறது. மேலும், இது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின், வைட்டமின் டி குறைபாட்டை சமாளிக்க உதவுகிறது.
உங்கள் அன்றாட உணவில் நெய்யைச் சேர்ப்பது வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது. மேலும், இது உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது.
கோகம்
கோகம் பழத்தில் வைட்டமின்கள் பி12 மற்றும் டி நிறைந்துள்ளது. கார்சினோல் உடன், கோகம் பாக்டீரியா மற்றும் வீக்கத்தை எதிர்த்துப் போராடுகிறது. இதிலுள்ள ஹைட்ராக்சில் சிட்ரிக் அமிலம் கூடுதல் எடையை குறைக்க உதவுகிறது. அதன் வளர்ச்சியை ஏற்படுத்தும் என்சைம்களைத் தடுப்பதன் மூலம் புற்றுநோய் வளர்ச்சியையும் குறைக்கிறது.
கோகம் உங்கள் சரும ஆரோக்கியத்தை பராமரிப்பதோடு, உங்கள் மெட்டபாலிசத்தையும் அதிகரிக்க உதவுகிறது. வளர்ச்சிதை மாற்றம் அதிகரிப்பதன் மூலம், உங்கள் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
வாழைப்பழம்
வாழைப்பழம் பொட்டாசியம், வைட்டமின் B6 மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட ஒரு சூப்பர்ஃபுட் ஆகும். இது உங்கள் வயிற்றைத் தணிக்கிறது, எலும்புகளை வலுப்படுத்துகிறது மற்றும் வைட்டமின் B6 மற்றும் மெக்னீசியத்துடன் உங்கள் உற்சாகத்தை உயர்த்த உதவுகிறது.
புளிச்சக்கீரை
ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச் சத்துக்கான ஆதாரமாக புளிச்சக்கீரை உள்ளது. பொதுவாக எல்லா கீரைகளிலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், இவை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்குகின்றன. இந்த கீரை சமைக்க எளிதானது. அதேபோல விரைவில் செரிமானம் ஆகிவிடும்.
இது இரும்புச்சத்தை கொண்டிருப்பதால், மலச்சிக்கலின் பக்க விளைவுகள் இல்லாமல் உங்களை பாதுகாக்கிறது. மெதுவாக ஜீரணிக்கக்கூடிய மாவுச்சத்து இவற்றில் அதிகமாக உள்ளதால், குடல் சுற்றுச்சூழல் அமைப்பைத் தக்கவைத்து வளர்ப்பதற்கு ஒரு சிறந்த கீரையாக அமைகிறது. மேலும், இது உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது.
தேங்காய்
தேங்காய் சகிப்புத்தன்மை, மூளை செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை அதிகரிக்கும் நடுத்தர சங்கிலி ட்ரைகிளிசரைடுகளால் (MCT) நிரம்பியுள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, இளநீர் நீரேற்றத்திற்கு நல்லது.
குடல் ஆரோக்கியத்திற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் பழுத்த தேங்காய் நல்லது. பளபளப்பான முடி மற்றும் இதய வலிமைக்கு தேங்காய் எண்ணெய் நல்லது. இளநீர் உங்களை நீரேற்றமாக வைத்திருப்பதோடு, உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது.
அவற்றை எவ்வாறு உட்கொள்வது?
நிபுணர்களின் கூற்றுப்படி, அதிகபட்ச நன்மைகளைப் பெற, இந்த சூப்பர்ஃபுட்களை மூல வடிவத்தில் உட்கொள்வது நல்லது. இருப்பினும், சிறிது சமைப்பது சாப்பிடுவதும் உங்களுக்கு தீங்கு விளைவிக்காது. ஆனால், இந்த உணவுகளை அதிகமாக சமைப்பது அவற்றின் ஊட்டச்சத்து மதிப்புகளை குறைக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

