Latest Updates
-
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்!
Dhanurasana Benefits: தனுராசனம் செய்வது எப்படி? அதன் நன்மைகள் என்ன? யாரெல்லாம் இதை செய்யக்கூடாது?
Dhanurasana Benefits In Tamil: உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் யோகாசனங்களில் தினமும் ஒன்றை குறித்து நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது தனுராசனத்தைப் பற்றி தான். சமஸ்கிருதத்தில் தனு என்பது வில், ஆசனம் என்பது நிலை. வில்லைப் போன்ற நிலையைக் கொண்டிருப்பதால், இந்த ஆசனம் தனுராசனம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஆசனத்தில் உடல் முழுவதையும் நீட்டி, வளைத்து செய்வதால், இது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள நினைப்போருக்கு ஏற்ற ஆசனம். ஆனால் இந்த ஆசனமானது இதுவரை யோகா செய்யாமல் இருப்போர் மற்றும் உடல் வளையாமல் இருப்போருக்கு சற்று கனைமாக இருக்கும். ஆனால் ஆசனங்களிலேயே தனுராசனம் மிகவும் முக்கியமான ஆசனமாகும் இந்த ஆசனத்தை செய்தால், உடல் நன்கு நெகிழ்வுத்தன்மையுடன் இருப்பதோடு, உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும்.

இப்போது இந்த தனுராசனத்தை எப்படி செய்ய வேண்டும், தனுராசனம் செய்வதால் என்னென்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கும் மற்றும் யாரெல்லாம் தனுராசனத்தை செய்யக்கூடாது அல்லது தனுராசனத்தை செய்யும் போது நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் குறித்து விரிவாக காண்போம்.
தனுராசனம் செய்யும் முறை
* தனுராசனம் செய்வதற்கு முதலில் குப்புற படுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் கால்கள் இரண்டையும், முதுகை நோக்கி மடிக்க வேண்டும்.
* பின்பு இரண்டு கைகளால் கணுக்கால்களை பிடிக்க வேண்டும்.
* பிறகு மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு தலை, மார்பு, தொடை ஆகிய பகுதிகளை ஒன்றாக மேலே உயர்த்தி, உடலை வில் போன்று வளைக்க வேண்டும்.
* இந்நிலையில் 20-30 நொடிகள் இருக்க வேண்டும். பின் மெதுவாக மூச்சை வெளிவிட்டு பழைய நிலைக்கு வர வேண்டும்.
* இந்த ஆசனத்தை 3-4 தடவை செய்ய வேண்டும்.
தனுராசனம் செய்வதால் பெறும் நன்மைகள்
தனுராசனத்தை தினமும் செய்து வந்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அந்த நன்மைகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன. அவையாவன:
* இந்த ஆசனம் மார்பு அடிவயிறு, தொண்டை, கணுக்கால் மற்றும் இடுப்பு பகுதிகளை விரிவடையச் செய்கிறது.
* உடலுக்கு நல்ல தோரணையை தருகிறது.
* ஒட்டுமொத்த உடலும் ஸ்ட்ரெட்ச் செய்யப்படுகிறது.
* கீழ் முதுகு, அடிவயிற்று தசைகள் மற்றும் முதுகு போன்ற பகுதிகள் வலுவடைகின்றன.
* ஸ்லிப்-டிஸ்க்குகள் உள்ளவர்களுக்கு நன்மையளிக்கிறது.
* சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரையை சமநிலைப்படுத்துகிறது.
* முதுகுவலியை சரிசெய்கிறது.
* எடை இழப்பிற்கு உதவுகிறது.
* தோள்பட்டை மற்றும் கைகள் வலுவாக்குகிறது.
* இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது.
* அட்ரீனல் சுரப்பியை ஒழுங்குபடுத்தி, மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைக்கிறது.
* சுவாச மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
யாரெல்லாம் தனுராசனத்தை செய்யக்கூடாது?
* தனுராசனத்தை உங்களால் செய்யமுடியாவிட்டால், கஷ்டப்பட்டு செய்யாதீர்கள்.
* இரவு தூங்கும் முன் இந்த ஆசனத்தை செய்யாதீர்கள். இல்லாவிட்டால் இரவு தூக்க பிரச்சனையை சந்திப்பீர்கள்.
* இதய பிரச்சனை உள்ளவர்கள் தனுராசனத்தை செய்யக்கூடாது.
* அதிகமான வலியை அனுபவிப்பவர்கள் இந்த ஆசனத்தை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
* உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்க வேண்டும்.
* கடுமையான முதுகு வலியைக் கொண்டவர்கள் மருத்துவரின் அனுமதி பெறாமல் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.
* இந்த ஆசனத்தை வெறும் வயிற்றில் செய்தால் நற்பலன் கிடைக்கும். சாப்பிட்ட பின்னர் என்றால், 3 மணிநேரம் கழித்து செய்ய வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications