Latest Updates
-
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது.. -
உடல் சூட்டைக் குறைக்கும் வெந்தய களி - இப்படி பாரம்பரிய முறைப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
சூரியன் ரிஷப ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும்
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 1 பௌல் பப்பாளியை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Papaya Benefits In Tamil: நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பழங்கள் பெரிதும் உதவி புரிகின்றன. பழங்களில் பல வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. அதில் ஆண்டு முழுவதும் விலைக் குறைவில் கிடைக்கக்கூடிய ஒரு பழம் தான் பப்பாளி.
இந்த பப்பாளி கண்ணைக் கவரும் நிறத்துடனும், இனிப்புச் சுவையுடன் தனித்துவான ப்ளேவரைக் கொண்டவை. பப்பாளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே, நார்ச்சத்து, பொட்டாசியம், மக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளன. முக்கியமாக இதில் கலோரி மிகவும் குறைவு.

இப்படிப்பட்ட பப்பாளிப் பழத்தை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொண்டால், அதன் மூலம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இப்போது வெறும் வயிற்றில் பப்பாளி பழத்தை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
எடை இழப்பு
நீங்கள் உங்கள் தொப்பையைக் குறைக்க விரும்பினால், பப்பாளியை உங்களின் தினசரி டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் பப்பாளியை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு பௌல் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள குறைவான கலோரி மற்றும் அதிகப்படியான நார்ச்சத்து காரணமாக, அது பசியைக் கட்டுப்படுத்தி, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து, உடல் எடை குறைய உதவும்.
இதயத்திற்கு நல்லது
பப்பாளியில் பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின்கள் போன்றவை அதிகம் உள்ளன. இவை இதயம் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்க உதவி புரியும். அதுவும் இந்த சத்துக்கள் கொலஸ்ட்ரால் அளவை சீராக்கும் மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இதன் விளைவாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறையும். முக்கியமாக பப்பாளியில் சர்க்கரை குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், இது இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
பொலிவான சருமம்
உங்கள் சருமம் நன்கு பொலிவாக இருக்க வேண்டுமா? அப்படியானால் பப்பாளியை தினமும் உட்கொண்டு வாருங்கள். ஏனெனில் பப்பாளியில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இறந்த செல்களை நீக்க உதவுகிறது, சரும சுருக்கங்களைத் தடுக்கிறது மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதுவும் பப்பாளியை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வரும் போது குடல் ஆரோக்கியம் மேம்பட்டு, செரிமானம் சிறப்பாக நடைபெற்று, அதன் விளைவாக சருமத்தின் பொலிவு அதிகரிக்கிறது.
மலச்சிக்கல் நீங்கும்
பப்பாளியை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் முக்கியமான ஒரு நன்மை, குடலியக்கம் சிறப்பாக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும். இதற்கு அதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து தான் காரணம். எனவே நீங்கள் மலச்சிக்கலால் அதிகம் அவதிப்பட்டு வந்தால், பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வாருங்கள். இதனால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
புற்றுநோய் தடுக்கப்படும்
பப்பாளியில் லைகோபைன் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கவும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும, புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. முக்கியமாக பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பப்பாளி பெரிதும் உதவி புரியும். எப்படியெனில், இதில் உள்ள கரோட்டீன் கருப்பையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மாதவிடாய் சுழற்சியை சீராக்கும் மற்றும் மாதவிடாய் பிடிப்புகளைக் குறைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











