Latest Updates
-
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும்
புஜங்காசனம் செய்வது எப்படி? அதன் நன்மைகள் என்ன? யாரெல்லாம் செய்யக்கூடாது?
Bhujangasana Benefits: தற்போது மக்களுக்கு யோகாசனங்களின் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. நிறைய பேர் உடல் ஆரோக்கியத்திற்காக தினமும் யோகாசனங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். யோகாசனங்களில் ஒன்றான புஜங்காசனம் ஒரு எளிமையான மற்றும் சூரிய நமஸ்காரத்தின் 7 ஆவது யோக நிலையாகும். இந்த நிலையானது பாம்பு படமெடுத்து இருப்பது போன்று இருக்கும். சமஸ்கிருதத்தில் புஜங்கா என்றால் பாம்பு என்றும், ஆசனம் என்றால் நிலை என்று பொருள்.
இந்த புஜங்காசனத்தின் போது உடல் முழுவதும் ஸ்ட்ரெட்ச் ஆவதோடு, முதுகு, அடிவயிறு, தோள்பட்டை, மேல் முகுது மற்றும் மார்பு பகுதிகள் அதிகம் வேலை செய்யும். அதாவது புஜங்காசனம் மார்பு, கழுத்து, தோள்பட்டை போன்ற பகுதிகளை விரிவடையச் செய்யும். முக்கியமாக இந்த புஜங்காசனம் செய்வது மிகவும் சுலபம்.

இருப்பினும், இந்த புஜங்காசனத்தை செய்யும் முன், ஒருசில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இப்போது புஜங்காசனத்தை எப்படி செய்வது, அதன் நன்மைகள் என்ன மற்றும் யாரெல்லாம் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது என்பனவற்றைக் காண்போம்.
புஜங்காசனம் செய்யும் முறை
* முதலில் குப்புற படுத்துக் கொள்ள வேண்டும். கால்களை ஒன்றாக இணைத்து வைத்திருக்க வேண்டும்.
* பின் கைகளை மடக்கி, உள்ளங்கைகளை மார்புக்கு அருகில் இரண்டு புறமும் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே தலை, கழுத்து மற்றும் மார்பு பகுதியை மேலே உயர்த்தி, பின்னோக்கி வளைய வேண்டும். இந்நிலையில் அடிவயிறு தரையில் ஒட்டியிருக்க வேண்டும். இந்த நிலையில் 15-20 நொடிகள் இருக்க வேண்டும்.
* பிறகு மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மெதுவாக பழைய நிலைக்கு வர வேண்டும்.
* இப்படி 5 முறை செய்ய வேண்டும்.
புஜங்காசனம் செய்வதால் பெறும் நன்மைகள்:
தினமும் புஜங்காசனம் செய்வதால் பின்வரும் நன்மைகள் கிடைக்கும். அவையாவன:
* முதுகு தசைகளில் உள்ள அசௌகரியத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். முதுகு வலியைக் குறைக்கும்.
* மன அழுத்தம் மற்றும் பதட்டத்தில் இருந்து விடுவிக்கும்.
* முதுகு கூன் ஏற்படாமல் தடுக்கும்.
* மாதவிடாய் கால வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் மற்றும் மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்தும்.
* பிட்டப்பகுதி நல்ல வடிவில் இருக்கும்.
* செரிமானம் சீராகும்.
* உடலில் இரத்த ஓட்டம் மேம்படும்.
* தோள்பட்டை, மேல் முதுகு மற்றும் தண்டுவடம் வலிமையாகும்.
யாரெல்லாம் புஜங்காசனம் செய்யக்கூடாது?
புஜங்காசனம் செய்யும் முன் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள் பின்வருமாறு:
* புஜங்காசனம் செய்யும் போது உடலை இறுக்கமாக வைத்திருக்கக்கூடாது.
* கர்ப்பிணிகள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.
* ஈஸியாக உள்ளது என்று, இந்த ஆசனத்தை அளவுக்கு அதிகமாக செய்யக்கூடாது.
* ஹெர்னியா, பெப்டிக் அல்சர், ஹைப்பர் தைராய்டு அல்லது குடல் காசநோய் உள்ளவர்கள், யோகா நிபுணரை அணுக வேண்டும்.
* இந்த ஆசனம் செய்யும் போது உடலை L-வடிவில் வைக்க முயற்சிக்க கூடாது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications