Latest Updates
-
தலைசுற்ற வைக்கும் இந்திய அரசர்களின் ஆடம்பரம் - எதுக்கெல்லாம் கோடிக்கணக்குல செலவு பண்ணிருக்காங்க பாருங்க -
ராகு-கேது பெயர்ச்சி 2026: மேஷம் முதல் கன்னி வரை யாருக்கு ராஜயோகம்?- விளக்கும் ஜோதிடர்! -
கேரட் தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
செப்டம்பர் 11, 2026: இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம்
மூங்கில் குருத்து இதுக்கு முன்னாடி சாப்பிட்டு இருக்கீங்களா? இனிமே அவசியம் சாப்பிடுங்க... அவ்வளவு நல்லதாம்...!
பச்சை நிறத்தில் வானுயர வளரும் மூங்கில் மரங்கள் 'ஏழைகளின் மரம்' என்றும், 'பச்சை தங்கம்' என்றும் அழைக்கப்படுகிறது. மூங்கில்கள் பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்றவை.
ஊறுகாய் முதல் உணவுகள் வரை, அவை வடகிழக்கு உணவுகளில் பல வழிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. மூங்கில் முளைகள் என்றும் மூங்கில் குருத்துகள் புதியதாகவும், புளிக்கவைக்கப்பட்டும் மற்றும் கேனில் அடைக்கப்பட்டும் கிடைக்கின்றன. இவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது உங்களுக்கு நீங்கள் எதிர்ப்பார்க்காத நன்மைகளை வழங்கும்.

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது
இதில் பைட்டோஸ்டெரால்கள் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்கள் நிரம்பியுள்ளன, அவை அடைபட்ட தமனிகளை சரி செய்யவும் கெட்ட அல்லது எல்டிஎல் கொழுப்பைக் கரைக்கவும் உதவுகின்றன. அவற்றை வேகவைத்தோ அல்லது புளிக்கவைத்தோ சாப்பிடுவது சிறந்தது மற்றும் இதய நோயாளிகள் வாரத்திற்கு இரண்டு முறை மூங்கில் தளிர்களை சாப்பிடுவது அவர்களின் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்
மூங்கில் குருத்து வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த சிறந்த உணவாக இருக்கிறது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதனை குளிர்காலத்தில் உட்கொள்ளும் போது, வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளிலிருந்து சிறந்த பாதுகாப்பை வழங்கும்.
எடைக்குறைப்பிற்கு உதவும்
மூங்கில் குருத்து குறைந்த கலோரிகளைக் கொண்டவை மற்றும் எடை இழப்புக்கு ஏற்றதாக கருதப்படுகின்றன. 1 கப் மூங்கில் தளிரில் சுமார் 13 கலோரிகள் மற்றும் அரை கிராம் கொழுப்பு உள்ளது. மேலும் உணவு நார்ச்சத்தும் அதிகமாக உள்ளன, இது சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் நீண்ட நேரத்திற்கு முழுமையாக வைத்திருக்கும்.
விஷமுறிவு
மூங்கில் சாறு பாம்புகள், தேள் மற்றும் பிற விஷ உயிரினங்களின் விஷத்திற்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆயுர்வேதத்தின்படி, புதிதாக தயாரிக்கப்பட்ட மூங்கில் சாற்றைக் குடித்ப்பது அல்லது காயத்தின் மீது தடவுவது விஷம் வெளியேற உதவுகிறது. எவ்வாறாயினும், பாம்பு கடித்தால் எப்பொழுதும் முதலில் மருத்துவ கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்.
நுரையீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது
நுரையீரலை வலுப்படுத்தவும், செயல்படவும் உதவும் வைட்டமின்கள் மற்றும் பிற சேர்மங்கள் இதில் அதிகளவு நிறைந்துள்ளது.
கர்ப்பகாலத்தில் உதவியாக இருக்கும்
பாரம்பரிய சீன மருத்துவத்தின்படி, கர்ப்பிணிப் பெண்கள் பிரசவத்தை எளிதாக்க கர்ப்பத்தின் கடைசி காலங்களில் மூங்கில் தளிர்களை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரை அளவை குறைக்கும்
மூங்கில் குருத்தில் இன்யூலின் எனப்படும் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. இன்யூலின் குளுக்கோஸின் உறிஞ்சுதலை மெதுவாக்குவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. மூங்கில் தளிர்களை வழக்கமாக உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

