Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்..
உங்களின் இந்த பழக்கங்கள் 40 வயதுக்கு முன்னாடியே உங்களோட கால்களை பலவீனமாக்கி பாடாய்படுத்துமாம்...!
நீங்கள் 40 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறீர்களா, ஆம் எனில் உங்கள் கால்களில் பிரச்சனைகளை எதிர்கொள்ள தொடங்கியிருப்பீர்கள். வயதாகும்போது பெரும்பாலான மக்கள் தங்கள் உடலில் ஏற்படும் கால்கள் அல்லது முழங்கால்களில் வலி போன்ற பிரச்சனைகளைப் பற்றி புகார் செய்யத் தொடங்குகிறார்கள்.
சரியான ஃபிட்னஸ் வழக்கத்தை கடைப்பிடிப்பது சிறந்தது என்றாலும், உங்கள் 40 வயதிற்குள் அடியெடுத்து வைப்பதற்கு முன்பு நீங்கள் அதைச் செய்ய வேண்டும். பலர் உடற்பயிற்சியின் போது செய்யும் சில பொதுவான தவறுகள் உள்ளன, இது அவர்களுக்கு கால் பிரச்சனைகள், சமநிலையின்மை மற்றும் இயத்தில் சிக்கல்கள் போன்ற அதிக பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

கால்களுக்கு அதிக பயிற்சி அளித்தல்
பல ஜிம் அல்லது ஃபிட்னஸ் மீது ஆர்வம் கொண்டவர்கள் தங்கள் கால்களுக்கு அதிகமாக பயிற்சி அளிக்கிறார்கள். இது தசை சோர்வு, சுளுக்கு மற்றும் காயத்திற்கு வழிவகுக்கும். வலி இல்லாமல் பலன் இல்லை என்பது அதிக உடற்பயிற்சிக்கு ஒருபோதும் பொருந்தாது, உங்கள் உடலில் காயம் அல்லது தேய்மானம் ஏற்படும் போது அதை உடனடியாக கவனிக்க வேண்டும்.
ஸ்ட்ரெட்சிங்கை தவிர்ப்பது
உடற்பயிற்சிகளில் உலகம் முழுவதும் கார்டியோ மற்றும் பளு தூக்குதல் ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இருப்பினும், நம்மில் பலர் தவிர்க்கும் ஒரு எளிய மற்றும் அத்தியாவசிய பயிற்சி ஸ்ட்ரெட்சிங்.
ஜர்னல் ஆஃப் பிசிகல் தெரபி சயின்ஸில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, நெகிழ்வுத்தன்மையை பராமரிப்பதிலும், இயக்கத்தின் வரம்பை மேம்படுத்துவதிலும், காயத்தின் அபாயத்தைக் குறைப்பதிலும் ஸ்ட்ரெட்சிங் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜிம்மில் வார்ம்அப் செய்த பிறகு ஸ்ட்ரெட்சிங் செய்வதை உறுதிசெய்ய வேண்டும், அதேசமயம் வலியை ஏற்படுத்தும் அளவுக்கு ஸ்ட்ரெட்சிங் செய்யக்கூடாது. வார்ம் அப் என்பது ஒரு உடற்பயிற்சியின் முக்கிய பகுதியாகும், இதன்மூலம் காயங்களைத் தவிர்க்கலாம்.
அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் பயிற்சிகளைச் செய்வது
ஓட்டம் போன்ற உயர் தாக்க பயிற்சிகள் உங்கள் உடற்பயிற்சி நிலைகளை மேம்படுத்த பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், அதிகப்படியான HIIT உடற்பயிற்சிகள் உங்கள் மூட்டுகளில் கடினமான அழுத்தத்தை ஏற்பாடுத்தலாம். நல்ல ஸ்போர்ட்ஸ் ஷூக்களை அணிந்துகொண்டு சரியான பாதையில் ஓடுவது போன்ற பயிற்சிகள் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
மேலும், பல்வேறு வகையான பயிற்சிகளை கலந்து செய்யவும் மற்றும் ஹார்ட்கோர் HIIT உடற்பயிற்சிகளை மட்டும் கடைப்பிடிக்காதீர்கள், ஒரே தசைகளை மீண்டும் மீண்டும் பயிற்சிக்கு உள்ளாக்குவது காயம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம்.
கால் வலியை புறக்கணிப்பது
வலி என்பது உங்கள் உடலில் ஏதோ தவறு இருக்கிறது என்பது உணர்த்துவதாகும். உங்கள் காலில் வலி இருந்தால் உடனடியாக பயிற்சி செய்வதை நிறுத்தி, உடனடியாக ட்ரெயினரின் ஆலோசனையைப் பெறவும். குணப்படுத்துவதற்கும் தசைகளை மீட்டெடுப்பதற்கும் நேரம் கொடுப்பது முக்கியம்.
ஊட்டச்சத்துக்களை புறக்கணிப்பது
ஆரோக்கியமான உடல் மற்றும் வலுவான கால்களைப் பெற உடற்பயிற்சி மட்டுமின்றி கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய ஒன்று டயட். உங்கள் எடையை ஒழுங்குபடுத்துவதில் ஊட்டச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக எடையை சுமப்பது உங்கள் மூட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தலாம், மேலும் நீண்ட காலத்திற்கு இடுப்பு வலி, முழங்கால் வலி அல்லது கீல்வாதம் போன்ற உங்கள் ஆபத்தை அதிகரிக்கும்.
உங்கள் 40 வயதிலும் அதற்கு அப்பாலும் ஆரோக்கியமான எடை மேலாண்மை மற்றும் வலுவான கால்களை ஆதரிக்க புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஆரோக்கியமான மூலங்கள் நிறைந்த ஒரு சீரான உணவை உண்ணுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
