Latest Updates
-
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 06 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும்
எச்சரிக்கை! காலையில் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.. இல்லன்னா சர்க்கரை நோய், பிபி வந்துடும்...
ஒரு நாளில் காலை உணவு மிகவும் இன்றியமையாதது. அதே சமயம் காலை வேளையில் சாப்பிடும் உணவுகளும் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். முந்தைய காலத்தில் மக்கள் பெரும்பாலும் ஆரோக்கியமான உணவுகளையே உட்கொண்டு வந்தனர்.
ஆனால் தற்போது உண்ணும் உணவுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளன. இந்த உணவு மாற்றங்கள் உடல் ஆரோக்கியத்தை பாழாக்குகின்றன. காலை உணவானது நீண்ட நேர இடைவெளிக்கு பின் உட்கொள்ளப்படுவதால், புரோட்டீன், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்கள் என அனைத்துவிதமான சத்துக்களும் உடலுக்கு கிடைக்கும் வகையிலான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.

அப்படி சாப்பிட்டால் தான் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் மற்றும் மதிய உணவு வரை வயிறும் நிரம்பியிருக்கும். தற்போது நிறைய பேர் காலை உணவாக செரில்கள், பிரட், பழச்சாறுகள் போன்றவற்றை காலை உணவாக உட்கொண்டு வருகிறார்கள்.
இவை அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியமானதா என்றால், நிச்சயம் இல்லை. இதுப்போன்று பல தவறான உணவுகளை காலை வேளையில் பெரும்பாலானோர் உட்கொண்டு வருகிறார்கள். இப்போது எந்த உணவுகளை காலை உணவாக உட்கொள்ளக்கூடாது என்பதைக் காண்போம்.
சர்க்கரை நிறைந்த அல்லது அதிகம் சுத்திகரிக்கப்பட்ட செரில்கள்
தற்போது செரில்களை நிறைய பேர் தங்களில் காலை உணவாக உட்கொண்டு வருகிறார்கள். ஆனால் இந்த செரில்களில் சர்க்கரை அதிகமாகவும், புரோட்டீன் குறைவாகவும் இருப்பதால், அது இரத்த சர்க்கரை அளவை சட்டென்று அதிகரிக்கும். மேலும் இது விரைவில் ஜீரணமடைந்து, கண்ட உணவுகளின் மீதான ஆசையை அதிகரித்துவிடும். எனவே சர்க்கரை நிறைந்த செரில்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
பலர் சர்க்கரை நிறைந்ததை தானே உட்கொள்ளக்கூடாது, சர்க்கரை இல்லாத செரில்களை சாப்பிடலாம் என்று நினைக்கலாம். இருப்பினும், அவை ஒரு நாளைத் தொடங்க ஏற்ற சிறந்த உணவாக இருக்காது. இவற்றை காலை உணவாக உட்கொள்வதை நிறுத்தாவிட்டால், உடல் பருமன், சர்க்கரை நோய், இதய நோய் போன்றவற்றின் அபாயம் அதிகரிக்கும்.
பேன் கேக்குகள்
பேன் கேக்குகள் மிகவும் சுவையானவையாக இருக்கலாம். ஆனால் இவை ஒரு சிறந்த காலை உணவாக இருக்க முடியாது. ஏனெனில் பேன் கேக்குகள் சுத்திகரிக்கப்பட்ட மாவால் தயாரிக்கப்படுகின்றன. மேலும் இவற்றில் வெண்ணெய் மற்றும் சர்க்கரை சிரப்பும் இருக்கும். முக்கியமாக பேன் கேக்குகளில் கலோரிகள், சர்க்கரை, கொழுப்பு போன்றவை அதிகம் மற்றும் புரோட்டீன், நார்ச்சத்து போன்றவை குறைவு. எனவே இவற்றை காலை உணவாக உட்கொண்டால், அவை விரைவில் ஜீரணமடைந்து, கண்ட உணவுகளின் மீதான நாட்டத்தை அதிகரிக்கும்.
பிரட் டோஸ்ட்
தற்போது மிகவும் பிரபலமான காலை உணவாக பிரட் டோஸ்ட் உள்ளது. ஆனால் இது தான் இருப்பதிலேயே ஆரோக்கியத்தை சீரழிக்கும் மிகவும் மோசமான காலை உணவு. இவற்றில் புரோட்டீன் மிகவும் குறைவு. மேலும் இந்த பிரட் டோஸ்ட்டில் வெண்ணெய் சேர்க்கும் போது கலோரிகள் அதிகரித்து, உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.
பூரி
தமிழ்நாட்டில் பூரி மிகவும் பிரபலமான காலை உணவு. ஆனால் பூரி எண்ணெயில் பொரித்து எடுக்கப்படுகிறது. காலையில் வெறும் வயிற்றில் எண்ணெயில் பொரித்த பூரியை உட்கொண்டால், அது அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சலை உண்டாக்கும். மேலும் பூரியில் புரோட்டீன் இல்லை மற்றும் கலோரிகள் அதிகமாக இருக்கும். எனவே பூரியை காலை உணவாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
பழச்சாறுகள்
நிறைய பேர் காலையில் சாப்பிட நேரம் இல்லாததால், பழச்சாறுகளை குடிப்பார்கள். பழச்சாறுகளில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக இருந்தாலும், அவற்றில் சர்க்கரை அதிகமாகவும், நார்ச்சத்து குறைவாகவும் இருக்கும். எனவே காலை வேளையில் பழச்சாறுகளை குடிப்பதற்கு பதிலாக பழங்களை அப்படியே சாப்பிடுவதே சிறந்ததாக இருக்கும்.
சர்க்கரை சேர்க்கப்பட்ட யோகர்ட்
யோகர்ட்டில் புரோட்டின் மற்றும் புரோபயோடிக்குகள் அதிகமாக உள்ளன. புரோபயோடிக்குகள் என்பவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள். ஆனால் சில யோகர்ட்டுகளில் சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும். இந்த வகையான யோகர்ட்டுகள் ஆரோக்கியத்திற்கு நல்லவை அல்ல. எனவே இவற்றை காலை உணவாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
பராத்தா
மைதாவால் செய்யப்படும் பராத்தாக்களை காலை உணவாக உட்கொள்வது நல்லதல்ல. குறிப்பாக இது செரிமான மண்டலத்திற்கு தீங்கு விளைவிக்கும். வேண்டுமானால் ராகி, கம்பு, கோதுமை போன்றவற்றால் ஆன பராத்தாக்களை சாப்பிடலாம். அதுவும் காய்கறிகளை கொண்டு மசாலா செய்து, அவற்றை ஸ்டப் செய்து பராத்தா தயாரித்து சாப்பிட்டால், சுவையாக இருப்பதோடு, உடலுக்கு ஆரோக்கியமான உணவாகவும் இருக்கும்.
நூடுல்ஸ்
நூடுல்ஸானது சுத்திரிக்கப்பட்ட மாவு மற்றும் எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட மாவு என்பது மைதா மாவாகும். சுத்திகரிக்கப்பட்ட மாவில் சத்துக்கள் எதுவும் இருக்காது. ஆனால் கலோரிகள் அதிகமாக இருக்கும். இந்த நூடுல்ஸை தினமும் உட்கொண்டு வந்தால், அது உடலுக்கு கேடு விளைவிக்கும். முக்கியமாக நூடுல்ஸை தினமும் சாப்பிட்டால், உடலில் சோடியத்தின் அளவு அதிகரித்து, ஹைபர்நெட்ரீமியாமை உண்டாக்கிவிடும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications