Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
நீங்க ரொம்ப மன அழுத்ததுல இருக்கீங்களா? அப்ப இந்த உணவுகள கண்டிப்பா சாப்பிடணுமாம்...ஏன் தெரியுமா?
மன அழுத்தம் நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகிவிட்டது. இந்த பிஸியான உலகில், ஒவ்வொருவரும் தங்கள் பிஸியான நாட்களை அன்றாடம் தொடர போராடுகிறார்கள். இது நிறைய மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது.
வேலை, குடும்பம், நிதி மற்றும் குழந்தைகள் என பல்வேறு பொறுப்புகளையும் கடமைகளையும் சுமப்பதால், பெரும்பலான மக்கள் எளிதாக மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய செய்திகள் மற்றும் தகவல்களால் நாம் தொடர்ந்து வருத்தத்திற்கு கவலைக்கு ஆளாகிறோம். இது நம் மன அழுத்தத்தை மேலும் அதிகரிக்கலாம்.

மன அழுத்தத்தை எதிர்த்துப் போராட பல வழிகள் இருந்தாலும், ஒரு பயனுள்ள முறை நமது உணவுமுறை. சில உணவுகளை சாப்பிடுவது மன அழுத்தத்தையும் அதன் விளைவுகளையும் நம் உடலில் நிர்வகிக்க உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
டார்க் சாக்லேட்
டார்க் சாக்லேட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், அவை மன அழுத்தத்தை குறைக்க உதவும். இது இயற்கையான மனநிலையை அதிகரிக்கும் எண்டோர்பின்களின் உற்பத்தியையும் தூண்டுகிறது. எனவே, அடுத்த முறை நீங்கள் மன அழுத்தத்தை உணரும்போது, உங்கள் நரம்புகளை அமைதிப்படுத்த ஒரு சிறிய டார்க் சாக்லேட்டை எடுத்து சாப்பிடுங்கள்.
அவுரிநெல்லிகள்
அவுரிநெல்லிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளன. அவை மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்த உதவும் சேர்மங்களும் அவற்றில் உள்ளன. நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது, அவுரிநெல்லிகளை கட்டாயம் எடுத்துக்கொள்ளுங்கள். 5-6 அவுரிநெல்லிகளை சாப்பிடுவது மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற உணர்வுகளைக் குறைக்க உதவும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.
அவகேடோ
அவகேடோ ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்த ஒரு சூப்பர்ஃபுட் ஆகும். இந்த ஊட்டச்சத்துக்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் மன அழுத்த ஹார்மோன்களைக் குறைக்கவும் உதவும்.
பொட்டாசியம், ஒரு எலக்ட்ரோலைட், உயர் இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்த ஹார்மோன்களின் விளைவுகளை குறைக்க உதவுகிறது. மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் அவகேடோ டோஸ்ட்டை சாப்பிடலாம் அல்லது அவகேடோ பழத்தை உங்கள் சாலட்டில் சேர்த்து சாப்பிடலாம்.
பாதாம்
பாதாம் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் புரதத்தின் சிறந்த மூலமாக இருக்கிறது. அவற்றில் மெக்னீசியம் உள்ளது, இது தசைகளை தளர்த்தவும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும். உங்கள் நரம்புகளை அமைதிப்படுத்த, மன அழுத்தத்தை உணரும் போது ஒரு கையளவு பாதாம் பருப்பை சாப்பிடுங்கள்.
சால்மன்
சால்மன் ஒரு கொழுப்பு மீன், இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இந்த ஆரோக்கியமான கொழுப்புகள் வீக்கத்தைக் குறைக்கவும் மன அழுத்த ஹார்மோன்களைக் குறைக்கவும் உதவுகின்றன. ருசியான மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் உணவுக்காக, சில காய்கறிகளுடன் வறுக்கப்பட்ட சால்மனை சாப்பிடலாம்.
இறுதிக் குறிப்பு
மன அழுத்தத்தை நிர்வகிப்பது என்பது மிகவும் சவாலானது. ஆனால் இந்த மன அழுத்தத்தைக் குறைக்கும் உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சால்மன், அக்ரூட் பருப்புகள் மற்றும் ஆளி விதைகள் போன்ற ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள உணவுகள் வீக்கத்தைக் குறைக்க உதவும். அதேபோல, இது மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும்.
கூடுதலாக, இலை கீரைகள், பருப்பு வகைகள் மற்றும் முட்டைகள் போன்ற பி வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் மனநிலையை அதிகரிக்கவும் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும். உங்கள் மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க சீரான உணவை உண்ணவும், சுய-கவனிப்பு பயிற்சி செய்யவும் நினைவில் கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
