Latest Updates
-
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா?
உள்ளுறுப்புக்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க போதும்...
நமது உடல் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதற்கு பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் மிகவும் அவசிமாகும். அதில் உடல் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கு தேவையான முக்கியமான சேர்மங்களில் வைட்டமின் ஏ ஒன்றாகும்.
நமது உடல் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதற்கு பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் மிகவும் அவசிமாகும். அதில் உடல் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கு தேவையான முக்கியமான சேர்மங்களில் வைட்டமின் ஏ ஒன்றாகும். ஒரு நாளைக்கு பரிந்துரைக்கப்பட்ட வைட்டமின் ஏ சத்தின் மதிப்பு ஆண்களில் 900 mcg-யும், பெண்களில் 700 mcg-யும், இளம் பருவத்தினர் மற்றும் குழந்தைகளில் 300-600 mcg-யும் ஆகும்.

வைட்டமின் ஏ சத்தின் நன்மைகளைப் பற்றி கூற வேண்டுமானால், இது மாலைக்கண் நோயின் அபாயத்தைக் குறைக்கிறது, நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது, பருக்கள் வருவதைத் தடுக்கிறது, எலும்புகளின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது, புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது. இவ்வளவு நன்மைகளைக் கொண்டுள்ள வைட்டமின் ஏ தாவரங்கள் மற்றும் விலங்குகள் என இரண்டிலும் காணப்படுகின்றன. அதில் ரெட்டினால் என்னும் வைட்டமின் ஏ1 விலங்குகளிடமிருந்து கிடைக்கும் உணவுகளில் மட்டுமே காணப்படுகிறது. இப்போது வைட்டமின் ஏ சத்து நிறைந்த உணவுகள் எவையென்பதைக் காண்போம்.

குடைமிளகாய்
சிவப்பு மற்றும் பச்சை என இரண்டு வகையான குடைமிளகாயிலும் வைட்டமின் ஏ அதிகம் நிறைந்துள்ளது. அதோடு குடைமிளகாயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கால்சியம் வளமான அளவில் உள்ளன. மேலும் இதில் நார்ச்சத்து, ஃபோலேட், இரும்புச்சத்து அதிகமாக இருப்பதுடன், கலோரிகள் குறைவாகவும் உள்ளதால், அன்றாட உணவில் இதை சேர்த்துக் கொள்வதன் மூலம், உள்ளுறுப்புக்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பால்
பாலில் குறிப்பாக கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. அத்துடன் மக்னீசியம், கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துக்களும் அதிகமாக உள்ளன. இது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ஊக்குவிக்கவும் உதவுகிறது. மேலும் பாலில் புரோட்டீன் அதிகம் உள்ளதால், எடையைப் பராமரிக்கவும் உதவுகிறது.

ப்ராக்கோலி
ஆரோக்கியமான காய்கறிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரு காய்கறி தான் ப்ராக்கோலி. காலிஃப்ளவர் போன்ற தோற்றத்தைக் கொண்ட ப்ராக்கோலியில் வைட்டமின் ஏ சத்துடன், வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே போன்ற சத்துக்களும் அதிகம் நிறைந்துள்ளன. அதுமட்டுமின்றி, இதில் புரோட்டீன், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் செலினியம் போன்றவையும் வளமான அளவில் உள்ளதால், அன்றாட உணவில் சேர்த்து ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

கடல் உணவுகள்
கானாங்கெளுத்தி, நெத்திலி, விலாங்கு மீன், சால்மன் மற்றும் சூரை போன்ற மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளன. அதோடு கடல் உணவுகள் வைட்டமின் ஏ சத்தின் சிறந்த மூலப்பொருளும் கூட. இவை கண்களின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவக்கூடும்.

கேரட்
கேரட்டுகளில் பீட்டா-கரோட்டின் என்னும் சேர்மம் வளமான அளவில் நிறைந்துள்ளன. இந்த பீட்டா-கரோட்டின் தான் உடலினுள் செல்லும் போது வைட்டமின் ஏ ஆக மாற்றமடைகிறது. இவை கண்புரை உருவாகும் அபாயத்தைக் குறைக்கவும், கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

பசலைக்கீரை
கீரைகளிலேயே பசலைக்கீரையில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக உள்ளது. இந்த கீரையை அடிக்கடி வாங்கி சமைத்து சாப்பிட்டு வந்தால், உள்ளுறுப்புக்கள் எப்போதும் சிறப்பாக செயல்பட்டு, ஆரோக்கியமாக இருக்கும்.

உலர்ந்த ஆப்ரிகாட்
உங்களுக்கு ஸ்நாக்ஸ் நேரத்தில் ஏதேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றினால், அப்போது சாப்பிட உலர்ந்த ஆப்ரிகாட் சிறந்த தேர்வாக இருக்கும். ஒரு கப் உலர்ந்த ஆப்ரிகாட்டில் 4,685 IU மட்டுமின்றி, இரும்புச்சத்து, வைட்டமின் பி6 மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு
உங்களுக்கு கிழங்கு சாப்பிட பிடிக்குமானால், சர்க்கரைவள்ளிக் கிழங்கை வாங்கி வேக வைத்து அடிக்கடி சாப்பிடுங்கள். இது மிகவும் ருசியான கிழங்கு மட்டுமின்றி, இதில் வைட்டமின் ஏ சத்து நாம் நினைத்திராத அளவில் நிறைந்துள்ளது. எனவே உங்கள் குழந்தைகளுக்கு இந்த கிழங்கை வாங்கி அடிக்கடி வேக வைத்துக் கொடுங்கள்.

பிஸ்தா
நட்ஸ்களில் பிஸ்தா பலருக்கும் பிடித்த ஒன்று என்றும் கூறலாம். அதே சமயம் ஒரு கப் பிஸ்தாவால் உடலுக்கு 510 IU வைட்டமின் ஏ கிடைக்கும் என்பது தெரியுமா? எனவே ஸ்நாக்ஸ் நேரங்களில் கண்டதை சாப்பிடுவதைத் தவிர்த்து, உலர் பழங்கள், நட்ஸ் போன்றவற்றை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications











