கல்லீரலின் மூலை முடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்றணுமா? அப்ப இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்க..

கல்லீரலில் நச்சுக்கள் அதிகம் சேரும் போதும் கல்லீரலில் பிரச்சனைகள் ஏற்படத் தொடங்குகின்றன. எனவே அவ்வப்போது கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற முயற்சிக்க வேண்டும்.

உடலிலேயே கல்லீரல் மிகவும் முக்கியமான மற்றும் 3.5 பவுண்ட் எடை கொண்ட மிகப்பெரிய உறுப்பு. கல்லீரல் உடலில் வடிகட்டும் பணியை செய்வதோடு மட்டுமின்றி, நாள் முழுவதும் கடுமையாக பல வேலை செய்கிறது. இத்தகைய கல்லீரல் தனது வேலையை சரியாக செய்யாமல் இருக்கும் போது அல்லது ஆரோக்கியமற்றதாக இருக்கும் போது தான் ஒருவரது உடலில் பல நோய்கள் வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே கல்லீரலின் ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாததாகும்.

Top Ten Natural Liver Cleansing Foods In Tamil

ஒருவரது கல்லீரலில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு நாம் ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் முக்கிய காரணங்களாக உள்ளன. மேலும் கல்லீரலில் நச்சுக்கள் அதிகம் சேரும் போதும் கல்லீரலில் பிரச்சனைகள் ஏற்படத் தொடங்குகின்றன. எனவே அவ்வப்போது கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற முயற்சிக்க வேண்டும்.

அதற்கு கல்லீரலை சுத்தம் செய்ய உதவும் சில உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதுவும் அந்த உணவுகளை தினமும் சிறிது உட்கொண்டு வந்தாலே கல்லீரலில் நச்சுக்கள் தேங்குவதைத் தவிர்க்கலாம். இப்போது கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும் சில உணவுகள் குறித்து காண்போம். அதற்கு முன்பு கல்லீரல் என்னென்ன வேலையை செய்கிறது என்பதைப் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கல்லீரல் நமது உடலில் என்னென்ன வேலையை செய்கிறது?

கல்லீரல் நமது உடலில் என்னென்ன வேலையை செய்கிறது?

பலருக்கு கல்லீரலில் நமது உடலில் என்னென்ன வேலையை செய்கிறது என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே முதலில் கல்லீரலின் பணி என்னவென்பதைக் காண்போம். அவை பின்வருமாறு:

* தொற்றுகளுக்கு எதிராக நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குவது

* இரத்தம் உறைவதை ஒழுங்குபடுத்துகிறது

* பித்தநீரின் உற்பத்தி மற்றும் வெளியேற்றம்

* பிலிரூபின், கொலஸ்ட்ரால், அதிகப்படியான ஹார்மோன் மற்றும் மருந்துகளை வெளியேற்றுகிறது

* கொழுப்புக்கள், புரோட்டீன்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை வளர்சிதை மாற்றம் செய்கிறது

* நொதிகளை செயல்படுத்துகிறது

* கிளைகோஜன், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களை சேகரித்து வைக்கிறது

* 500-க்கும் அதிகமாக பல்வேறு கெமிக்கல் செயல்பாடுகளை செய்கிறது

* இரத்தத்தை சுத்தம் செய்கிறது

* ஒவ்வொரு நிமிடமும் ஒரு லிட்டர் இரத்தத்தை வடிகட்டுகிறது

இவ்வளவு வேலையை செய்யும் கல்லீரலில் நச்சுக்கள் எப்படி சேராமல் இருக்கும்? எனவே கல்லீரலில் சேரும் நச்சுக்களை வெளியேற்ற பின்வரும் உணவுகளை தினமும் சிறிது சாப்பிடுங்கள்.

பீட்ரூட்

பீட்ரூட்

பீட்ரூட்டில் உள்ள கெமிக்கல்கள், கல்லீரலில் படியும் கொழுப்புக்களை எதிர்த்துப் போராடுவதாக கூறப்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள கெமிக்கல்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட் விளைவுகளை கொண்டுள்ளன. மேலும் பீட்ரூட்டில் உடலில் நைட்ரிக் ஆக்ஸைடை அதிகரிக்கிறது.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆய்வு ஒன்றின் படி, ஆப்பிளில் உள்ள பாலிஃபீனால்கள் கடுமையான கல்லீரல் நச்சுக்களை எதிர்த்து, நல்ல பாதுகாப்பை வழங்குகின்றன. எனவே உங்கள் கல்லீரலில் உள்ள அழுக்குகள் வெளியேற வேண்டுமானால் தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிடுங்கள். இதனால் கல்லீரல் சுத்தமாகி, அதன் செயல்பாடு மற்றும் ஆரோக்கியம் மேம்படும்.

அவகேடோ

அவகேடோ

அவகேடோவில் க்ளுட்டாதையோன் உற்பத்தி செய்யும் பொருட்கள் வளமான அளவில் உள்ளன. இவை கல்லீரலை தானே உற்பத்தி செய்யும் திறனை அதிகரிக்க உதவுகிறது. அவகேடோவில் உள்ள சக்தி வாய்ந்த கெமிக்கல்கள் கல்லீரல் சேதமடைவதைக் குறைப்பதாக ஜப்பானைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் வாரத்திற்கு 1-2 அவகேடோ பழங்கள் என 4 வாரங்களை சாப்பிட்டு வந்தால், அது கல்லீரல் ஆரோக்கியத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. என்ன தான் அவகேடோ பழத்தில் கொழுப்புக்கள் அதிகமாக இருந்தாலும், பெரும்பாலும் நல்ல கொழுப்புக்களாக இருப்பதால், இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை குறைக்க உதவுகிறது.

பூண்டு

பூண்டு

பூண்டு உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களைக் குறைக்க உதவுகிறது. முக்கியமாக இதில் சல்பர் உள்ளது. இது கல்லீரலில் உள்ள நொதிகளை செயல்படுத்தி நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும் பூண்டில் அல்லிசின் மற்றும் செலினியம் உள்ளது. இந்த இரண்டு சத்துக்களும் கல்லீரலை சேதமடையாமல் பாதுகாப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே உங்கள் உணவில் பூண்டுகள் இருந்தால், இனிமேல் அவற்றை தூக்கி எறியாமல் சாப்பிடுங்கள்.

எலுமிச்சை

எலுமிச்சை

மற்ற உணவுகளை விட எலுமிச்சை கல்லீரலில் அதிக நொதிகளை உற்பத்தி செய்கிறது. எனவே உங்கள் கல்லீரலை சுத்தமாக வைத்துக் கொள்ள நினைத்தால், காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடியுங்கள்.

க்ரீன் டீ

க்ரீன் டீ

க்ரீன் டீயில் கேட்டசின்கள் உள்ளன. இது கல்லீரலை சுத்தம் செய்ய உதவுவதேடு, கல்லீரலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவுகிறது. நீங்கள் மது அருந்துபவரானால், ஆல்கஹால் நச்சுக்களால் கல்லீரலில் ஏற்படும் சேதத்தைக் குறைக்க க்ரீன் டீயைக் குடிப்பது நல்லது.

பச்சை இலை காய்கறிகள்

பச்சை இலை காய்கறிகள்

கல்லீரலில் நச்சுக்களின்றி சுத்தமாக இருக்க வேண்டுமானால், ஆன்டி-ஆக்ஸிடன்ட் உணவுகளை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். பச்சை இலை காய்கறிகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிக அளவில் உள்ளன. எனவே கேல், பசலைக்கீரை, கொலார்டு, லெட்யூஸ் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள்.

வால்நட்ஸ்

வால்நட்ஸ்

வால்நட்ஸில் அர்ஜினைன் அதிகமாக நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள கழிவுப்பொருளான அம்மோனியாவை கல்லீரல் உதவியுடன் திறம்பட வெளியேற்ற உதவுகிறது. மேலும் வால்நட்ஸல் க்ளுதாதையோன் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமான அளவில் உள்ளன. அதுவும் கருப்பு வால்நட்ஸ் இரத்தத்தை ஆக்ஸிஜனேற்றம் செய்ய உதவுகிறது. எனவே கல்லீரல் ஆரோக்கியத்திற்கும், அதை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் தினமும் சிறிது வால்நட்ஸை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

வெண்டைக்காய்

வெண்டைக்காய்

வெண்டைக்காய் கல்லீரலை சுத்தப்படுத்த உதவும் என்பது தெரியுமா? ஆம், வெண்டைக்காயில் உள்ள பிசுபிசுப்பான பொருள் பித்த அமிலம் மற்றும் கொலஸ்ட்ராலை பிணைத்து கல்லீரலை நச்சுத்தன்மையாக்க உதவுகிறது. அதுவும் வெண்டைக்காயில் க்ளுட்டாதையோன் உள்ளது. இது உடலில் இயற்கையாகவே உற்பத்தி செய்யும் புரோட்டீன் மூலக்கூறாகும். க்ளுட்டாதையோன் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் என்பதால், இது கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களால் ஏற்படும் விளைவை எதிர்த்துப் போராட உதவுகின்றன. ஆகவே கல்லீரல் சுத்தமாக இருக்க, வாரம் ஒருமுறை தவறாமல் வெண்டைக்காயை உணவில் சேர்த்து வாருங்கள்.

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சள் மருத்துவ குணம் அதிகம் கொண்ட ஒரு மசாலா பொருள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த மஞ்சள் கல்லீரல் சேதமடைவதைத் தடுப்பதோடு மட்டுமின்றி, கல்லீரல் செல்களை மீளுருவாக்கம் செய்வதையும் ஊக்குவிக்கிறது. கூடுதலாக மஞ்சள் பித்தநீரின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, December 17, 2022, 11:20 [IST]
Desktop Bottom Promotion