Latest Updates
-
குரு-செவ்வாயின் அரிய சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 13 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நினைத்தது பலிக்கும் நாளாக இருக்குமாம் -
ஜூன் 17-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
இனிமே டீ குடிக்கும் போது இந்த 5 உணவுகளை தெரியாம கூட சாப்பிடாதீங்க - இல்லனா உங்களுக்குத்தான் ஆபத்து -
இதுல உங்க கை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க உண்மையான குணத்தை சொல்றோம்.. -
அடுத்தமுறை தேங்காய் சட்னியை இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
1 கப் மீல் மேக்கர் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்களை காதலிக்க எல்லோரும் ஆசைப்படுவார்களாம் - நீங்க பிறந்த மாதம் இதுல இருக்கா?
ஆண்களே! படுக்கையில் இருமடங்கு இன்பத்தை அடைய வேண்டுமா? இத படிங்க...
விறைப்புத்தன்மை பிரச்சனையைக் கொண்ட ஆண்கள் எடுத்ததும் மருந்து மாத்திரைகளை எடுக்காமல், இயற்கை வழிகளை மேற்கொண்டால் ஒரு நல்ல பலன் கிடைக்கும். குறிப்பாக விறைப்புத்தன்மை பிரச்சனையை சரிசெய்யும் உணவுகளை உண்பது மிகவும் நல்லது.
சில ஆண்களுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை இருக்கும். இந்த பிரச்சனை அவர்களின் பாலியல் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கிறது. அதே வேளையில், இது உறவில் ஈடுபடும் போது அவர்களின் நம்பிக்கையையும் குறைக்கிறது. முன்பெல்லாம் விறைப்புத்தன்மை பிரச்சனை குறித்து பேசுவதற்கு ஆண்கள் அதிகம் கூச்சப்படுவார்கள். இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கும் போது, சந்தையில் கிடைக்கும் மருந்துப் பொருட்களை வாங்கி உட்கொள்கின்றனர். ஆனால் கடைகளில் விற்கப்படும் இந்த மருந்துகளை விறைப்புத்தன்மை பிரச்சனையை அதிகரிப்பதோடு, பக்கவிளைவுகளுக்கான ஆபத்து அதிகம் உள்ளது.

ஆகவே விறைப்புத்தன்மை பிரச்சனையைக் கொண்ட ஆண்கள் எடுத்ததும் மருந்து மாத்திரைகளை எடுக்காமல், இயற்கை வழிகளை மேற்கொண்டால் ஒரு நல்ல பலன் கிடைக்கும். குறிப்பாக விறைப்புத்தன்மை பிரச்சனையை சரிசெய்யும் உணவுகளை உட்கொள்வது மிகவும் நல்லது. இந்த உணவுகளால் விறைப்புத்தன்மை பிரச்சனை நீங்குவது மட்டுமின்றி, ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும். இப்போது விறைப்புத்தன்மை பிரச்சனையை சமாளிக்க உதவும் சில உணவுகளைக் காண்போம். முக்கியமாக இந்த உணவுப் பொருட்கள் வயாகரா போன்று செயல்படக்கூடியது.

ஓட்ஸ்
ஓட்ஸில் எல்-அர்ஜினைன் என்னும் அமினோ அமிலம் உள்ளது. இது இரத்த நாளங்களின் சுவற்றை தளர்வடையச் செய்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். எல்-அர்ஜினைன் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே ஆண்கள் ஓட்ஸ் சாப்பிடுவது விறைப்புத்தன்மை பிரச்சனையை சரிசெய்வதோடு, பாலியல் வாழ்க்கையையும் சிறப்பாக்கும்.

மாதுளை
மாதுளை உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது. மாதுளை ஜூஸ் ஒரு வயாகரா போன்று செயல்படுகிறது மற்றும் இதில் எந்த பக்க விளைவுகளும் இல்லை. தினமும் மாதுளையை உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆற்றலுடனும், ஆரோக்கியமாகவும் இருக்கும். குறிப்பாக இதில் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால், பிறப்புறுப்பு பகுதிகளில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

தர்பூசணி
ஆய்வுகளின் படி, தர்பூசணி முற்றிலும் வயாகராவைப் போன்று செயல்படும் ஒரு அற்புதமான பழமாகும். இதில் உள்ள நைட்ரிக் ஆக்சைடு பாலியல் வாழ்க்கையில் முக்கிய பங்கை வகிக்கிறது. எப்படியெனில், தர்பூசணி ஒருவரின் உணர்வுகளை மேம்படுத்துவதோடு, உறவில் ஈடுபடும் போது நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட உதவுகிறது.

பூசணி விதைகள்
பலர் பூசணி சமைக்கும் போது அதன் விதைகளை தூக்கி எறிந்துவிடுவார்கள். ஆனால் பூசணியின் விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஜிங்க் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன. இவை செக்ஸ் ஹார்மோன் அளவை அதிகரிக்க உதவி புரிந்து, உடலுறவின் போது முழு இன்பத்தை அனுபவிக்க உதவுகிறது. அதற்கு பூசணி விதைகளை ஸ்நாக்ஸ் நேரத்தில் சாப்பிடுங்கள்.

ஸ்ட்ராபெர்ரி
கண்ணைக் கவரும் சிவப்பு நிறத்தில் இருக்கும் ஸ்ட்ராபெர்ரி பழங்களும் வயாகராவைப் போன்றே வேலை செய்கின்றன. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது மற்றும் இது விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்துகிறது. ஆகவே பாலியல் வாழ்க்கையை என்ஜாய் பண்ண நினைப்பவர்கள், ஸ்ட்ராபெர்ரி பழத்தை சாப்பிட்டால் அது நிச்சயம் நடக்கும்.

வாழைப்பழம்
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. இது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் பி உடலில் ஆற்றலை அதிகரிக்கிறது. அதோடு இது பாலியல் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான டெஸ்டோஸ்டிரோன் அளவையும் அதிகரிக்கிறது. எனவே தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்கள், உங்கள் துணையுடன் குதூகலமாக இருங்கள்.

மிளகாய்
சமைக்கும் போது உணவில் காரத்திற்காக பயன்படுத்தும் மிளகாய், உணவிற்கு வெறும் காரத்தை மட்டும் அளிப்பதில்லை. இது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் பாலுணர்ச்சியை அதிகரிக்கிறது. ஆகவே நீங்கள் உங்கள் பாலியல் வாழ்க்கை சிறப்பாக இருக்க நினைத்தால், உணவில் பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications