Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
இந்த பிரச்சினை உள்ளவர்கள் பூண்டு சாப்பிடுவதை அவசியம் தவிர்க்க வேண்டும்? இல்லனா பிரச்சினைதான்...!
எந்த பருவக்காலமாக இருந்தாலும் பூண்டு அனைவரின் சமையலறையில் கட்டாயமாக இருக்கும் ஒரு பொருளாகும். உங்கள் உணவில் சிறிதளவு பூண்டு இருந்தாலும் அதன் சுவை அதிகரிக்கும்.
எந்த பருவக்காலமாக இருந்தாலும் பூண்டு அனைவரின் சமையலறையில் கட்டாயமாக இருக்கும் ஒரு பொருளாகும். உங்கள் உணவில் சிறிதளவு பூண்டு இருந்தாலும் அதன் சுவை அதிகரிக்கும். குளிர்காலத்தில் பூண்டை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது பல குளிர்கால பிரச்சினைகளை குணப்படுத்தும். பூண்டு விழுது செய்து ஒரு பாத்திரத்தில் சேமித்து வைப்பதைத் தவிர்த்து, சிலர் காலையில் பச்சையாக சாப்பிட விரும்புகிறார்கள்.

பெரும்பாலான மக்களுக்கு இது நல்லது என்றாலும், சிலர் பூண்டு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் பூண்டு அனைவருக்கும் ஒரே மாதிரியான நன்மைகளை வழங்குவதில்லை. சிலருக்கு பூண்டினால் ஏற்படும் தீமைகள் மற்றும் பூண்டை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

அசிடிட்டி பிரச்சினை உள்ளவர்கள்
அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் பூண்டை அவசியம் தவிர்க்க வேண்டும். அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் பூண்டு சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் ஏற்படும். எனவே அவர்கள் தவிர்க்க வேண்டும். அமில பிரச்சனை உள்ளவர்கள் வெறும் வயிற்றில் சாப்பிடுவது பிரச்சினைகளை மேலும் மோசமாக்கும்.

உணர்திறன் மிக்க வயிறு கொண்டவர்கள்
பலவீனமான அல்லது உணர்திறன் வாய்ந்த வயிறு உள்ளவர்களும் இந்த பட்டியலில் உள்ளனர், ஏனெனில் பலவீனமான வயிறை கொண்டவர்களுக்கு பூண்டு சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். எனவே நீங்கள் மீண்டும் மீண்டும் கழிவறைக்கு ஓட விரும்பவில்லை என்றால், பூண்டிலிருந்து விலகி இருப்பது நல்லது.

சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள்
சிலருக்கு மூச்சுத்திணறல் மற்றும் உடல் துர்நாற்றம் உள்ளது, எனவே அவர்கள் பூண்டு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது அவர்களின் உடல் துர்நாற்ற பிரச்சினைகளை அதிகரிக்கும்.

மெலிந்த இரத்தம் கொண்டவர்கள்
இதய நோய் உள்ளவர்கள் பொதுவாக ஆன்டிகோகுலண்டுகள் என்றழைக்கப்படும் மருந்தை எடுத்துக் கொள்கிறார்கள். இவை பொதுவாக இரத்தத்தை மெலிப்பதாக அறியப்படும். இந்த பிரச்சினை உள்ளவர்கள் பூண்டை அதிகமாக உட்கொள்ளக்கூடாது, ஏனெனில் இது இரத்தத்தை மெலிக்கும் விளைவை அதிகரிக்கும்.

கல்லீரல் நோய்
இரத்த சுத்திகரிப்பு, கொழுப்பு வளர்சிதை மாற்றம் மற்றும் நம் உடலில் இருந்து அம்மோனியாவை அகற்றுவது போன்ற பல்வேறு செயல்பாடுகளை செய்வது நமது கல்லீரலின் முக்கிய பணியாகும். ஆய்வுகளின்படி, பூண்டில் அல்லிசின் என்ற சேர்மம் நிறைந்துள்ளது, இது பெரிய அளவில் எடுத்துக் கொண்டால் கல்லீரல் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும்.

கர்ப்பிணி பெண்கள்
கர்ப்பிணிப் பெண்கள் அல்லது பாலூட்டும் தாய்மார்கள் இந்த காலகட்டத்தில் பூண்டு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவத்தைத் தூண்டும். பாலின் சுவையை மாற்றும் என்பதால் பாலூட்டும் தாய்மார்கள் இதனை தவிர்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications