Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
H3N2 வைரஸ் தொற்று ஏற்படக்கூடாதா? அப்ப இந்த உணவுகளை அதிகமா சாப்பிடுங்க...
H3N2 வைரஸ் தொற்று நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை அதிகம் தாக்கக்கூடியது என்பதால், இந்த வைரஸ் தொற்றில் இருந்து தங்களை காத்துக் கொள்ள நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
H3N2 Influenza Virus: கொரோனாவில் இருந்து மீண்டு வந்த நிலையில், தற்போது H3N2 வைரஸ் தொற்றால் இந்தியாவில் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். H3N2 வைரஸ் என்பது ஒரு பருவகால காய்ச்சல் ஆகும். இந்த வகை வைரஸ் பலருக்கும் சுவாச பிரச்சனைகளை உருவாக்கும். வேகமாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தொற்றும் தன்மை கொண்ட இந்த வைரஸ், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பேசும் போதோ அல்லது இருமல், தும்மலின் போதோ, நீர்த்துளிகள் மூலம் பரவுகிறது.

என்ன தான் இந்த வகை வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகம் இருந்தாலும், இதனால் அதிகம் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பொதுவாக பருவகால காய்ச்சலால் குழந்தைகள், முதியவர்கள், இணைநோய்களைக் கொண்டவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஏனெனில் இவர்களின் உடலில் நோயெதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். மேலும் முதியவர்கள் இணை நோய்களையும் கொண்டிருப்பார்கள். எனவே இவ்விருவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக தங்களின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதில் கவனத்தை செலுத்த வேண்டும்.

H3N2 வைரஸ் தொற்றின் அறிகுறிகள்
H3N2 வைரஸ் தொற்றைக் கொண்டவர்கள் காய்ச்சல், இருமல், வாந்தி/குமட்டல், உடல் சோர்வு, உடல் வலி, வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகளை கொண்டிருப்பார்கள். தீவிர நிலையில் மூச்சுத் திணறல், கடுமையான காய்ச்சல், நெஞ்சு வலி, வதையும் சாப்பிட முடியாமல் அவதிப்படுவது, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகளும் தென்படும்.
இந்த வகை வைரஸ் தொற்று நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை அதிகம் தாக்கக்கூடியது என்பதால், இந்த வைரஸ் தொற்றில் இருந்து தங்களை காத்துக் கொள்ள சுத்தத்தைக் கடைப்பிடிப்பதோடு, கூட்ட நெரிச்சல் உள்ள பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும், வெளியே செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டும். முக்கியமாக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். இப்போது H3N2 வைரஸ் தொற்றில் இருந்து விடுபட சாப்பிட வேண்டிய உணவுகள் சிலவற்றைக் காண்போம்.

மஞ்சள்
தினசரி சமையலில் சேர்க்கப்படும் ஒரு மசாலா பொருள் தான் மஞ்சள். இந்த மஞ்சளில் குர்குமின் என்னும் செயலில் உள்ள பொருள் உள்ளது. இது ஆன்டி-ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-வைரஸ் செயல்பாடுகளை கொண்டுள்ளது. இந்த மஞ்சள் உணவில் தினமும் சேர்த்து வந்தால், அது குறிப்பிட்ட வைரஸ்கள் மற்றும் பிற தொற்றுகளின் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாக்கும். சிறப்பான பலனைப் பெற வெதுவெதுப்பான பாலில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடித்து வர வேண்டும்.

புதினா
புதினாவில் சக்தி வாய்ந்த ஆன்டி-வைரல் பண்புகள் உள்ளன. இது சளி, இருமல் மற்றும் பிற சுவாச தொற்றுகளுக்கு திறம்பட சிகிச்சைஅளிக்கும். இந்த புதினா இலைகளில் செயலில் உள்ள மென்தால் மற்றும் ரோஸ்மேரினிக் அமிலம் உள்ளன. இவை வலுவான ஆன்டி-வைரல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.
எனவே வைரஸ் தொற்றுகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், புதினா டீயை தயாரித்து தினமும் குடித்து வாருங்கள். இதனால் வைரஸ் தொற்றுகளின் அபாயத்தைக் குறைக்கலாம்.

பூண்டு
சமையலறையில் உள்ள மிகவும் பிரபலமான ஒரு மருத்துவ குணம் கொண்ட பொருள் தான் பூண்டு. இந்த பூண்டு பழங்காலம் முதலாக நாட்டு வைத்தியத்தில் பல தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றநன. பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் தான், உணவிற்கு நல்ல மணத்தையும், சுவையையும் தருகின்றன. மேலும் இதில் உள்ள க்யூயர்சிடின் மற்றும் பிற சத்துக்கள், வைரஸ்களை எதிர்த்துப் போராடுவதோடு, தொற்றுகளின் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும் பூண்டு இன்ப்ளூயன்சா ஏ மற்றும் பி, வைரல் நிமோனியா, ரினோவைரஸ் போன்றவற்றிற்கு எதிராக செயல்படுவதில் மிகவும் பயனுள்ளதான பல ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.
அதற்கு தினமும் 1-2 பூண்டு பற்களை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். இதனால் உடலில் ஆன்டி-வைரல் செயல்பாடுகள் தூண்டப்படுவதோடு, நோயதிர்ப்பு சக்தியும் மேம்படும்.

சோம்பு
சமையலறையில் உணவிற்கு நல்ல மணத்தைத் தரும் மற்றொரு அற்புதமான பொருள் தான் சோம்பு. இந்த சோம்பு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலில் உள்ள வீக்கத்தைக் குறைக்கவும், வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் உதவுகின்றன. இதற்கு அதில் உள்ள டிரான்ஸ்-அனெத்தோல் என்ற செயலில் உள்ள பொருள் தான் காரணம். இது தவிர, சோம்பில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வலுவான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன.
இத்தகைய சோம்பை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரை வடிகட்டி குடித்து வந்தால், சளி தொல்லை, சைனஸ் மற்றும் சுவாச தொற்றுகளில் இருந்து விடுபடலாம்.

துளசி
புனிதமான மற்றும் மருத்துவ குணம் வாய்ந்த ஒரு செடி தான் துளசி. இந்த துளசியில் ஆன்டி-வைரல், அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆன்டி-பாக்டிரியல் போன்ற பண்புகள் அதிகமாக உள்ளன. துளசியில் உள்ள அபிஜெனின் மற்றும் உர்சோலிக் அமிலம் போன்ற சேர்மங்கள் ஹெர்பீஸ் வைரஸ், ஹெபடைடிஸ் பி மற்றும் எண்டோவைரஸிற்கு எதிராக செயல்படுவதில் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளன.
ஆகவே வைரஸ் தொற்றுகள் ஏற்படாமல் இருக்க நினைத்தால், துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, அந்நீரை குடித்து வாருங்கள். இதனால் நோயெதிர்ப்பு சக்தி வலுவாவதோடு, காய்ச்சல், இருமல், சளி, சுவாச தொற்றுகளில் இருந்தும் விடுபடலாம்.

இஞ்சி
சமையலில் பயன்படுத்தப்படும் மற்றொரு பொருள் தான் இஞ்சி. இந்த இஞ்சியும் பழங்காலம் முதலாக கை வைத்தியத்தில் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஏனெனில் இஞ்சியில் ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை அதிகமாக உள்ளன. முக்கியமாக இஞ்சியில் ஜின்ஜெரல்கள் மற்றும் ஜின்ஜெரோன் போன்ற சேர்மங்கள் உள்ளன. இவை உடலில் வைரஸ்களின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. சிறப்பான பலனைப் பெற இஞ்சியைக் கொண்டு டீ தயாரித்து தினமும் குடித்து வாருங்கள்.
குறிப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகள் அனைத்தும் வைரஸ்களை எதிர்த்துப் போராடும் ஆன்டி-வைரஸ் பண்புகளைக் கொண்டவை மட்டுமின்றி, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளும் கூட. எனவே இந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்து வருவதன் மூலம், H3N2 வைரஸ் தொற்றின் அபாயத்தைத் தடுக்கலாம்.



Click it and Unblock the Notifications