Latest Updates
-
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க..
படுக்கையில் நீண்ட நேரம் இன்பத்தை அனுபவிக்கணுமா? அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க...
வைட்டமின்கள், நார்ச்சத்துகள், உப்புகள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்த ஏராளமான பழங்கள் உள்ளன. இந்த பழங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, விறைப்புத்தன்மை பிரச்சனையில் இருந்து விடுபடவும் உதவும்.
உலகம் முழுவதும் ஆண்களில் விறைப்புத்தன்மை தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருகின்றன. ஒரு ஆண் விறைப்புத்தன்மை பிரச்சனையை சந்திப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் மன அழுத்தம், உயர் கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், மலச்சிக்கல், உடல் பருமன், மன இறுக்கம் மற்றும் சர்க்கரை நோய் போன்றவை அடங்கும்.

இந்த விறைப்புத்தன்மை பிரச்சனையை சரிசெய்வதற்கு பல்வேறு மருந்துகள் மற்றும் மருத்துவ நடைமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதே சமயம் பல இயற்கை மற்றும் பாதுகாப்பான வழிகளும் உள்ளன. அதுவும் இந்த பிரச்சனைக்கான காரணங்களை நீக்குவதன் மூலம் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்க முடியும். அதுவும் ஒருசில ஆரோக்கியமான உணவுகள், குறிப்பாக பழங்களை சாப்பிடுவதால் இப்பிரச்சனைக்கான காரணங்களை சரிசெய்யலாம்.
வைட்டமின்கள், நார்ச்சத்துகள், உப்புகள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்த ஏராளமான பழங்கள் உள்ளன. இந்த பழங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, விறைப்புத்தன்மை பிரச்சனையில் இருந்து விடுபடவும் உதவும். கீழே ஆண்கள் சந்திக்கும் விறைப்புத்தன்மை பிரச்சனையில் இருந்து விடுபட்டு, படுக்கையில் நீண்ட நேரம் இன்பத்தை அனுபவிக்க உதவும் பழங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பழங்களை அதிகம் சாப்பிட்டு வந்தால், விரைவில் விறைப்புத்தன்மை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

மாம்பழம்
மாம்பழங்கள் இயற்கையில் பாலுணர்ச்சியைத் தூண்டக்கூடியவை. எனவே இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், ஒட்டுமொத்த பாலியல் வாழ்க்கையையும் மேம்படுத்தலாம். மேலும் இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும் அற்புதமான பழமும் கூட. இதில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால், இது இனப்பெருக்க அமைப்பு உட்பட உடலின் திசுக்களை மீளுருவாக்கம் செய்ய உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்டு பண்புகள், இளமையிலேயே முதுமைத் தோற்றத்துடன் காணப்படுவதைத் தடுக்கிறது. மாம்பழத்தை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், அது எதிர்மறை எண்ணங்களைப் போக்கி, மனநிலையை மேம்படுத்தும். மாம்பழத்தை ஆண்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், அது விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வாழைப்பழம்
மாம்பழத்தைப் போலவே வாழைப்பழமும் பாலுணர்வைத் தூண்டும் மற்றும் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பழமாகும். வாழைப்பழம் ஒருவரது பசியைத் தணிப்பதுடன், மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கவும் உதவுகிறது. வாழைப்பழம் பொட்டாசியம் அதிகம் நிறைந்த பழம். எனவே இது இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது மற்றும் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. கூடுதலாக இது ஆணுறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவி புரிந்து, நீண்ட நேர விறைப்பிற்கு உதவுகிறது. வாழைப்பழத்தை தினமும் தவறாமல் உட்கொண்டு வந்தால், அது இரத்த சர்க்கரை அளவு மற்றும் கெட்ட கொழுப்பை குறைக்க உதவும்.

அத்திப்பழம்
அத்திப்பழத்தில் நார்ச்சத்து, பல்வேறு வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, பொட்டாசியம், காப்பர் மற்றும் மாங்கனீசு போன்றவை உள்ளன. இந்த அனைத்து சத்துக்களும் விந்து உற்பத்தியை அதிகரிக்க உதவுகின்றன. அத்திப்பழம் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு காரணமான அனைத்து காரணிகளுக்கும் சிகிச்சை அளிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், இவை இரத்த கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

திராட்சை
ஆண்கள் மற்றும் பெண்களின் கருவுறுதலை மேம்படுத்தும் ஓர் அற்புதமான பழம் தான் திராட்சை. இவை விந்து இயக்கம், விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் விந்துக்களின் அளவை அதிகரிக்க உதவுகின்றன. விறைப்புத்தன்மை பிரச்சனை மற்றும் முன்கூட்டிய விந்து வெளியேற்ற பிரச்சனை உள்ள ஆண்களுக்கு உலர் திராட்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், இவை கொழுப்புக்களைக் குறைக்க உதவுவதோடு, உடலுறுப்புக்களை வயதாவதிருந்து பாதுகாக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் ஏராளமாக உள்ளன.

மாதுளை
மாதுளை டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி மற்றும் இருதய அமைப்புக்கு நன்மை அளிப்பவை. ஏனெனில் இது நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியை மேம்படுத்த உதவுகிறது. மேலும், நைட்ரிக் ஆக்சைடு ஆக்ஸிஜனேற்ற செயல்முறை மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து நன்கு பாதுகாக்கப்படுவதையும் இது உறுதி செய்கிறது. மாதுளையை ஒருவர் வழக்கமாக சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தம் குறைவதோடு, தமனி சுவர்களில் ப்ளேக்குகள் உருவாவதைத் தடுக்கலாம்.

செர்ரி
செர்ரி பழங்களில் ஏராளமான அந்தோசையனின்கள் உள்ளன. இது தமனிச் சுவர்களின் ப்ளேக்குகள் படிவதைத் தடுக்கிறது மற்றும் பெருந்தமனி தடுப்பு நோயில் இருந்து பாதுகாக்கிறது. அதோடு, இது இனப்பெருக்க மண்டலத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவி புரிந்து, விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்கிறது. எனவே செர்ரி பழத்தை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள்.

தர்பூசணி
தர்பூசணியில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன. இதில் சிட்ருலின் அமிலம், ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் மற்றும் பொட்டாசியம் உள்ளன. சிட்ருலின் அமிலம் உடலில் அர்ஜினைனாக மாறுகிறது. இது டெஸ்டோஸ்டிரோனின் முன்னோடியான நைட்ரிக் அமிலத்தின் உற்பத்திக்கு அவசியமானது. மேலும், இது பிறப்புறுப்புகளில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதற்காக, இரத்த குழாய்களை நீர்த்துப்போக உதவுகிறது.

குறிப்பு
மேலே கொடுக்கப்பட்டுள்ள பழங்களை வழக்கமாக உட்கொண்டு வந்தால், அவற்றின் பாலியல் நன்மைகளை அனுபவிக்கலாம். விறைப்புத்தன்மை பிரச்சனை ஒரு ஆணின் சுயமரியாதையைப் பாதிப்பதோடு, விரக்தியை ஏற்படுத்திவிடும். எனவே விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதற்கு முன், ஒருசில மாதங்கள் உங்களின் அன்றாட உணவில் இந்த பழங்களை சேர்த்து வாருங்கள். இதனால் நிச்சயம் அந்த பழங்கள் உங்கள் பாலியல் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதை நீங்களே காணலாம்.



Click it and Unblock the Notifications