Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
ஆண்களே! உங்களுக்கு புரோஸ்டேட் வீக்க பிரச்சனை வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளை தொடாதீங்க...
வயது அதிகரிக்கும் போது ஆண்கள் புரோஸ்டேட் பிரச்சனையை அனுபவிக்க வாய்ப்புள்ளது. இது ஒரு பொதுவான நிலை. ஆனால் இதை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டுவிட்டால், அது புரோஸ்டேட் புற்றுநோய்க்கு வழிவகுத்துவிடும்.
புரோஸ்டேட் சுரப்பி என்பது ஆண்களின் சிறுநீர்ப்பைக்கு பின் அமைந்துள்ள ஒரு சிறிய வால்நட்ஸ் வடிவிலான சுரப்பி ஆகும். வயது அதிகரிக்கும் போது ஆண்கள் புரோஸ்டேட் வீக்க பிரச்சனையை அனுபவிக்க வாய்ப்புள்ளது. இது ஒரு பொதுவான நிலை. ஆனால் இதை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டுவிட்டால், அது புரோஸ்டேட் புற்றுநோய்க்கு வழிவகுத்துவிடும்.

அதிர்ஷ்டவசமாக, இந்த நிலையை சரியான உணவுகளை உண்பதன் மூலம் தடுக்கலாம் அல்லது இதன் அபாயத்தைக் குறைக்கலாம். அதோடு வழக்கமான உடற்பயிற்சியும் அவசியம். ஆனால் வழக்கமான உடற்பயிற்சியுடன் சேர்ந்து சரியான உணவுகளை உண்பது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். அதிலும் சாச்சுரேட்டட் கொழுப்பு குறைவான மற்றும் எளிய சர்க்கரைகள் மற்றும் அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இது தவிர ஒருசில உணவுகள் உண்பதைத் தவிர்க்க வேண்டும். கீழே புரோஸ்டேட் ஆரோக்கியத்திற்காக கட்டாயம் சாப்பிடக்கூடாத சில உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

புரோஸ்டேட் வீக்க பிரச்சனையின் அறிகுறிகள்
* சிறுநீர் கழிக்கும் போது முடிவில் சொட்டு சொட்டாக சிறுநீர் வருவது
* சிறுநீர் கழிக்க இயலாமை
* சிறுநீர்ப்பையில் உள்ள சிறுநீரை முழுமையாக வெளியேற்ற முடியாமை
* இரவு நேரத்தில் 2 முறைக்கு மேல் சிறுநீர் கழிப்பது
* சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது இரத்தம் கலந்த சிறுநீர்
* சிறுநீர் கழிக்க சிரமப்படுவது
* மெதுவாக சிறுநீர் கழிப்பது
* திடீரென்று சிறுநீர் கழிக்க தூண்டுவது

மாட்டிறைச்சி
உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, மாட்டிறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் புரோஸ்டேட் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். எனவே இந்த வகையான இறைச்சியை உண்ணும் பழக்கத்தை ஆண்கள் உடனே தவிர்க்க வேண்டும்.

பால் பொருட்கள்
ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஆய்வின் படி, கொழுப்பு நிறைந்த பாலை அன்றாடம் உட்கொள்வது புரோஸ்டேட் வீக்கம் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும். இது புரோஸ்டேட் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். ஆகவே கொழுப்பு நிறைந்த முழு பால் குடிப்பதை ஆண்கள் தவிர்ப்பதே நல்லது.

ஜங்க் உணவுகள்
ஜங்க் உணவுகளான பர்கர், பிரெஞ்சு ப்ரைஸ் போன்றவற்றில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இந்த வகை கொழுப்புள்ள உவுகளை அதிகம் உண்டால், அது புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் சீரழித்துவிடும். ஆகவே ஆண்கள் இம்மாதிரியான உணவுகளில் இருந்து விலகி இருப்பது நல்லது.

ஆல்கஹால்
மது அதிகம் அருந்துபவர்கள் புரோஸ்டேட் பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். ஆல்கஹால் மிதமான அளவில் குடித்தால் அதிக பாதிப்பு இருக்காது. ஆனால் அதிகம் குடித்தால், அது புரோஸ்டேட் ஆரோக்கியத்தைப் பாதித்து, புரோஸ்டேட் வீக்க பிரச்சனையை உண்டாக்கிவிடும்.

உப்பு
அதிகளவிலான உப்பை உணவில் சேர்க்கும் போது, அது தைராய்டு பிரச்சனை, இரத்த அழுத்த பிரச்சனை போன்றவற்றை உண்டாக்குவதோடு மட்டுமல்லாமல், புரோஸ்டேட் வீக்க அபாயத்தையும் அதிகரித்து, புரோஸ்டேட் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். எனவே உணவில் உப்பை குறைவாக சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.



Click it and Unblock the Notifications