Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
நுரையீரலை வலுப்படுத்தவும், ஆக்சிஜன் அளவை அதிகரிக்கவும் சாப்பிட வேண்டிய உணவுகள்!
நுரையீரலை எப்போதுமே ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் முக்கியம். கீழே நுரையீரலை வலுவாக்கவும், ஆக்சிஜன் அளவை அதிகரிக்கவும் உதவும் சில உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
நமது உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், நுரையீரல் நன்கு செயல்பட வேண்டியது அவசியம். நுரையீரலில் இருந்து வடிகட்டப்பட்ட பின்னரே ஆக்சிஜன் உடலின் ஒவ்வொரு பகுதியையும் அடைகிறது. எனவே நுரையீரலுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியம். உங்கள் நுரையீரல் நன்கு செயல்படாவிட்டால், நீங்கள் ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா, காசநோய் , புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மறுபுறம், கோவிட்-19 போன்ற தொற்றுநோயைத் தவிர்க்க, நுரையீரலை வலுவாக வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.

ஏனெனில் கொரோனா வைரஸ் நேரடியாக நுரையீரலைத் தாக்கும் என்றும், இதன் விளைவாக ஆக்சிஜன் அளவு குறைந்து மூச்சுத் திணறல் ஏற்படும் என்றும் சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா இரண்டாம் அலையில் சுமார் 60-65 சதவீத நோயாளிகள் சுவாசிப்பதில் சிரமத்தை சந்திக்கிறார்கள். மேலும் அவர்களின் ஆக்சிஜன் அளவு வேகமாக குறைந்தும் வருகிறது. 2-3 நாட்களுக்குள், ஆக்சிஜன் நிலையானது 80-க்கு கீழ் செல்கிறது. இந்த சூழ்நிலையில் உடனடியான ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இந்த காலகட்டத்தில் ஆக்சிஜன் கிடைக்காவிட்டால், நிலைமை மிகவும் தீவிரமாகிவிடும்.
எனவே நுரையீரலை எப்போதுமே ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் முக்கியம். கீழே நுரையீரலை வலுவாக்கவும், ஆக்சிஜன் அளவை அதிகரிக்கவும் உதவும் சில உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த உணவுகளை தற்போதைய சூழ்நிலையில் அதிகம் உட்கொள்வது மிகவும் நல்லது.

மஞ்சள்
மஞ்சளில் ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இது அனைத்து வகையான தொற்றுகளில் இருந்தும் பாதுகாப்பை வழங்கக்கூடியது. எனவே தினமும் இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் பாலில் மஞ்சள் தூள் சிறிது சேர்த்து கலந்து குடியுங்கள். அதோடு, நீரில் இஞ்சி, மஞ்சள் தூள், எலுமிச்சை, கிராம்பு, துளசி ஆகியவற்றைப் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் குடியுங்கள். இது நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்குவதோடு, நுரையீரலை வலிமையாகவும் வைத்துக் கொள்ளும்.

தேன்
ஆயுர்வேதத்தில் தேன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பொருளாகும். ஏனெனில் இதில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிகமாக உள்ளது. தேனை தினமும் உட்கொண்டு வந்தால், அது நுரையீரலை வலுவாக்கும். அதோடு, தேனை வெதுவெதுப்பான எலுமிச்சை நீரில் கலந்து, தினமும் காலையில் குடித்து வந்தால், உடலில் இருந்து நச்சுக்கள் முழுமையாக வெளியேற்றப்படும். மேலும் தேனை வீட்டில் தயாரிக்கும் கசாயத்துடன் சேர்த்தும் குடிக்கலாம்.

துளசி
துளசி இலைகளில் பொட்டாசியம், இரும்புச்சத்து, குளோரோஃபில் மக்னீசியம், கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி போன்றவை அதிகமான அளவில் உள்ளது. ஆகவே தினமும் 4-5 துளசி இலைகளை சாப்பிடுவது நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். அதுமட்டுமின்றி, ஆயுர்வேதத்தில் நுரையீரலை ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ள துளசி கொண்டு கசாயம் தயாரித்து குடிக்க அறிவுறுத்தப்படுகிறது.

அத்திப்பழம்
அத்திப்பழத்தில் பல அதிசயமான கூறுகள் உள்ளன. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், மக்னீசியம், காப்பர் மற்றும் இரும்புச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே இந்த அத்திப்பழத்தை உட்கொள்வது நுரையீரலை வலிமையாக்கும். இதன் மூலம், இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.

பூண்டு
பூண்டில் ஆன்டி-பயாடிக், பூஞ்சை எதிர்ப்பு, ஆன்டி-வைரல் பண்புகளுடன், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின்கள் போன்றவையும் நிறைந்துள்ளதால், இது நுரையீரலை வலிமையாக வைத்துக் கொள்ள உதவும். அதற்கு 2-3 பூண்டு பல்லை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இல்லாவிட்டால், பூண்டு பல்லை பாலில் தட்டிப் போட்டு காய்ச்சியும் குடிக்கலாம்.

ஆப்பிள்
தினமும் ஆப்பிளை சாப்பிடுவது நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும் என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. மேலும் ஆப்பிளை உட்கொள்வது ஆஸ்துமா மற்றும் நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதுடன் தொடர்பு கொண்டுள்ளது. இதற்கு ஆப்பிளில் உள்ள ப்ளேவோனாய்டுகள் மற்றும் வைட்டமின் சி போன்றவை தான் முக்கிய காரணம். எனவே நுரையீரல் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்க தினமும் ஆப்பிளை தோலுடன் சாப்பிடுங்கள்.

ப்ளூபெர்ரி
ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த ப்ளூபெர்ரியை உட்கொள்வது, நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தி பாதுகாப்பது உள்ளிட்ட பல ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடையது. ப்ளூபெர்ரிகள் மால்விடின், சயனிடின், பியோனிடின், டெல்பினிடின் மற்றும் பெட்டூனிடின் உள்ளிட்ட அந்தோசையனின்களின் வளமான மூலமாகும். அந்தோசையனின்கள் சக்திவாய்ந்த நிறமிகளாகும். அவை நுரையீரல் திசுக்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன.

க்ரீன் டீ
க்ரீன் டீயில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ள ஒரு ஆரோக்கியமான பானமாகும். எபிகல்லோகேட்டசின் கேலேட் (EGCG) என்பது க்ரீன் டீயில் குவிந்துள்ள ஒரு கேட்டசின் ஆகும். இது ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் ஃபைப்ரோஸிஸ் அல்லது திசுக்களின் வடுவைத் தடுக்கும் என்று ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் என்பது நுரையீரல் திசுக்களில் ஏற்படும் வடுக்களால் உண்டாக்கும் ஒரு நோயாகும். இந்த நோய்க்கு சிகிச்சையளிக்க EGCG உதவக்கூடும் என்று சில ஆராய்ச்சி காட்டுகிறது.

மஞ்சள் பூசணிக்காய்
பூசணிக்காயின் பிரகாசமான அடர் நிற சதைப்பகுதி நுரையீரல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் தாவர கவலைகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக அவை பீட்டா கரோட்டின், லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் உள்ளிட்ட கரோட்டினாய்டுகளால் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. எனவே அடிக்கடி மஞ்சள் பூசணியை உங்கள் உணவில் சேர்த்து நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

பீட்ரூட்
பீட்ரூட்டின் வண்ணமயமான தசைப்பகுதி மற்றும் கீரைகள் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தும் சேர்மங்களைக் கொண்டுள்ளன. பீட்ரூட் மற்றும் அதன் கீரைகளில் நைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. இவை நுரையீரல் செயல்பாட்டிற்கு பயனளிக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நைட்ரேட்டுகள் இரத்த நாளங்களை தளர்த்தவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், ஆக்ஸிஜன் அதிகரிப்பதை மேம்படுத்தவும் உதவுகின்றன.



Click it and Unblock the Notifications