Just In
- 2 min ago
தினமும் இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்துக் கொள்வது உங்களுக்கு புற்றுநோய் வராமல் தடுக்குமாம் தெரியுமா?
- 47 min ago
நீங்கள் தினமும் சாப்பிடும் இந்த 3 பொருட்கள் உங்களுக்கு மாரடைப்பு ஏற்படும் ஆபத்தை அதிகமாக்குமாம்... உஷார்!
- 1 hr ago
உங்க கணவன் & மனவிகிட்ட இந்த மோசமான பழக்கம் இருந்தா...நீங்க நரகத்துல மாட்டிகிட்டீங்கனு அர்த்தமாம்!
- 3 hrs ago
இந்த 5 ராசிக்காரங்கள செல்வமும், புகழும் தேடி வருமாம்... இந்த அதிர்ஷ்ட ராசிகளில் உங்க ராசி இருக்கா?
Don't Miss
- Sports
இது தோனியின் ஸ்டைல் ஆச்சே.. இங்கி, டெஸ்டில் ரிஷப் பண்ட் அடித்த காப்பி.. அவரே கூறிய உண்மை - விவரம்!!
- News
ஒபிஎஸ்ஸா? பாஜகவிலா? நிச்சயமாக வரவேற்போம்.. குதுகலமான சீனிவாசன்! ‘அவர்’ வந்தாலும் ஓகே தானாம்!
- Movies
இந்த வார ரிலீஸ்.. வசூலில் ராக்கெட்ரி, டி ப்ளாக் படங்களை தட்டித் தூக்கிய யானை.. முதல் நாள் நிலவரம்!
- Finance
குழந்தைகளின் கல்விக்கு இப்படியொரு திட்டமா.. வெறும் 150 ரூபாய் போதும்..!
- Technology
எச்சரிக்கை! உங்க Wi-Fi Router இந்த 4 கம்பெனியை சேர்ந்தது என்றால் உடனே மாத்திடுங்க!
- Automobiles
இனி தரம் குறைவான டயர்களை எல்லாம் தயாரிக்க முடியாது!! அதிரடி நடவடிக்கையில் மத்திய அரசு!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
உங்களுக்கு டெங்கு வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்க...
கொரோனாவில் இருந்து ஏதோ மீட்டுள்ள நிலையில் தற்போது இந்தியாவின் உத்தர பிரதேசம், ஹரியானா, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரகாண்ட், டெல்லி மற்றும் ஜம்மு & காஷ்மீர் போன்ற பகுதிகளில் டெங்கு வழக்குகளின் அதிகரிப்பு மிகவும் கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. எனவே இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாம் நமது ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
டெங்கு கொசுக்களால் பரவுகிறது. ஆகவே டெங்கு வராமல் இருக்க வேண்டுமானால், முதலில் வீட்டில் கொசு விரட்டிகளைப் பயன்படுத்துவது, கொசு உற்பத்தியைத் தவிர்ப்பது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றவற்றுடன், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளையும் உட்கொள்ள வேண்டும். இப்போது மனித உடலுக்குள் செல்லும் வைரஸ் உடன் கடுமையாக எதிர்த்துப் போராடும் அளவில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளின் பட்டியலைக் காண்போம்.

வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி ஏராளமாக நிரம்பியுள்ளது. இது வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குவதன் மூலம் வைரஸுக்கு எதிராக போராட உதவுகிறது. இந்த சி வைட்டமின் உடலில் உள்ள இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவி புரிந்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது. இந்த சிட்ரஸ் பழங்களாவன ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி மற்றும் பல அடங்கும். அதோடு இவற்றில் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகளும் அதிகம் நிரம்பியுள்ளன.

தயிர்
இது நிச்சயம் உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். ஆனால், தயிரில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் அதிகம் உள்ளன. இது தவிர, இது நல்ல தூக்கத்தை பெறவும், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. நீங்கள் ஒரு தயிர் பிரியர் என்றால், தினமும் ஒரு கப் தயிர் சாப்பிடுங்கள்.

மஞ்சள்
மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. மேலும் இது இந்திய சமையலறையில் பொதுவாக காணப்படும் பொருட்களில் ஒன்றாகும். இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகளைத் தவிர, நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தவும் பெரிதும் உதவுகிறது.

பூண்டு
மஞ்சளைப் போன்றே பூண்டும் இந்திய சமையலறையில் ஒரு முக்கிய உணவுப் பொருளாகும். பெரும்பாலான இந்திய உணவுப் பொருட்கள் பூண்டு இல்லாமல் முழுமையடையாது. ஏனெனில் இது தான் இந்த உணவின் சுவையையும், மணத்தையும் அதிகரிக்கிறது. பூண்டு உணவிற்கு சுவையை மட்டுமல்ல, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் பூண்டில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

இஞ்சி
குளிர்காலத்தில் இந்தியர்கள் பெரும்பாலும் உடலை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ள இஞ்சியைக் கொண்டு டீ போட்டு அதிகம் குடிப்பார்கள். இப்படிப்பட்ட இஞ்சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஓர் முக்கியமான உணவுப் பொருள். இது தொண்டைப்புண், உடல் வீக்கம், குமட்டல் மற்றும் டெங்கு காய்ச்சலின் பிற அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவியாக உள்ளது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், டெங்குவை எதிர்த்துப் போராடும் அளவில் நோயெதிர்ப்பு சக்தியைப் பெறலாம்.