டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க இந்த உணவுகளை எல்லாம் எடுத்துக்கோங்க, இதைக் கட்டாயம் தவிருங்கள்

ஏடிஸ் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபடுவதற்கு பப்பாளி இலை, மாதுளை, இளநீர், மஞ்சள், வெந்தயம், ஆரஞ்ச், ப்ரோக்கோலி, கீரை, கிவிப்பழம் ஆகியவற்றை உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதே ச

மழைக்காலம் வந்துவிட்டாலே மருத்துவமனைகள் எப்போதும் நிறைந்திருக்கும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை என அனைவரும் மருத்துவமனைக்குச் செல்வதற்கான முக்கிய காரணம் காய்ச்சலாகத் தான் இருக்கும். பெரும்பாலும் இவ்வகையான காய்ச்சலுக்கு காலநிலை மாற்றம் காரணமாக இருக்கும். அதைத் தாண்டி மழைக்காலங்களில் காய்ச்சலை உருவாக்குவதில் கொசுக்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. மலேரியா, சிக்கன் குனியா, டெங்கு, ஜிகா வைரஸ், உள்ளிட்ட நோய்களை கொசுக்கள் உருவாக்குகின்றன.

Dengue Fever Prevention: Foods to Eat and Avoid

காலநிலை மாற்றத்தால் வருகிற காய்ச்சல்கள் ஓரிரு நாள்களில் முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளும்போது போய்விடுகிறது. ஆனால் கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் வைரஸ் அல்லது ஒட்டுண்ணித் தாக்குதலால் ஏற்படுவதால் பலத்த சேதாரங்களை ஏற்படுத்துகிறது. மேலும் இவ்வகையான காய்ச்சல் நீண்ட நாட்களுக்கு நீடிக்கிறது. மேலும் உங்களை கசக்கிப் பிழிவதைப் போன்ற அனுபவத்தை தருவதால் உடல் அளவில் மட்டுமில்லாமல் மனதளவிலும் பெரிய பாதிப்பை சந்திப்பீர்கள். இங்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான உணவுக் கட்டுப்பாடுகள் குறித்து இந்தக் கட்டுரையில் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சல் என்பது டெங்கு வைரஸால் ஏற்படும் கொசுக்களால் பரவக்கூடிய ஒரு வெப்பமணடல நோய் ஆகும். ஏடிஸ் வகைக் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலுக்கு 2017ம் ஆண்டு மட்டும் 11552 பேர் மட்டும் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2016ம் ஆண்டை கணக்கிடும் போது இது பலமடங்கு அதிகம் என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

கேரளா முதலிடம்

கேரளா முதலிடம்

டெங்குவால் பாதிக்கப்படுபவர்களில் கேரளா முதலிடத்திலும் , இரண்டாம் இடத்தில் கர்நாடகாவும் மூன்றாமிடத்தில் தமிழகமும் இந்திய அளவில் இடம் பெற்றிருக்கின்றன.

அறிகுறிகள்

அறிகுறிகள்

அதிகமான காய்ச்சல், தலைவலி, வாந்தி, மூட்டு மற்றும் தசைகளில் வலி, தோல்களில் சொறி, போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு டெங்கு பாதிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. எனவே உடனடி மருத்துவரை அணுகி உறுதி செய்துக் கொண்டு முறையான சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

எப்படி பரவுகிறது

எப்படி பரவுகிறது

டெங்கு வைரஸ் பாதிக்கப்பட்ட ஒருவரை டெங்கு கொசு கடிக்கும் போது அந்த வைரஸ் கொசுவுக்கு பரிமாற்றமடைகிறது. இந்த பாதிப்புள்ள கொசு வேறொரு மனிதரைக் கடிக்கும் கொசு மூலமாக டெங்கு வைரஸ் அந்த மனிதரின் இரத்தத்துக்குள் சென்று நோய்த் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

டெங்கு காய்ச்சலில் இருந்து குணமாக சிறந்த உணவுகள்

டெங்கு காய்ச்சலில் இருந்து குணமாக சிறந்த உணவுகள்

பப்பாளி இலை, மாதுளை, இளநீர், மஞ்சள், வெந்தயம், ஆரஞ்ச், ப்ரோக்கோலி, கீரை, கிவிப்பழம் ஆகியவை டெங்கு காய்ச்சல் பாதித்தவர்கள் எடுத்துக் கொள்வது உடல்நலத்துக்கு நல்லது. மேலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பிலிருந்து குணமாவததற்கும் இது பெரிய அளவில் உதவுகிறது.

பப்பாளி இலை

பப்பாளி இலை

பப்பாளி இலையிலுள்ள பப்பையின் மற்றும் சைமபப்பைன் போன்ற நொதிகள் உள்ளன. இந்த நொதிகள் வயிறு வீக்கம், செரிமானம் மற்றும் செரிமானக் கோளாறுகளிலிருந்து உங்களை பாதுகாக்கிறது. 30மில் பசுமையான பப்பாளி இலையை ஜூஸாக எடுத்துக் கொள்வது இரத்த பிளேட்களை அதிகரிக்க உதவுகிறது.

மாதுளை

மாதுளை

பண்டைய காலத்திலிருந்தே மாதுளை ஆரோக்கியத்திற்காகவும் மருத்துவத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மாதுளை முதன்மையான சத்துக்களையும், கனிமங்களையும் கொண்டுள்ளது. எனவே மாதுளை டெங்கு காய்ச்சலால் ஏற்படுகிற உடல் அசதிகளுக்கெதிராக போராடும் ஆற்றலை தருகிறது. இதிலிருக்கிற இரும்புச் சத்து இரத்தம் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் தேவையான இரத்தத் தட்டுகளை தக்க வைத்திருக்க உதவுவுவதால் டெங்குவில் இருந்து விடுபடுவதற்கான முக்கியமான காரணியாக மாதுளை இருக்கிறது.

இளநீர்

இளநீர்

டெங்கு பொதுவாக உடலில் உள்ள நீர்ச்சத்தை இழக்கச் செய்கிறது.அப்படி ஏற்படுகிற சூழலில் உடனடியாக இளநீரை அருந்தும் போது நீர்ச்சத்துக் குறைபாடு சமன் செய்யப்படுகிறது. மேலும் இது எலெக்ட்ரோரைட்டுகளையும் உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்துகளையும் அளிக்கிறது

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சள் கிருமி நாசினியாகவும், வளர்ச்சிதை மாற்ற ஊக்கியாகவும் செயல்படுவதால் டெங்குவில் இருந்து விடுபடுவதற்கு பேருதவி செய்கிறது. மேலும் மஞ்சளை பாலுடன் கலந்து குடிக்கும் போது கூடுதல் பலன்களை அளிக்கும். ஏனெனில் பாலிலுள்ள கால்சியம் எலும்புகளுக்கு வலு அளிக்கும்.

வெந்தயம்

வெந்தயம்

வெந்தயம் மயக்க மருந்தைப் போல் செயல்பட்டு தூக்கத்தை ஊக்குவிப்பதால் வலிகளிலிருந்து தற்காலிக ஓய்வைப் பெறுவதற்கு உதவுகிறது. அது மட்டுமில்லாமல் அதிக காய்ச்சலை சமநிலைப்படுத்துவதற்கு வெந்தயம் பயன்படுவதால் டெங்கு போன்ற காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு இது மிகவும் ஏற்றது.

ஆரஞ்சு

ஆரஞ்சு

ஆரஞ்ச் பழங்களில் உள்ள ஆண்டி ஆக்சிடண்ட்கள் மற்றும் வைட்டமின் சி ஆகியவை டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபடுவதற்கு முக்கியப்பங்காற்றுகின்றன

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி

இரத்த பிளேட்டுகளை மறு உருவாக்கம் செய்யும் வைட்டமின் கே ப்ரோக்கோலியில் நிறைந்துள்ளது. டெங்கு நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த பிளேட்டுகளில் எண்ணிக்கை குறையும் போது ப்ரோக்கோலியை நிச்சயம் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இதில் ஆண்டி ஆக்சிடன்கள் மற்றும் கனிமச்சத்துகள் நிறைந்துள்ளன.

கீரை

கீரை

கீரைகளில் இரும்புச் சத்து மற்றும் ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இந்தச் சத்துகள் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை உயர்த்துகிறது. மேலும் இரும்புச்சத்து உள்ளதால் இரத்த தட்டுகளை உயர்த்துவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.

கிவி பழங்கள்

கிவி பழங்கள்

கிவி பழங்களில் வைட்டமின் ஏ, வைட்டமின் இ, மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துகளின் கூட்டுக் கலவையாக இருக்கிறது. இந்தச் சத்துகள் உடலில் உள்ள நீர்ச்சத்துக் குறைபாடு மற்றும் இரத்த அழுத்தத்தை சரி செய்கிறது. கிவி பழத்திலுள்ள காப்பர் இரத்த சிவப்பணுக்களை உருவாக்கி டெங்கு நோய்க்கு எதிராக எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.

இந்த உணவுகளை தொடாதீர்கள்

இந்த உணவுகளை தொடாதீர்கள்

டெங்கு காய்ச்சல் ஆரம்ப அறிகுறிகள் தோன்றிய பிறகு வேகமாக வளரக்கூடும். மேலும் இது உயர்நிலையை அடையும் போது மருத்துவரை அணுகி முறையான சிகிச்சைகளைப் பெற வேண்டும். மேலும் மேற்கூறிய உணவுகள் துணையாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவ சிகிச்சைத் தான் முதன்மையாக இருக்க வேண்டும். மேலும் சில தவிர்க்க வேண்டிய உணவுகள் கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்றன

எண்ணெய் / வறுத்த உணவு

எண்ணெய் / வறுத்த உணவு

எண்ணெய் அல்லது வறுத்த உணவுகள் அதீத கொழுப்புச் சத்துகளைக் கொண்டுள்ளன. எனவே இதை உண்பதன் மூலமாக உயர் இரத்த அழுத்தமும் கொழுப்பும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதித்து நோயின் பெருக்கத்திற்கு நாமே வழி அமைத்துக் கொடுத்தது போல் ஆகிவிடும்.

கார உணவுகள்

கார உணவுகள்

கார உணவுகளை உண்ணும் போது வயிற்றுக்குள் எண்ணற்ற அமிலங்களை சுரக்க வைக்கிறது. இந்த அமிலங்கள் அல்சருக்கு காரணமாகிறது. கார உணவுகளை உண்ணும் போது டெங்கு காய்ச்சல், அல்சர் என இரண்டு வியாதிகளுக்கு எதிராக சிகிச்சைப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதன்மூலம் நோய்பாதிப்பிலிருந்து வெளிவருவதற்கு ஆகக் கூடிய கால அளவை நாமே நீட்டிப்பதாக ஆகிவிடும்.

கார்பனேற்ற குளிர்பானங்கள்

கார்பனேற்ற குளிர்பானங்கள்

கடைகளில் பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்ட குளிர்பானங்கள் பெரும்பாலும் கார்பனேட்டட் குளிர்பானங்களாகத் தான் இருக்கும். கார்பனேட்டட் குளிர்பானங்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் போது மட்டுமல்ல எப்போதும் தவிர்க்க வேண்டியது மிகவும் முக்கியமானது. ஏனெனில் அதிக இரத்தத் துடிப்பு, சோர்வு, தசை முறிவு ஆகியவற்றை கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்கள் ஏற்படுத்துகிறது.

அசைவம்

அசைவம்

டெங்கு காய்ச்சல் ஏற்படும் போது அசைவ உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அசைவ உணவுகள் கொழுப்புகள் நிறைந்ததாக இருக்கும் . செரிமானம் ஆவதற்கு கூடுதல் நேரங்களை எடுத்துக் கொள்ளும். மேலும் பச்சைத் தண்ணீருக்கு பதிலாக கொதிக்க வைத்த நீரை பயன்படுத்த வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion