Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
உங்களுக்கு அலர்ஜி இருக்கா? அப்ப இந்த 5 உணவுகள சாப்பிடுங்க... இனிமே அலர்ஜியே வராதாம் தெரியுமா?
வெங்காயத்தில் ஒவ்வாமை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அதனால், இது ஒவ்வாமை பிரச்சனையை குறைக்க உதவும். இது தவிர, வெங்காயத்தில் இதுபோன்ற சில ரசாயனங்கள் காணப்படுகின்றன.
ஒவ்வாமை என்பது பல்வேறு வகையான விஷயங்களுக்கு நமது நோயெதிர்ப்பு மண்டலம் காட்டும் எதிர்வினையைத் தவிர வேறில்லை. தூசி மற்றும் அழுக்கில் இருந்து உணவு மற்றும் சில மருந்துகள் மற்றும் பூச்சிகள் வரை எதனாலும் ஒருவருக்கு ஒவ்வாமை பிரச்சனை ஏற்படலாம். இது கடுமையான அரிப்பு, எரியும் உணர்வுகள், தோல் பிரச்சினைகள் மற்றும் தூசி அலர்ஜியின் போது தொண்டை புண் போன்றவற்றை ஏற்படுத்தும். ஆனால், இதுபோன்ற ஒவ்வாமைகளை எதிர்கொள்ளும் போது நாம் எதை உட்கொள்ள வேண்டும் என்பது பெரும்பாலான நேரங்களில் நமக்குத் தெரிவதில்லை. அவற்றிலிருந்து விடுபட மருந்துகள் எடுத்துக்கொள்வது ஒரு வழியாகும். ஆனால் இதுபோன்ற ஒவ்வாமைகளை நாம் எதிர்கொள்ளும் போது வாழ்க்கை முறை மற்றும் உணவுத் தேர்வுகளில் கவனம் செலுத்துவது முக்கியம்.

ஏனெனில் அதைத் தூண்டக்கூடியது எது என்று உங்களுக்குத் தெரியாது. ஒரு ஆய்வின்படி, ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகளுடன் ஒவ்வாமை எதிர்ப்பு உணவுகளை உட்கொள்ளும்போது, அது விரைவாக குணமடைய வழிவகுக்கும். ஒவ்வாமையிலிருந்து விடுபட ஒருவர் தங்கள் உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய உணவுகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

மஞ்சள்
உங்கள் தினசரி உணவில் மஞ்சளை சேர்த்துக் கொள்ள நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். நம் முன்னோர்களும், மஞ்சளின் எண்ணற்ற மருத்துவ குணங்களை அறிந்து, அன்றாட உணவில் சேர்க்க நமக்கு அறிவுறுத்தி இருக்கிறார்கள். பல ஆய்வுகளின்படி, மஞ்சளில் உள்ள குர்குமின் அளவு ஒவ்வாமை அறிகுறிகளைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, சமைத்த காய்கறிகள், பருப்பு போன்ற தினசரி உணவில் மஞ்சளை சேர்த்துக் கொள்ளுங்கள் மற்றும் இரவில் மஞ்சள் கலந்த பாலை குடியுங்கள். இது உங்களுக்கு பல்வேறு அதிசய நன்மைகளை வழங்குகிறது.

வெங்காயம்
வெங்காயத்தில் ஒவ்வாமை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அதனால், இது ஒவ்வாமை பிரச்சனையை குறைக்க உதவும். இது தவிர, வெங்காயத்தில் இதுபோன்ற சில ரசாயனங்கள் காணப்படுகின்றன. அவை உங்கள் உடலில் ஒவ்வாமையால் ஏற்படும் பிரச்சனைகளைக் குறைக்க உதவும். நம் உணவில் வெங்காயம் முக்கிய பங்கை வகிக்கிறது. வெங்காயம் சேர்க்காத உணவுகளே மிகக்குறைவு. அதுமட்டுமல்லாமல், நீங்கள் வெங்காயத்தை அப்படியேவும் சாப்பிடலாம் மற்றும் ஜூஸ் செய்தும் குடிக்கலாம்.

தக்காளி
தக்காளியை மறக்காமல் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில், தக்காளியில் கரோட்டினாய்டுகள் உள்ளன. இது உடலில் ஹிஸ்டமைன் வெளியீட்டைத் தடுக்கிறது. இது அறிகுறிகளைக் குறைக்கும் போது ஒவ்வாமையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதை பச்சையாகவும் சாலட் வடிவிலும் காய்கறி உணவுகளிலும் சேர்த்து உட்கொள்ளலாம்.

வைட்டமின் சி நிறைந்த பழங்கள்
சிட்ரஸ் பழங்கள் வைட்டமின் சி நிறைந்ததாக அறியப்படுகிறது. இது பிளாஸ்மா அஸ்கார்பிக் அமிலத்தை அதிகரிக்கும். இது ஒவ்வாமை மற்றும் அதன் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதில் பல நன்மைகளை வழங்குகிறது. மேலும், வைட்டமின் சி நிறைந்த பழங்கள் உங்களுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. குறிப்பாக உங்கள் சருமத்திற்கு அதிசயங்களை செய்கிறது. ஒவ்வாமை பிரச்சனையையும், ஒவ்வாமையால் ஏற்படும் சரும பிரச்சனையையும் தடுக்க இவை உதவும்.

இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்
இஞ்சியில் காணப்படும் ஜிஞ்சரால் எனப்படும் இரசாயனம், உடலில் ஏற்படும் ஒவ்வாமைகளை கட்டுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதை தேநீர் கலவைகளிலும் சமைத்த கறி மற்றும் காய்கறி உணவுகளிலும் பயன்படுத்தலாம். இவை அலர்ஜியால் ஏற்படும் பிரச்சனைகளை குறைக்க உதவும்.



Click it and Unblock the Notifications