For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க தினமும் சாப்பிடற இந்த 7 உணவும் சீனாவுல இருந்து தான் வந்துச்சாம்..! அதிர்ச்சி தகவல்!

நாம் அன்றாடம் பயன்படுத்துகிற பல பொருட்கள் சீனாவில் இருந்து தான் உற்பத்தியாகி வருகிறது. இதன் பூர்வீகமும், இதன் முழு வளர்ச்சியும் சீனாவையே சார்ந்திருக்கின்றன.

|

"மேட் இன் சீனா" இந்த வாசகத்த பெரும்பாலும் பல பொருட்களில் பார்த்திருப்போம். இது மிகவும் சகஜமான வார்த்தை என்பது நமக்கு நன்கு தெரிந்திருக்கும். இதை காணும் போது நமது உள் நாட்டு உற்பத்தியை விடவும் வெளிநாட்டு உற்பத்தி தான் அதிக அளவில் உள்ளது என்பது உறுதியாகிறது. இது உணவு பொருள் முதல் சாதாரண இயந்திர பொருள் வரை இந்த நிலையே தான் ஏற்பட்டுள்ளது. நாம் அன்றாடம் பயன்படுத்துகிற பல பொருட்கள் சீனாவில் இருந்து தான் உற்பத்தியாகி வருகிறது.

Foods that actually originated in China

இதன் பூர்வீகமும், இதன் முழு வளர்ச்சியும் சீனாவையே சார்ந்திருக்கின்றன. அந்த வகையில் நாம் தினமும் பயன்படுத்தும் சில உணவு பொருட்களை சொல்லலாம். இந்த வகையான உணவு பொருட்கள் சீனாவை தான் பூர்வீகமாக வைத்துள்ளது என்பது இத்தனை நாட்களாக நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இனி இவற்றை பற்றிய முழு விவரத்தையும் இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஐஸ் கிரீம்

ஐஸ் கிரீம்

என்னத்தான் ஐஸ்கிரீமை பெர்சியர்களும், ரோமானியர்களும் கண்டறிந்தாலும், இதில் பாலை சேர்த்து முழு வடிவத்தை தந்தது சீனர்கள் தான். இனி ஐஸ்கிரீமின் இந்த உண்மையான பூர்வீகத்தை அறிந்து கொண்டு சாப்பிடுங்கள்.

கிவி பழம்

கிவி பழம்

கிவி பழமானது நியூசிலாந்தில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டு முதன் முதலில் அறிமுகப் படுத்தபட்டது என பலரும் நினைத்து கொண்டுள்ளனர். ஆனால், இதன் உண்மையான பூர்வீகம் சீனா தான் என வரலாறுகள் சொல்கின்றன. பனிக்கால போரின் போதே இந்த கிவி பழத்தை சீனர்கள் சாப்பிட்டுள்ளனர்.

MOST READ:இந்த 7 வகையான டீயில ஏதாவது ஒன்ன தினமும் குடிச்சிட்டு வந்தா மூளை சுறுசுறுப்பாகும்..!

நூடுல்ஸ்

நூடுல்ஸ்

உலக அளவில் மிக முக்கிய பங்கு இந்த உணவிற்கு உண்டு. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை இந்த உணவிற்கு அடிமையாக உள்ளனர் என்றே சொல்லலாம். இதன் பூர்வீகம் சீனா என்பது குறிப்பிடத்தக்கது.

கேட்ச் அப்

கேட்ச் அப்

தக்காளி சாஸ் என்று நம்மால் அறியப்பட்டிருக்கும் இந்த கேட்ச் அப் சம காலத்தில் சீனா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் பிரபமாலானது. இருப்பினும் வரலாற்றை ஆய்வு செய்து பார்த்தால் இதை முதன் முதலில் உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள் சீனர்கள் என தெரிய வரும்.

சூசி

சூசி

இது ஒரு புது வகையான உணவாகும். இதை ஜப்பானியர்கள் கண்டறிந்த உணவு கிடையாது. அரிசியை வைத்து தயாரிக்கப்படும் இந்த உணவானது சீனர்களால் தான் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. உலக அளவில் இதன் ருசி மிகவும் பிரபலமானது.

MOST READ: உடலுறவிற்கு முன் இருவரும் சேர்ந்து கட்டாயம் இவற்றை சாப்பிடணும்! காரணம் தெரியுமா?

பீர்

பீர்

இன்று நாம் பயன்படுத்தும் பீரை வேறு விதத்தில் அறிமுகம் செய்தவர்கள் சீனர்கள் தான். அரிசி, தேன், மேலும் பல பழ வகைகளை கொண்டு இதை ஆரம்ப காலத்தில் உற்பத்தி செய்தனர். அதன் பின்னர் தான் இது உலக அளவில் பீர் என அறியப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods that actually originated in China

Here we listed some of the foods that actually originated in China.
Story first published: Saturday, March 23, 2019, 20:35 [IST]
Desktop Bottom Promotion