Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
ஆஃப் பாயில் சாப்பிட்டதால் எட்டு வயது சிறுமிக்கு மூளை முழுக்க புழு... அடக்கொடுமையே!
8 வயது சிறுமியின் மூளையில் நூற்றுக்கணக்கான புழுக்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அந்த கதையை நீங்களே பாருங்கள். அதுபற்றிய ஒரு விரிவான தொகுப்பு தான் இது.
லீமாவுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது எட்டு. இவருக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டு துடித்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு முறை தலைவலிக்கும் போது தன் பெற்றோரிடம் சென்று சொல்லி அழுது வந்தாள். பெற்றோர்களும் நாம் வழக்கமாகத் தலைவலிக்கு கொடுக்கப்படும் மருந்துகளைக் கொடுத்துப் பார்த்தார்கள். ஆனால் லீமாவுக்கு கொஞ்சம் கூட தலைவலி குறைந்த பாடில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதுதான் லீமாவின் பெற்றோருக்கு பேரிடி காத்துக் கொண்டிருந்தது.

தொடர்ந்து ஆறு மாதங்களாக தலைவலியை குறைக்க முடியாமல் டெல்லிக்கு அருகே உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபபட்டார். மருத்துவரும் சோதித்துப் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்தார். மூளையில் இருக்கும் வீக்கத்துக்கான காரணத்தை அறிய தலையை ஸ்கேன் செய்து பார்த்தபோது, லீமாவின் மூளைக்குள் நூற்றுக்கணக்கான முட்டைகள் இருந்திருக்கின்றன.

மூளை வீக்கம்
லீமாவுக்கு மூளையில் வீக்கம் இருந்திருக்கிறது. இந்த வீக்கத்தைக் குறைப்பதற்காக ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தார் லீமா.

திடீர் எடை
ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டதால் லீமாவுக்கு 8 வயதிலேயே உடல் எடையானது 40 கிலோவிலிருந்து 60 கிலோவாக அதிகமாகிவிட்டது. உடல் எடை அதிகமாக அதிகமாக அவளுக்கு நடப்பதில் பிரச்சினை, மூச்சு விடமுடியாமல் தவிப்பது போன்ற பிரச்சினைகளும் கூடவே இருந்தன. தொடர்ந்து முழுமையாக மருத்துவமனையை மட்டும் சார்ந்து இருக்கும் நிலை அவளுக்கு உருவானது.

என்ன நோய் அவளுக்கு?
ஒருநாள் தலைவலியால் மயக்கமே அடைந்து விட்டாள் லீமா. மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லீமாவுக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் தான் தெரிய வந்தது லீமா நியூரோ சிஸ்டிக் சிரோஸிஸ் (neuro cystic sarcosis) என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

முட்டைகள்
மயக்க நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட லீமாவுக்கு உரிய சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன. அவளுடைய மூளை நரம்பு மண்டலத்தை பரிசோதித்த போது தான் மருத்துவரும் அதிர்ந்து போனார். ஏனெனில் லீமாவின் மூளைக்குள் நூற்றுக்கான வெள்ளை நிறப் புள்ளிகள் இருப்பது கண்டறியப்பட்டது. அது என்னவென்று சோதித்துப் பார்த்தார்கள். அது என்னவென்று தெரியுமா? ஆம் அவ்வளவும் நாடாப் புழுக்களின் முட்டைகள்.

ரத்த அழுத்தம்
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போதே லீமாவுக்கு ரத்த அழுத்தமும் அதிகமாகவே இருந்தது. அதனால் மிக கவனமாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். நாடாப் புழுக்கள் கொடுத்த அழுத்தமானது மூளையை பாதித்ததோடு மூளையின் செயல்பாட்டையும் நிறுத்திவிட்டது. அதற்காக முதலில் மூளையில் அழுத்தம் குறைவதற்கான மருந்துகள் கொடுக்கப்பட்டன. பின்னர் கட்டி போல இருந்த முட்டைகளைக் கொல்வதற்கு மருந்துகள் கொடுக்கப்பட்டன.

அபாயங்கள்
மூளையில் உள்ள நாடாப்புழுக்களின் முட்டைகளை அழிப்பதற்கு மருந்து கொடுப்பது இன்னும் கூடுதல் சிக்கல்களையே கொடுக்கும். ஏனென்றால் அந்த சமயங்களில் மூளைக்கு அழுத்தங்களையும் அதிகரிக்கச் செய்யும். மூளையில் உள்ள நாடாப்புழுக்களை அழிக்க மருந்துகள் கொடுக்கப்பட்டாலும் கூட, முட்டைகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே தான் இருக்கும்.

வலிப்பு உண்டாக வாய்ப்பு
இந்த மருந்துகள் மூலம் வலிப்பு நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளும் உண்டு என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். அரைகுறையாக சமைக்கப்பட்ட உணவு, சுகாதாரமின்மை ஆகியவை நாடாப்புழுக்கள் வயிற்றுக்குள் போக காரணமாகின்றன. அங்கிருந்து ரத்த ஓட்டத்தோடு கலந்து உடலின் பல்வேறு பாகங்களுக்கும் செல்கின்றன. வலிப்பு நோய் ஏற்பட நாடாப்புழுக்களும் மிக முக்கியக் காரணமாக அமைகின்றன.

எவ்வளவு புழுக்கள் இருக்கும்?
பொதுவாக மனித உடலுக்குள் நாடாப் புழுக்கள் இருப்பது இயற்கையான விஷயம் தான். இந்தியாவில் மட்டும் கிட்டதட்ட 12 லட்சம் மக்களுக்கு இந்த நாடாப் புழுக்களால் வலிப்பு ஏற்படும் பாதிப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. நாடாப்புழுக்கள் ஒருவகை ஒட்டுண்ணி ஆகும். ஊட்டச்சத்துக்காக ஒருவரைச் சார்ந்திருக்கும் உயிரினமான இது உணவை கிரகிப்பதற்காக நமது உடலுக்குள்ளே இருக்கிறது. நாடாப்புழுக்களில் மட்டும் கிட்டதட்ட 5000 க்கும் அதிகமான வகைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது 1 மில்லிமீட்டரில் இருந்து 15 மில்லி மீட்டர் வரை நீண்டு வளரக் கூடியது.

காரணம் என்ன?
முழுமையாக வேக வைக்கப்படாத உணவுகளைச் சாப்பிடுவது தான் இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
சரியாக வேக வைக்காத முட்டை, காய்கறிகள், முட்டைகோஸ், கீரைகள் ஆகியவற்றாலும் இப்படி லீமாவைப் போன்று புழுக்களை உற்பத்தி செய்யும்.
அதோபோல் மாட்டிறைச்சி, சிக்கன், ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி, மீன் போன்ற மாமிச உணவுகள் கட்டாயம் நன்கு வேகவைக்கப்பட வேண்டும். ஏனென்றால் இவற்றில் லார்வாக்கள் அதிகம் இருப்பதால் இவை நாடாப்புழுக்களை அதிக அளவில் உற்பத்தி செய்து விடும்.
இனியாவது ஆஃப் பாயில் பிரியர்கள் அதை ஃபுல் பாயிலாகச் சாப்பிடுங்கள்.



Click it and Unblock the Notifications











