Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
ஆண்களின் பாலுணர்வைத் தூண்டும் டாப் 10 உணவுகள்!
இங்கு ஆண்களின் பாலுணர்வைத் தூண்டும் டாப் 10 உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
பழங்காலம் முதலாக ஆண்கள் படுக்கையில் நீண்ட நேரம் குதூகலமாக நீண்ட நேரம் செயல்பட உதவும் மற்றும் பாலுணர்ச்சியைத் தூண்டும் மற்றும் படுக்கையில் வாழ்க்கைத் துணையை திருப்திப்படுத்த உதவும் ஒவ்வொரு வழிகளையும் தவறாமல் பின்பற்றி வருகின்றனர். அதில் பொதுவான ஓர் வழி தான் பாலுணர்ச்சியைத் தூண்டும் உணவுகள்.

உலகைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் வாழ்பவர்கள் பாலுணர்ச்சியைத் தூண்டும் உணவுகளை உட்கொண்டு வருகிறார்கள். இந்த உணவுகள் ஒருவரது பாலுணர்ச்சியை அதிகரிப்பதோடு, ஒருவருக்கு இருக்கும் பாலியல் கோளாறுகளையும் சரிசெய்யும். ஆண்களுக்கான பாலுணர்ச்சியைத் தூண்டும் உணவுகள், இன்று ஏராளமான ஆண்கள் சந்திக்கும் விறைப்புத்தன்மை கோளாறு, முன்கூட்டியே விந்துதள்ளல் போன்றவற்றிற்கும் சிகிச்சை அளிக்கும்.
அதோடு இந்த உணவுகள் ஆண்களின் பாலுணர்ச்சியை தூண்டி, படுக்கையில் சிறப்பாக செயல்படச் செய்யும். மேலும் இந்த உணவுகள் ஒருவரது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, வலிமைப்படுத்தும். சரி, இப்போது ஆண்களின் பாலுணர்ச்சியைத் தூண்டும் உணவுகள் எவையென்று காண்போம்.

பாதாம்
பாதாம் மிகச்சிறந்த பாலுணர்ச்சியைத் தூண்டும் உணவாகும். மேலும் இது கருவளத்தை மேம்படுத்தும் உணவுகளுள் ஒன்றும் கூட. இந்த பாதாமில் ஏராளமான அளவில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது இனப்பெருக்க செயல்பாடு, ஹார்மோன்களின் உற்பத்தி, கருவளம் மற்றும் ஆரோக்கியமான பாலுணர்ச்சி போன்றவற்றை சிறப்பாக வைத்துக் கொள்ளும். அதற்கு பாதாமை தினமும் உட்கொள்வதோடு, பாதாம் எண்ணெயால் மசாஜ் செய்வதன் மூலம், பாலியல் செயல்பாடு சிறப்பாக இருக்கும்.

அஸ்பாரகஸ்
ஆயிரம் வருடங்களாக அஸ்பாரகஸ் பாலுணர்ச்சியைத் தூண்டும் சிறப்பான உணவுப் பொருளாக புகழப்பட்டு வருகிறது. அஸ்பாரகஸில் அஸ்பார்டிக் அம்லம் உள்ளது. இது பலவீனம் மற்றும் பாலியலில் உள்ள நாட்டத்தைக் குறைக்கும் அதிகப்படியான அமோனியாவை நடுநிலையாக்கும். அஸ்பாரகஸில் உள்ள பி வைட்டமின் என்னும் ஃபோலேட், ஹிஸ்டமைன் உற்பத்தியை அதிகரிக்க உதவும். ஹிஸ்டமைன் என்பது ஆண்களின் பாலுணர்ச்சியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முக்கியமானதாகும்.

அவகேடோ
அவகேடோவில் கனிமச்சத்துக்கள் மற்றும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளது. அதிலும் இதில் கரோட்டினாய்டுகள், வைட்டமின் ஈ, நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 போன்றவை தான் இப்பழத்தை பாலுணர்ச்சியைத் தூண்டும் பழமாக காட்டுகிறது. இதில் உள்ள வைட்டமின் ஈ, பாலுறவில் ஈடுபடும் போது உச்சக்கட்ட இன்பத்தை அடைய உதவுகிறது. மேலும் அவகேடோவில் இருக்கும் அதிகளவிலான ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி9 மற்றும் வைட்டமின் பி6 அதிகளவு டெஸ்டோஸ்டிரோன் உற்பத்திக்கு உதவும். ஆகுவே வாரத்திற்கு 3 முறையாவது அவகேடோ பழத்தை சாப்பிடுங்கள்.

பட்டை
பட்டை மிகவும் பிரபலமான மசாலாப் பொருள். இது சமையலில் உணவின் நறுமணத்திற்காக தாளிக்கும் போது சேர்க்கப்படுகிறது. மேலும் இது மருத்துவ பண்புகள் நிறைந்தது மட்டுமின்றி, பாலுணர்ச்சியைத் தூண்டும் மசாலாப் பொருளும் கூட. பட்டையை சாப்பிட்டால், அது உடலின் வெப்பநிலையை அதிகரிக்க உதவுவதோடு, பாலுணர்ச்சியை அதிகரிக்கவும் செய்யும். முக்கியமாக பட்டையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் பராமரிக்க உதவும்.

தேன்
தேன் சுவைக்காக சேர்க்கப்படுவதோடு, மருத்துவ பண்புகள் நிறைந்த ஒன்று. அதோடு இது பாலுணர்ச்சியைத் தூண்டும் உணவுப் பொருளும் கூட. இதனை ஆண்கள் தாங்கள் அருந்தும் பானங்களில் சேர்த்து கலந்து குடித்தால், அது பாலுணர்ச்சியை மேம்படுத்தும். முக்கியமாக தேன் ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை ஊக்குவிக்கும் மற்றும் பெண்கள் தேனை உட்கொண்டால், அது ஈஸ்ட்ரோஜென் அளவை அதிகரிக்கும். ஆகவே படுக்கையில் சிறப்பாக செயல்பட, தினமும் வெதுவெதுப்பான பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து குடித்து வாருங்கள்.

இஞ்சி
இஞ்சி ஆண்களின் பாலுணர்ச்சியைத் தூண்டும் என்பது தெரியுமா? இஞ்சி நல்ல நறுமணம் மற்றும் ப்ளேவரைக் கொண்டது. இது உடலின் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சரிசெய்வதோடு, பாலுணர்ச்சியைத் தூண்டி, படுக்கையில் சிறப்பாக செயல்படச் செய்யும். மேலும் இஞ்சி உடலை சுத்தம் செய்ய உதவுவதோடு, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் செய்யும். உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருந்தால், விறைப்புத்தன்மை பிரச்சனை நீங்கும்.

மாதுளை
க்வின் மார்கரெட் பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, மாதுளை ஜூஸ் இயற்கையாக பாலுணர்ச்சியைத் தூண்டும் உணவுப் பொருளாம். இது ஆண்களின் உடலில் ஆண் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும். டெஸ்டோஸ்ரோன் என்னும் ஹார்மோன் பாலுணர்ச்சியைத் தூண்டுவதோடு, மனநிலையை சிறப்பாக இருக்கச் செய்து, மன அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தும். எனவே பாலுணர்ச்சியை அதிகரிக்க நினைத்தால், தினமும் சிறிது மாதுளையை சாப்பிடுங்கள் அல்லது மாதுளம் பழ ஜூஸைக் குடியுங்கள்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள பொட்டாசியம், உயர் இரத்த அழுத்தத்தை எதிர்த்துப் போராடி தடுப்பதோடு, விறைப்புத்தன்மை பிரச்சனையின் அபாயத்தைக் குறைக்கும். இதில் பீட்டா-கரோட்டீன் அதிகம் உள்ளது. அதனால் தான் இது ஆரஞ்சு நிறத்தில் உள்ளது. சர்க்கரைவள்ளிக் கிழங்கு உடலுக்கு வைட்டமின் ஏ சத்தை வழங்கி, இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

டார்க் சாக்லேட்
டார்க் சாக்லேட் ஆண்களுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இது பாலுணர்ச்சியைத் தூண்டும். டார்க் சாக்லேட்டில் க்ரீன் டீ அல்லது ரெட் ஒயினை விட அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இதில் உள்ள கெமிக்கலான பீனைல்எத்திலமைன், பாலுணர்ச்சியை அதிகரித்து, பாலியல் வாழ்க்கை சிறப்பாக வைத்துக் கொள்ளும். இதை ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் சிறிது சாப்பிடலாம். இதனால் பாலியல் வாழ்க்கை மிகவும் அற்புதமாக இருக்கும்.

தர்பூசணி
நேச்சுரல் வயாகரா என்று நிபுணர்களால் அழைக்கப்படும் ஒரு பழம் தான் தர்பூசணி. இந்த தர்பூசணி பழத்தை சாப்பிட்டால், அது உடல் முழுவதும் உள்ள இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, இரத்த ஓட்டத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளும். மேலும் தர்பூசணியில் உள்ள சிட்ருலின் என்னும் அமினோ அமிலம், பாலுணர்ச்சியை அதிகரிப்பதற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











