Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
தேங்காய் எண்ணெய் எவ்வளவு தீமைகளை ஏற்படுத்தும் தெரியுமா?
தேங்காய் எண்ணெய் என்றாலே அதன் நன்மைகள் மட்டும்தான் நம் நினைவுக்கு வரும். தேங்காய் எண்ணெய் ஒரு ஆரோக்கியமான பொருள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால் அதில் பக்கவிளைவுகள் இருப்பது மறுக்கமுடியாத ஒன்று.
நமது உணவில் இருந்து சரும மற்றும் கூந்தல் ஆரோக்கியம் வரை என அனைத்திற்கும் பயன்படும் ஒரு பொருள் தேங்காய் எண்ணெயாகும். தேங்காய் எண்ணெயை பயன்படுத்தாதவர்கள் என்று யாருமே இருக்க இயலாது. இந்த சூழ்நிலையில் உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு தகவல் என்னவென்றால் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

உண்மைதான் தேங்காய் எண்ணெய் என்றாலே அதன் நன்மைகள் மட்டும்தான் நம் நினைவுக்கு வரும். தேங்காய் எண்ணெய் ஒரு ஆரோக்கியமான பொருள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால் அதில் பக்கவிளைவுகள் இருப்பது மறுக்கமுடியாத ஒன்று. இந்த பதிவில் தேங்காய் எண்ணெயால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னெவென்பதை பார்க்கலாம்.

வயிற்றுப்போக்கு
தேங்காய் எண்ணெய் வயிற்றுப்போக்கை ஏற்படுத்துமா? பாக்டீரியாக்களை ஒழிப்பதற்காக பொதுவாக தேங்காய் எண்ணெயை வாய்வழியாக எடுத்துக்கொள்ளும் பழக்கம் உள்ளது. இந்த பாக்டீரியா ஒழிப்பு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அதில் முக்கியமானது வயிற்றுப்போக்குதான். இதனை தடுப்பதற்கு முதலில் சிறிய அளவில் குடித்து பார்க்கவேண்டும். அதனால் எதுவும் பக்கவிளைவுகள் ஏற்படவில்லை என்றால் தேவையான அளவு குடிக்க தொடங்கலாம்.

முகப்பரு
இது பெரும்பாலும் எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு ஏற்படும் பிரச்சினையாகும். தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம் முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழிக்க உதவுகிறது. ஆனால் அது சருமம் அதிக எண்ணெய் பசையுடன் இல்லாதவர்களுக்கு மட்டுமே. இல்லையெனில் இது நிச்சயம் பிரச்சினயை ஏற்படுத்தும்.

உயர் கொழுப்பு நிலைகள்
ஹார்வர்ட் பல்கலைக்கழக அறிக்கையின்படி மற்ற எண்ணெய்களான ஆலிவ் எண்ணெய் மற்றும் சோயா எண்ணெய் அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஆரோக்கியமானதல்ல. தேங்காய் எண்ணெய் உங்கள் உடலில் உள்ள கொழுப்பின் அளவை உடனடியாக அதிகரிக்கக்கூடும். இது கொழுப்பின் அளவை மட்டும் அதிகரிக்காமல் LDL என்னும் கெட்ட கொழுப்புகளையும் உடலில் அதிகரிக்கிறது.

குடல் இயக்கங்களில் சிக்கல்
தேங்காய் எண்ணெய் உபயோகிக்கும்போது அது குடல் இயக்கங்களில் சிக்கல்களை ஏற்படுத்தும். தேங்காய் எண்ணெயில் கேடை ஏற்படுத்தும் ப்ரெக்டொஸ் என்னும் பொருள் இல்லையென்றாலும் அதனால் தயாரிக்கப்படும் பொருட்களில் ப்ரெக்டொஸ் இருப்பதால் அது உங்களுக்கு செரிமான கோளாறுகள் மற்றும் குடல் புண்களை ஏற்படுத்தும். தேங்காய் எண்ணை அடிப்படையாகக் கொண்ட பல உணவுப் பொருட்களில் ப்ரெக்டொஸ் இருக்கிறது. ப்ரெக்டொஸ் வாயுக்கோளாறுகளையும் ஏற்படுத்தும்.

குழந்தைகளுக்கு அலர்ஜிகள்
தேங்காய் எண்ணெய் குழந்தைகளுக்கு நல்லது என்றாலும் சிலவற்றில் கவனத்தில் வைத்துக்கொள்வது அவசியம். குறிப்பாக தைராய்டு பிரச்சினையில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். ஒருவேளை உங்கள் குழந்தைக்கு ஹைப்போதைராய்டு என்றால் கண்டிப்பாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஏனெனில் சில குழந்தைகளுக்கு இது கடுமையான அலர்ஜியை ஏற்படுத்தும்.

இதய ஆரோக்கியம்
நிறைவுற்ற கொழுப்புகளை குறைவாக சாப்பிடும்போது அது உங்கள் இதயத்தை பாதுகாக்கும். ஆனால் தேங்காய் எண்ணெயில் அதிகளவு நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளது இதயத்திற்கு நல்லதல்ல. வெண்ணெய் மற்றும் இறைச்சியை விட தேங்காய் எண்ணெயில் அதிக கெட்ட கொழுப்புகள் உள்ளது.

தலைவலி
தேங்காய் எண்ணெயை தொற்று நோய்களுக்கு பயன்படுத்துவது குறிப்பாக ஈஸ்ட் தொற்றுநோய்க்கு பயன்படுத்தும்போது தலைவலி ஏற்படுவதாக பலர் கூறுகின்றனர். தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் ஈஸ்ட் செல்களை உடைக்கிறது இதனால் இரத்தத்தில் பூஞ்சை தொற்று கலக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.

தைராய்டு
தேங்காய் எண்ணெய் தைராய்டை குணப்படுத்தும் என்பது பழங்காலமாக இருக்கும் ஒரு நம்பிக்கை. ஆனால் அது உண்மையல்ல. ஏனெனில் இதற்கு போதுமான ஆதாரங்கள் இதுவரை மருத்துவத்துறையில் நிரூபிக்கப்படவில்லை.

கல்லீரல் பாதிப்பு
தேங்காய் எண்ணெயில் உள்ள நடுத்தர கொழுப்பு அமிலங்கள் கல்லீரலுக்கு சென்று அங்கிருந்து ஆற்றலாக மாற்றப்படுகிறது. மருத்துவ வல்லுனர்களின் கருத்துப்படி இந்த அமிலங்கள் கல்லீரலுக்கு கொண்டுவரப்படும் வேகம் கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். கல்லீரலில் ஏற்படும் இந்த அழுத்தம் அதுமட்டுமின்றி மற்ற பாகங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும். உங்களுக்கு ஒருவேளை ஏதேனும் கல்லீரல் பிரச்சினைகள் இருந்தால் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.



Click it and Unblock the Notifications