Latest Updates
-
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும்
காலை உணவாக பால் குடிப்பது சரியா? அப்ப வேற எப்போ குடிக்கணும்?
பால் பற்றிய பழங்கதைகளும் அதன் முக்கியத்துவம், காலை உணவின் அவசியம் ஆகியவற்றை இங்கே விவாதித்துள்ளோம்.
நமது வீடுகளில் நம் அம்மாக்கள் எப்பொழுதும் நம்மளிடம் தினமும் ஒரு பெரிய டம்ளர் பால் குடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது உண்டு. அதற்கு காரணம், இது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவருக்கும் ஒரு முழுமையான மற்றும் அத்தியாவசிய உணவாக கருதப்படுகிறது.

மேலும் பால் நமது சமையலறையில் இது மிக முக்கியமான பொருட்களுள் ஒன்றாகும். ஆனால் பால் உண்மையில் மிகவும் நல்லதா அல்லது அதில் இன்னும் வேரா எதாவது உள்ளதா ??

1. எலும்புகளை வலுவடைய
பால் உங்கள் எலும்புகளை வலுவாகச் செய்கிறதா இல்லையா என்பது இன்னும் ஒரு விவாதமாக உள்ளது. ஒரு ஆய்வின் படி, அமெரிக்காவைப் போன்ற அதிக நுகர்வு கொண்ட நாடுகளுடன் ஜப்பானை ஒப்பிடும்போது அமெரிக்காவில் ஆஸ்டியோபோரோசிஸ் அதிகமான விகிதத்தில் உள்ளது.
அதாவது ஜப்பானில் உள்ளவர்கள் பால் அவ்வளவாக உட்கொள்ளவில்லை; எனினும் அமெரிக்காவில் உள்ளவர்களே ஆஸ்டியோபோரோசிஸால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். மேலும், பால் குடிப்பது முறிவுகளுக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பை அளிக்காது.

2. பால் கால்சியத்தின் சிறந்த ஆதாரம்
பாலில் கால்சியம் நிறைய உள்ளது என்ற உண்மையை நம்மால் மறுக்க முடியாது. ஆனால், இது தான் மிகச் சிறந்த ஆதாரம் என்று நிச்சயமாக கூறமுடியாது. ராகி, ராஜ்மா, எள் மற்றும் சோயாபீன் போன்றவை கால்சியம் நிறைந்த உணவுகள் ஆகும். 100 கிராம் எள்ளில், 1300-1400 மி.கி. கால்சியம் உள்ளது; ஆனால் 100 மில்லியன் பாலில் வெறும் 280-300 மில்லி கால்சியம் உள்ளது.

3. பால் ஓர் முழுமையான உணவு
புரதம், வைட்டமின் A மற்றும் B12, ரிபோப்ளாவின், கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் பாலில் உள்ளது. ஆனால், வைட்டமின் C மற்றும் இரும்பு ஆகிய இரண்டு முக்கிய ஊட்டச்சத்துக்கள் பாலில் இல்லை. நீண்ட காலமாக உணவிற்கு பதில் பால் மட்டுமே பருகிவருவது இரும்புசத்து குறைபாட்டை ஏற்படுத்தும். பால் நிச்சயமாக உங்கள் உணவில் ஒரு பகுதியாக இருக்கவேண்டும். ஆனால் பால் மட்டுமே சாப்பிடுவது குறைபாடுகள் மற்றும் கலோரி பற்றாக்குறை ஏற்படுத்தும்.

4. காலையுணவுக்கு ஒரு டம்ளர் பால் குடிக்கலாம்
காலை உணவு தான் அந்த நாளின் முதல் உணவாகும். இதை நாம் எட்டு முதல் 10 மணி நேரம் இடைவெளிக்குப் பிறகு சாப்பிடுகிறோம். இதனால் உங்கள் காலை உணவு, கொழுப்பு மற்றும் புரதங்களின் கலவையாக இருப்பது அவசியம். பால் குடிப்பது தவறு இல்லை. அனால், உங்கள் நாளை தொடங்க நிச்சயமாக பால் மட்டுமே போதாது.

5. பால் அனைவருக்கும் முக்கியமானது
12 வயதிலிருந்து, பால் ஆரோக்கியமான உணவில் முக்கியமான பகுதியாக இருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பிறகு, அது விருப்பமானதாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஏனென்றால் அதற்குப் பிறகு நாம் சம எண்ணிக்கையிலான சத்துக்கள் கொண்ட பல உணவுகளை சாப்பிடக்கூடும். உதாரணமாக, எள் மற்றும் நட்ஸ். பெரியவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று தடவை பால் எடுத்துக்கொள்ளக்கூடாது.

6. குழந்தைகளுக்கு பால் அவசியம்
ஒரு வருடத்திற்கும் குறைவான குழந்தைகளுக்கு மாட்டுப்பால் கொடுப்பது சிறந்தது அல்ல. ஏன்னெனில், இது தன்னியக்க நோய் மற்றும் வகை -1 நீரிழிவுக்கு வழிவகுக்கலாம். ஆகவே, ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சாதாரண பால் அல்லது தாய்ப்பால் கொடுப்பதே சிறந்தது.

7. பால் குடிப்பது உங்கள் தோல்க்கு நல்லது
பால் நல்ல தண்ணீரைக் கொண்டுள்ளது, இதனால் உங்கள் ஸ்கின்னை ஹைட்ரடேட் ஆகா வைத்துக்கொள்ளும். ஆனால் பாலை கரைத்துவிட்டால், அது தோல் பிரச்சினைகள் மற்றும் முகப்பரு வெடிப்புகளுக்கு வழிவகுக்கும்.
சில சமயங்களில், மாட்டுப் பாலில் ஆக்ஸிடாஸின் நிறைய உள்ளது. இது மற்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.



Click it and Unblock the Notifications