For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த மசாலா பொருளை உணவில் சேர்த்துக்கொள்வது மார்பக புற்றுநோயை ஏற்படுத்தும்

இனிமையான வாசனையை கொண்ட சோம்பு நமக்கு ஏற்படும் சுவாசம் மற்றும் செரிமான கோளாறுகளை குணமாக்கக்கூடியது.ஆனால் சோம்பு பல பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும் என்பது மறுக்கமுடியாத ஒன்று.

|

நம் உணவுகளில் சுவைக்காகவும், வாசனைக்காகவும் பல மசாலா பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இது இந்திய உணவுகளுக்கே உண்டான தனிச்சிறப்பாகும். அந்த வகையில் உணவில் நாம் உணவுகளில் பழங்காலம் முதலே வாசனைக்காக சேர்த்துவரும் ஒரு மசாலா பொருள்தான் சோம்பு. கிட்டதட்ட தேங்காய் பயன்படுத்தும் அனைத்து உணவுகளிலும் சோம்பும் உடனுடன் சேர்க்கப்படுகிறது.

side effects of fennel seeds

இனிமையான வாசனையை கொண்ட சோம்பு நமக்கு ஏற்படும் சுவாசம் மற்றும் செரிமான கோளாறுகளை குணமாக்கக்கூடியது. மேலும் இது உணவின் சுவையையும் அதிகரிக்கக்கூடியது. ஆனால் சோம்பு பல பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும் என்பது மறுக்கமுடியாத ஒன்று. இந்த பதிவில் சோம்பினால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போட்டோடெர்மட்டிஸ் நோய்

போட்டோடெர்மட்டிஸ் நோய்

இது உங்களுக்கு புதியதாக தோன்றலாம், ஆனால் இது பலகாலமாக இருக்கும் ஒரு குறைபாடு ஆகும். அதன்படி நீங்கள் சூரிய ஒளியில் வெளியே வந்தால் உங்கள் உடலில் அரிப்புகள் மற்றும் எரிச்சல் உண்டாகும். இந்த அறிகுறி இருந்தால் உங்களுக்கு போட்டோடெர்மட்டிஸ் நோய் ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் சருமத்தில் சிவப்பு நிற புள்ளிகளும் தோன்றும்.

மருந்துகளின் குறுக்கீடுகள்

மருந்துகளின் குறுக்கீடுகள்

சில நேரங்களில் சோம்பு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஒருவேளை நீங்கள் வலிப்பு நோய்களுக்கு மருந்துகள் எடுத்து கொள்பவராக இருந்தால் நீங்கள் நிச்சயம் சோம்பை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளக்கூடாது. ஏனெனில் இந்த சோம்பு உங்கள் நிலையை மேலும் மோசமாக்கும்.

மார்பக வளர்ச்சி

மார்பக வளர்ச்சி

சோம்பால் ஏற்படும் பிரச்சினைகளில் முக்கியமான ஒன்று மார்பக வளர்ச்சி. பெண்களுக்கு பூப்பெய்திய பிறகு அவர்களுக்கு மார்பகங்கள் வளர தொடங்கும். இதனை பெண்கள் அதிகம் சேர்த்துக்கொள்ளும்போது அவர்களுக்கு முன்கூட்டியே இந்த பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.

தெர்மாட்டிஸிஸ்

தெர்மாட்டிஸிஸ்

தெர்மாட்டிஸிஸ் என்பது தோல் சம்பந்தமான ஒரு நோயாகும். இந்த பாதிப்பு ஏற்பட்டால் சருமத்தில் வீக்கம் மற்றும் பிளவுகள் ஏற்படும். இதற்கு காரணம் அவர்கள் அதிகம் அதிகம் சோம்பு சேர்த்துக்கொள்வதுதான்.

MOST READ: கண்கள் துடிப்பதை சாதாரணமா எடுத்துக்காதீங்க... அது எதோட அறிகுறின்னு தெரியுமா?

அலர்ஜிகள்

அலர்ஜிகள்

சோம்பு பலவித அலர்ஜிகளை ஏற்படுத்தக்கூடும். ஏற்கனவே அலர்ஜிகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது. அடிவயிற்று கோளாறுகள் மற்றும் மூச்சு திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட காரணம் சோம்புதான்.

மார்பக புற்றுநோய்

மார்பக புற்றுநோய்

சோம்பு மார்பக புற்றுநோய் ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவரீதியாக நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும் தாய்ப்பால் சுரப்பிற்காக சோம்பை உணவில் அதிகம் சேர்ப்பது மார்பக திசுக்களில் நேரடி விளைவை ஏற்படுத்தக்கூடும்.

கருப்பை பிரச்சினை

கருப்பை பிரச்சினை

சோம்பின் முக்கியமான பக்க விளைவுகளில் ஒன்று கருப்பையில் ஏற்படும் பிரச்சினைகள் ஆகும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் சோம்பு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும்.

என்சைம்களை தடுக்கிறது

என்சைம்களை தடுக்கிறது

சோம்பில் உள்ள மூலப்பொருட்கள் குறிப்பிட்ட சில என்சைம்களின் உற்பத்தியை தடுக்கிறது. இந்த நொதிகளின் உற்பத்தி குறையும்போது அது வளர்ச்சிதை மாற்றங்களை பாதிக்கும். எனவே சில மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது சோம்பை உணவில் சேர்த்துகொள்ளமல் இருப்பது நல்லது.

MOST READ: இந்த அறிகுறிகள் இருந்தால் பெண்களுக்கு ஹார்மோன் கோளாறுகள் உள்ளது என்று அர்த்தம்

பாலூட்டும் பெண்களுக்கு ஏற்றதல்ல

பாலூட்டும் பெண்களுக்கு ஏற்றதல்ல

பாலூட்டும் பெண்களுக்கு சோம்பு பல ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சோம்பை எந்த வடிவத்திலும் சேர்த்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும் அல்லது சோம்பின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

harmful side effects of fennel seeds

Fennel seed is used to cure various digestive and respiratory problems. But it has some harmful side effects also.
Story first published: Monday, November 19, 2018, 17:42 [IST]
Desktop Bottom Promotion