Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
முதுகுவலியை நிரந்தரமாக விரட்டும் பூண்டுப்பால்... செய்வது எப்படி?
கடுமையான முதுகுவலியைத் தீர்ப்பதற்கு பூண்டு பாலையும் அதை எப்படி தயாரிப்பது என்பது பற்றியும் இங்கே விளக்கமாகக் கொடுக்கப்பட்டள்ளது.
முதுகுவலி ஒரு காலத்தில் வயது முதிர்ச்சியின் காரணமாகவே வந்தது. ஆனால் இப்போதெல்லாம் மிக இளம் வயதிலேயே முதுகுவலி வந்துவிடுகிறது.

இதற்கு நம்முடைய வாழ்க்கை முறையில் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

முதுகுவலிக்கு காரணம்
நம்மில் பலருக்கும் மிகக் கடுமையாக இடுப்பு வலி அல்லது முதுகு வலி வந்து போகும். அதிலும் குறிப்பாகு, இன்றைக்கு இளைஞர்கள் நிறைய நேரம் இரு சக்கர வாகனங்களில் பயணம் மேற்கொள்வது, கம்யூட்டர் முன்பாக அதிக நேரம் செலவிடுவது ஆகியவை தான் முதுகுவலி உண்டாக மிக முக்கியக் காரணம்.

விளைவுகள்
இந்த கடுமையான முதுகுவலியின் காரணமாக, கனமான பொருள்களை நம்மால் தூக்கிச் செல்ல முடியாது. ஓரிடத்தில் அதிக நேரம் நிறகவோ உட்காரவோ முடியாமல் போகும். இதுவே 40 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால், முதுகு, கை, கால் ஆகிய மூன்று பகுதிகளிலும் மிகக் கடுமையான வலி உண்டாகும். இடுப்பு மூட்டுக்களில் உள்ள நரம்புகளில் கூட பிரச்னைகள் உண்டாகும்.

தீர்வு
இந்த மூட்டுவலிக்கு என்னதான் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டாலும் அது தற்காலிகமான தீர்வாக மட்டுமே அமையும். இந்த பிரச்னையை நிரந்தரமாகப் போக்க வேண்டுமென்றால், அதற்கு ஆயுர்வேதமும் வீட்டு வைத்தியமும் தான் நிரந்தரத் தீர்வினைத் தர முடியும். இந்த கடுமையான மூட்டுவலிக்கு நிரந்தரத் தீர்வாக பூண்டுப்பால் இருந்திருக்கிறது. அதை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்
பூண்டுப்பால் செய்வதற்கு நிறைய பொருள்கள் எதுவும் தேவையில்லை. மிக முக்கியமாகத் தேவைப்படவது இரண்டே இரண்டு பொருள்கள் தான். இது பூண்டும் பாலும் தான்.
பால் - 300 மில்லி
பூண்டு - 8 முதல் 10 பற்கள் வரை (அளவைப் பொறுத்தது)

தயாரிக்கும் முறை
முதலில் பாத்திரத்தை நன்கு கழுவி விட்டு, அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான தீயில் வைத்து பாலை சூடேற்றுங்கள். பால் பொங்கி, லேசாகக் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் பூண்டு பற்களை தோல் உரித்துவிட்டு தட்டி, கொதிக்கும் பாலில் போடுங்கள். மீண்டும் மிதமான தீயிலேயே வைத்து பூண்டு நன்கு வேகும்வரையில், வைக வைத்துப் பின் இறக்க வேண்டும்.

குடிக்கும் முறை
இப்படி காய்ச்சிய பூண்டப்பாலை தினமும் குடித்து வர வேண்டும். இதை இரவிலோ அல்லது காலையிலோ தினமும் குடித்து வந்தால், இடுப்பு அல்லது முகுதுவலி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே செல்வதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும். வலி முழுமையாகப் போய்விட்டது என்பதை உணரும்போது இதை நிறுத்தி விடலாம். தொடர்ந்து குடித்து வந்தாலும் எந்த பிரச்னையும் உண்டாகாது.

வேறு யார் குடிக்கலாம்?
இந்த பூண்டுப்பால் என்பது இடுப்பு மூட்டுக்களில் உள்ள வலி மற்றும் காயங்களைக் கட்டுப்படுத்தும். மேலும் பூண்டில் நோயெதிர்ப்பு சக்தி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மிக அதிக அளவில் உள்ளன. அதனால் அழற்சி பிரச்னை உள்ளவர்கள் அல்லது யார் வேண்டுமானாலும்இதை குடிக்கலாம். இந்த சுவையை கொஞ்சம் அதிகரிக்க கொஞ்சம் தேன் கலந்தும் பருகலாம்.



Click it and Unblock the Notifications