Latest Updates
-
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா?
ஆண்களே..! பிறப்புறுப்பில் வர கூடிய புற்றுநோயை தடுக்க, இவற்றை சாப்பிட்டாலே போதுமாம்...!
புற்றுநோய் என்றாலே மிக கொடூரமான நோய் என்றே பலர் நினைத்து கொள்கின்றனர். இதற்கு முழு காரணம், இந்த நோயின் இறுதி முடிவு மரணம் என்பதால் தான். ஆனால், இதனை முதல் கட்டத்திலே கண்டறிந்தால் எளிதில் உயிர் தப்பித்து விடலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இருப்பினும் ஒரு சில புற்றுநோய் வகைகளை ஆரம்ப கட்டத்தில் அறிய முடியாது.

இதில் ஆண்களுக்கு வர கூடிய பிறப்புறுப்பு புற்றுநோயும் அடங்கும். பிறப்புறுப்பு புற்றுநோயிற்கான அறிகுறிகள் முதல் கட்டத்தில் எளிதில் தென்படுவதில்லை. இதனாலே ஆண்டுக்கு பல உயிர் இழப்புகள் நேருகிறது. இந்த மோசமான புற்றுநோய் ஆண்களுக்கு வராமல் தடுக்க இந்த பதிவில் கூறும் உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்.

ஆண்களை தாக்கும் நோய்..!
மற்ற வகை புற்றுநோய்களை காட்டிலும் இது சற்றே கொடியதாக கருதப்படுகிறது. ஆண்களின் பிறப்புறுப்பில் இந்த புற்றுநோய் செல்கள் உருவாகி பல விளைவுகளை தரவல்லது. உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாலே இது போன்ற தாக்குதலுக்கு நாம் ஆளாகின்றோம். எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பிறப்புறுப்பு புற்றுநோய் வராமல் தடுக்க ஒரு சில உணவுகள் நமது வீட்டிலே உள்ளன.

காளான்
இதில் அதிக அளவில் மருத்துவ தன்மை உள்ளது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். Active hexose correlated compound (AHCC) என்கிற மூல பொருள் இதில் இருந்து பெறப்படுவதால் எளிதில் பிறப்புறுப்பு புற்றுநோயை தடுக்க முடியும். இதனை பற்றிய ஆழமான ஆராய்ச்சியில் ஜப்பானிய விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.

தக்காளி
இந்தியர்களின் உணவில் பெரும் பங்கு இந்த தக்காளிக்கு உள்ளது. Lycopene என்கிற முக்கிய மூல பொருள் இதில் இருப்பதால் செல்கள் சிதைவடைவதை நிறுத்தி, புற்றுநோய் செல்களின் உற்பத்தியை தடுக்கிறது. இந்த Lycopene ஆன்டி ஆக்ஸிடன்ட் பிறப்புறுப்பில் வர கூடிய புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியை குறைக்கிறது. எனவே உணவில் தக்காளியை ஒதுக்கி வைக்காமல் சாப்பிடுங்கள் ஆண்களே.

ப்ரோக்கோலி
பொதுவாக இந்த ப்ரோக்கோலி குடும்பத்தை சார்ந்த பல வித உணவுகளும் புற்றுநோயை எதிர்த்து போராட கூடியவை. ப்ரோக்கோலி, காலிஃபிளவர், காலே, போன்றவை புற்றுநோயில் இருந்து நம்மை காத்து கொள்ளும் முக்கிய காய்கறிகளாகும். diindolylmethane என்கிற புற்றுநோய் செல்களை அழிக்க கூடிய தன்மை இவற்றில் நிறைந்திருப்பதே புற்றுநோயை தடுப்பதற்கான காரணியாம்.

ஒமேகா 3 நிறைந்த உணவுகள்
புற்றுநோயை ஆண்கள் எதிர்த்து போராட வேண்டுமென்றால், அவர்களுக்கு இந்த ஒமேகா நிறைந்த உணவுகள் அவசியம் தேவைப்படுகிறது. எனவே, மீன்களை அதிக அளவு உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். காரணம், மீன்களில் docosahexaenoic acid என்ற புற்றுநோயை தடுக்க கூடிய அமிலமும் அதிகம் உள்ளதாம்.

சிவப்பு மிளகாய்
நாம் அதிகம் ஒதுக்கி வைக்கும் பொருட்களில் தான் பல வித நன்மைகள் உள்ளன. அந்த வகையில் காரசாரமான இந்த சிவப்பு மிளகாயும் அடங்கும். capsaicin என்கிற புற்றுநோயை தடுக்கின்ற தன்மை சிவப்பு மிளகாயிற்கு உள்ளதாம். குறிப்பாக ஆண்களுக்கான பிறப்புறுப்பு புற்றுநோயை எதிர்த்து போராடும் சக்தி இதில் இருக்கிறதாம்.

கிரீன் டீ
காலையில் எழுந்தவுடன் பெட் காபி அல்லது டீ குடிக்கும் பழக்கம் பலருக்கு உள்ளது. ஆனால், வெறும் டீ, காபியை குடிப்பதற்கு பதிலாக கிரீன் டீயை குடித்து வந்தால் பல வித நன்மைகள் ஆண்களுக்கு கிடைக்கும். பிறப்புறுப்பு புற்றுநோய்களை இந்த கிரீன் டீ தடுக்கும் என சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒரு நாளைக்கு 5 கப் கிரீன் டீ குடிக்கும் ஆண்களுக்கு இந்த வகை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாம்.

மாதுளை
செக்க சிவந்த முத்துக்களுக்கு ராணியான இந்த மாதுளையை ஆண்கள் அதிகம் தனது உணவில் சேர்த்து கொண்டால், பிறப்புறுப்பு புற்றுநோய் வருவதற்கான ஆபாயங்களில் இருந்து இது காத்து கொள்ளுமாம். மேலும், மாதுளை மார்பக புற்றுநோயையும் தடுக்கும் வல்லமை பெற்றதாம். எனவே, மற்ற பழங்களை காட்டிலும் ஆண்கள் மாதுளையை அதிகம் சாப்பிடுவது சிறந்தது.

கேரட்
வாரத்திற்கு 3 கேரட் சாப்பிடும் ஆண்களுக்கு பிறப்புறுப்பு வரவதற்கான வாய்ப்புகள் 20 சதவீதம் குறையும் என ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வைட்டமின் எ, கேரக்டனோய்ட், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இதில் அதிகம் இருப்பதால் புற்றுநோய் வாய்ப்புகள் குறைக்கபடுகிறதாம்.

வால்நட்ஸ்
பிறப்புறுப்பு புற்றுநோயை பற்றிய ஆராய்ச்சியில் ஒரு அருமையான விடை தெரிந்துள்ளது. அதாவது, வால்நட்ஸை தினமும் உணவில் சேர்த்து கொள்பவர்களுக்கு இந்த வகை புற்றுநோய் வருவதில்லையாம். ஏனெனில், இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால் எதிர்ப்பு சக்தியை தந்து பிறப்புறுப்பு புற்றுநோயில் இருந்து தப்பிக்க வைக்கிறது.

வைட்டமின் டி
பொதுவாக புற்றுநோய் அபாயத்திலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் உங்களின் உடலில் தேவையான அளவு வைட்டமின் டி இருத்தல் வேண்டும். பல ஆராய்ச்சிகளும் இதை தான் சொல்கிறது. வைட்டமின் டி சரியான அளவில் இருந்தால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாம்.

ஆண்களே உஷார்..!
இந்த வகை உணவுகளை சாப்பிட்டு விட்டு, வேறு சில புற்றுநோயை தரும் உணவுகளை உண்டால் புற்றுநோய் வரத்தான் செய்யும். எனவே, கொழுப்புகள் நிறைந்த உணவுகள், அதிகமான பால் சார்ந்த உணவுகள், புகை பழக்கம் ஆகியற்றை தவிர்த்தால் பிறப்புறுப்பு புற்றுநோயிற்கான அபாயம் குறைவு.



Click it and Unblock the Notifications











