Latest Updates
-
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா?
மதியம் சாப்பாட்டுக்கு பின்னாடி யாரெல்லாம் பழம் சாப்பிடுவீங்க?... அது சரியா? தப்பா?...
பழங்கள் நமது உடலுக்கு நன்மை தரும் உணவு என்பது எல்லோருக்கும் தெரியும். இதில் நிறைய விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் இதர ஊட்டச்சத்துக்களும் உள்ளன.
பழங்கள் நமது உடலுக்கு நன்மை தரும் உணவு என்பது எல்லோருக்கும் தெரியும். இதில் நிறைய விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் இதர ஊட்டச்சத்துக்களும் உள்ளன. எனவே இதை நாம் அதிகளவில் உணவில் சேர்த்து கொள்வோம். ஆனால் இதை எந்த வடிவில் எடுத்தால் நல்லது என்ற நிறைய சந்தேகங்கள் நம் மனதில் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறது.

அப்படியே சாப்பிடலாமா அல்லது பழங்களை ஜூஸ் போட்டு குடிப்பது நல்லதா போன்ற எண்ணங்கள் இன்றளவும் இருந்து தான் வருகிறது. இதற்கிடையில் நிறைய மக்களுக்கு சாப்பிட்ட பிறகு பழங்கள் சாப்பிடலாமா என்ற பெரிய சந்தேகம் தற்போது ஏற்பட்டுள்ளது. இப்படி சாப்பிடுவதால் எதாவது பாதிப்பு வருமா? என்று கேட்டு வண்ணம் உள்ளனர்.

மதிய உணவில் பழங்கள்
நம் இந்திய குடும்பத்தை பொருத்த வரை பழங்களை மதிய உணவில் ஒரு பங்காக எடுத்துக் கொண்டு வருகின்றன. மதிய உணவிற்கு பிறகு பழங்களை சாப்பிடுவது இங்கு ஒரு பழக்கமாகவே இருந்து வருகிறது. அதுவும் கோடை காலம் என்றால் சொல்லவே வேண்டாம் கண்டிப்பாக சாப்பாடு தட்டில் உணவிற்கு அருகில் சில மாம்பழ துண்டுகளும் இடம் பெறவே செய்கின்றன. ஆனால் இது உடலுக்கு ஆரோக்கியமானதா? என்று ஊட்டச்சத்து நிபுணரான டாக்டர் ரூபலி தத்தா நமக்கு விளக்கமளிக்கிறார். அலோபதி கூற்றுப்படி உணவுடன் பழங்களை சாப்பிடுவதில் எந்த வித முரண்பாடுகளும் இல்லை. இது சில தனிப்பட்ட மக்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு வந்திருக்கலாம் என்கிறார்.

செரிமான பிரச்சினை
சிலருக்கு மதிய உணவின் போது பழங்களை எடுத்துக் கொள்வது வயிறு வீக்கம் போன்ற செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் இது எல்லாருக்கும் பொதுவானது அல்ல என்று டாக்டர் தத்தா கூறுகிறார். மேலும் சிலருக்கு இனிப்பு என்றால் மிகவும் விரும்புவார்கள். அவர்களுக்கு நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதை விட பழங்கள் ஒரு சிறந்த உணவாக அமையும். அதே நேரத்தில் மதிய உணவின் போது அதிகமான அளவு பழங்களை எடுத்துக் கொள்ளாதீர்கள்.
ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே எடுத்தல் சிறந்தது. இல்லையென்றால் கலோரிகளின் அளவு அதிகமாக வாய்ப்புள்ளது. மற்றபடி பழங்களை சாப்பிடுவதில் பிரச்சினை இல்லை என்கிறார். மதிய அல்லது இரவு உணவுகளில் பழங்களை சேர்ப்பது நமது உடல் பழங்களில் உள்ள எலக்ரோலைட்களை சேமித்து வைத்துக் கொள்ளும். அதே நேரத்தில் நீங்கள் அதிகமாக நொறுக்கு தீனிகள் சாப்பிடுவதையும் கைவிட்டு விடுவீர்கள் என்று டாக்டர் தத்தா கூறுகிறார்.

சீரண என்சைம்
இருப்பினும் பிரபல அக்குபஞ்சர் நிபுணர் டாக்டர் ஜுயல் கமதியா என்ன சொல்லுகிறார் என்றால் "நான் தற்போது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பார்த்த போது மதிய உணவு வேளைகளில் பழங்களை ஏற்படுத்துவது வயிற்று பிரச்சினையை உண்டு பண்ணும் என்ற தகவல் வெளியாகி இருந்தது." ஒவ்வொரு உணவை சீரணிக்கவும் நமது உடலில் ஓவ்வொரு என்சைம் சுரக்கும். அப்படி இருக்கையில் சாதாரண உணவிற்கும் பழங்களுக்கும் வெவ்வேறு வகையான என்சைம்கள் தேவைப்படுகின்றன.
எனவே அப்படி சீரண பிரச்சினை ஏற்பட்டால் சாப்பாடு சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் கழித்து பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அப்படி இல்லையென்றால் ப்ரூட் ஜூஸாக கூட உங்கள் உணவுடன் எடுத்துக் கொள்ளலாம் என்று டாக்டர் தத்தா கூறுகிறார்.

முடிவுரை
எனவே உங்கள் உணவு வேளைகளில் பழங்களை சாப்பிடுவதில் எந்த வித தடையும் இல்லை. உங்களுக்கு செரிமான அழுத்தம் ஏற்பட்டால் மட்டுமே இதை தவிர்த்து கொள்வது நல்லது. மற்றபடி உங்கள் உணவுடன் பழங்களை சாப்பிடுவதால் உங்கள் செரிமான மண்டலத்திற்கு எந்த பிரச்சினையும் ஏற்படாமல் இருந்தாலோ அல்லது உங்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காமல் இருந்தாலோ நீங்கள் தாராளமாக பழங்களை உணவு வேளைகளில் சேர்த்து கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications