Latest Updates
-
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க..
உங்க குடலை சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...
உலகில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான இரைப்பை குடல் பிரச்சனையால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருப்போம். தினந்தோறும் இல்லாவிட்டாலும், அவ்வப்போது செரிமான பிரச்சனைகளால் பெரிதும் கஷ்டப்பட்டு வருவோம். இதற்கு காரணம், தினமும் அதிகப்படியான டாக்ஸின்களை எடுப்பதுடன், ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்து குறைபாடுகளும் தான்.
ஒருவரது உடல் ஆரோக்கியம் என்று வரும் போது, அதில் குடல் ஆரோக்கியம் முதன்மையான பங்கை வகிக்கிறது. ஒருவரது குடல் சுத்தமாக இருந்தால், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படுவதோடு, குடல் புற்றுநோய் வரும் அபாயம் குறையும். நாம் உண்ணும் உணவுகள் குடலின் வழியே செல்வதால், குடலில் டாக்ஸின்கள் மற்றும் கழிவுப் பொருட்கள் தேங்குவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதால், அவ்வப்போது குடலை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டியது மிகவும் முக்கியம்.

சரி, குடலில் உள்ள டாக்ஸின்களை எப்படி வெளியேற்றுவது என்று நீங்கள் கேட்கலாம். குடலை நம்மால் எந்த ஒரு பிரஷ் கொண்டும் சுத்தம் செய்ய முடியாது, உணவுகள் மூலமே சுத்தம் செய்ய முடியும். இந்த கட்டுரையில் குடலை சுத்தம் செய்ய உதவும் சில அற்புத உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அந்த உணவுகளை அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்து, குடலை சுத்தமாகவும், உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.

குறுக்குவெட்டுக் காய்கறிகள்
குறுக்குவெட்டுக் காய்கறிகளான முட்டைக்கோஸ், காலிப்ளவர், ப்ராக்கோலி போன்றவை உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக இந்த வகை காய்கறிகள் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துபவைகளாகும். முக்கியமாக இந்த வகை காய்கறிகளில் நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளது. இந்த காய்கறிகளை ஒவ்வொரு முறை உட்கொள்ளும் போதும், குடலில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் கழிவுப் பொருட்கள் வெளியேறி, குடல் சுத்தமாகிக் கொண்டிருக்கும். மேலும் குறுக்குவெட்டுக் காய்கறிகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மிகவும் அதிக அளவில் நிறைந்துள்ளது.

பூண்டு
பூண்டு இதயம் மற்றும் இரத்த ஓட்ட சுழற்சிக்கு மட்டும் உதவுவதில்லை. இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-பாராசிடிக் மற்றும் ஆன்டி-வைரல் பொருட்கள், குடலில் இருந்து டாக்ஸின்கள், பூச்சிகள் போன்றவற்றை வெளியேற்ற உதவும். மேலும் பூண்டில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலினுள் இருக்கும் உட்காயங்களைக் குறைக்க உதவும். அதோடு, இது உணவுகளில் உள்ள சத்துக்களை உறிஞ்சும் திறனை மேம்படுத்தும், செரிமானத்தை சீராக்கும் மற்றும் டாக்ஸின்கள் மற்றும் கழிவுகளை நீக்கும்.

சுத்தமான நீர் மற்றும் உப்பு
குடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருந்தால், அது ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் எப்போது நீர்ச்சத்து குறைவாக உள்ளதோ, அதனால் மலச்சிக்கல் ஏற்பட்டு, குடலில் டாக்ஸின்களின் அளவு அதிகரிக்கும். ஆகவே தினமும் போதுமான அளவு நீரைக் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். அதிலும் நீருடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால், அதனால் குடலை சுத்தம் செய்யும் செயல்முறையானது வேகப்படுத்தப்படும்.

அவகேடோ
அவகேடோ என்னும் வெண்ணெய் பழம் செரிமானத்திற்கு மட்டுமின்றி, சுத்தம் செய்யும் உதவியாக இருக்கும். இதில் உள்ள கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள், குடலியக்கத்தின் ஆரோக்கியம் மற்றும் குடல் சுத்தத்தை ஊக்குவிக்கும். இப்பழத்தில் உள்ள நார்ச்சத்து, குடலில் புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கும். முக்கியமாக இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து நீரை உறிஞ்சுவதோடு, குடலில் உள்ள இதர பொருட்களுடன் பிணைக்கிறது.

பச்சை இலைக் காய்கறிகள்
பச்சை இலைக் காய்கறிகளான பசலைக்கீரை, கேல் போன்றவை குடலை சுத்தம் செய்வதோடு, செரிமான மண்டலத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். இதில் உள்ள கொழுப்பில் கரையக்கூடிய குளோரோபில் குடலின் சுவற்றில் ஒட்டிக் கொண்டு, பாக்டீரியாவின் வளர்ச்சியை முடக்கி, பாக்டீரியாக்களை நீக்கி, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். முக்கியமாக இந்த வகை காய்கறிகளில் உள்ள அதிகப்படியான குளோரோபில், குடலை சுத்தம் செய்வதோடு, கல்லீரலையும் சுத்தம் செய்ய உதவும்.

நொதிக்க வைக்கப்பட்ட உணவுகள்
செரிமான மண்டலமானது ஏராளமான நன்மையை வழங்கும் பாக்டீரியாவால் ஆனது. எப்போது செரிமான மண்டலத்தில் நல்ல பாக்டீரியாக்களின் அளவில் ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறதோ, அப்போது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். உடலில் குடல் பகுதியில் தான் 80 சதவீத நோயெதிர்ப்பு மண்டலம் அமைந்துள்ளது. ஆகவே குடல் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், நோயெதிர்ப்பு மண்டலம் சிறப்பாக செயல்படாமல் போகும். இதனை சரிசெய்வதற்கு நொதிக்க வைக்கப்பட்ட உணவுகளான தயிர், கொம்புச்சா, ஊறுகாய், கிமிச்சி போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.

கற்றாழை
கற்றாழை உடலுக்கு மிகவும் நல்லது. முக்கியமாக கற்றாழை உடலினுள் ஏற்படும் உட்காயங்களை சரிசெய்து, செரிமான பிரச்சனைகள் மற்றும் இதரை ஆரோக்கிய பிரச்சனைகளைத் தடுக்க உதவி புரியும். மேலும் கற்றாழை மலச்சிக்கல் பிரச்சனையை எளிதில் நீக்கி, ஒட்டுமொத்த செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மென்மையாக்கும். எனவே குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள நினைத்தால் கற்றாழை ஜூஸைக் குடியுங்கள்.

சியா மற்றும் ஆளி விதைகள்
சியா மற்றும் ஆளி விதைகள் இரண்டிலுமே நார்ச்சத்து, கொழுப்பு மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இவை ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிப்பதோடு, குடலை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் உதவும். இவற்றில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், குடலில் உள்ள காயங்களை குறைப்பதோடு, செல் சுவர்களை உறுதிப்படுத்தும். முக்கியமாக இவற்றில் இருக்கும் கரையக்கூடிய நார்ச்சத்து, ஒட்டுமொத்த செரிமான செயல்முறையை சிறப்பாக வைத்துக் கொள்ளும்.

பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்
பீன்ஸ், பருப்பு மற்றும் பயறு வகைகளுக்கு குடலை சுத்தம் செய்யும் திறன் உள்ளது. முக்கியமாக இவைகளில் பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸின்ட்டுகளுடன், நார்ச்சத்தும் ஏராளமான அளவில் உள்ளது. ஒருவர் பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், உடலில் இருந்து டாக்ஸின்கள் வெளியேற்றப்படுவதோடு, குடலியக்கமும் சிறப்பாக இருக்கும். குறிப்பாக இந்த உணவுப் பொருட்களை ஒருவர் அதிகம் உட்கொண்டு வந்தால், குடல் சுத்தமாக இருப்பதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்கும்.

ஆப்பிள்
ஆப்பிளில் உள்ள பெக்டின் என்னும் பொருள், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். ஆப்பிளில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது ஆரோக்கியமான செரிமான மண்டலத்திற்கு வழிவகுக்கும். இதில் இருக்கும் பெக்டின், உடலில் இருந்து அனைத்து வகையான டாக்ஸின்களையும் நீக்க வல்லது. ஆகவே உங்கள் குடல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க நினைத்தால், தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

க்ரீன் டீ
எடையைக் குறைப்பதோடு, குடலையும் சுத்தம் செய்ய வேண்டுமா? அப்படியானால் க்ரீன் டீ குடியுங்கள். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், குடலியக்கத்தை மேம்படுத்துவதோடு, குடலை சுத்தமாகவும் வைத்துக் கொள்ளும். க்ரீன் டீயில் உள்ள அதிகளவிலான வைட்டமின் சி, நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு உறுதுணையாக இருக்கும். எனவே தினமும் ஒரு கப் க்ரீன் டீ குடிக்கும் பழக்கத்தைக் கொண்டு, உடல் குடலை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

எலுமிச்சை
எலுமிச்சை கல்லீரலில் பித்தநுர் உற்பத்தியைத் தூண்டி, செரிமான மண்டலத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கு உதவியாக இருக்கும். ஆகவே தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை ஜூஸ் தயாரித்துக் குடித்து வாருங்கள். இதனால் குடல் மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடலும் சுத்தமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











