Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
ஒரு மாதம் இப்படி செய்து பாருங்கள்!! பின் மாற்றத்தை சொல்லுங்கள்!! சவாலுக்கு ரெடியா?
உடல்தான் நமது மனதிற்கு உரம். உடல் சோர்ந்து போனால் தெம்பக வேலை செய்ய முடியாது. அப்படி நீங்கள் ஆரோக்கியமாக இருக்க தினமும் நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்ற் இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.
சவால்!! அடுத்தவர்களிடம் நாம் சவால் விடுவதை காட்டிலும் நமக்கு நாமே சவால் விடுப்பதில் கொஞ்சம் கடினம்தான். அந்தளவு சுயக்கட்டுபாடின்றி இருக்கிறோம். நமது உடலின் மீது எந்தளவுக்கு அக்கறை எடுத்துக் கொள்கிறோம் என்று கேட்டால் பாதிக்கு பாதி எல்லாருமே யோசிப்போம்.
உங்கள் ஆரோக்கியத்தை காத்திட அல்லது அதிகரிக்க இங்கே சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை சவாலாக ஏற்று தினமும் செய்தால் அதன் பின் கிடைக்கும் அருமையான பலன்களை நீங்கள்தான் அனுபவிக்கப் போகிறீர்கள். அவை என்னவென்று பார்க்கலாம்.

இனிப்பு மிட்டாய் மற்றும் குக்கிஸ் களுக்கு பை பை :
விதவிதமான நிறத்தில் இருக்கும் இனிப்பு மிட்டாய்கள் இப்போது அதிகம் மார்க்கெட்டுகளில் கிடைக்கிறது. அதன் மீதும் மோகமும் அதிகரித்துள்ளது. அதுபோல் குக்கிஸ் சாப்பிடாதவர்களை விரல் விட்டு எண்ணிடலாம். இந்த இரண்டையுமே தொட மாட்டேன் என்று சவால் விட்டுக் கொள்ளுங்கள்.

தினம் ஒரு சாலட் அல்லது சூப்- சட்டம் :
ஒரு சட்டத்தை உங்களுக்கு நீங்களே போட்டுக் கொள்ளுங்கள். தினமும் ஏதாவது பழங்கள் அல்லது காய்களில் சாலட் செய்து சாப்பிட வேண்டுமென்று. ஆரம்பத்தில் சற்று கடினமாக இருக்கும்.
ஆனால் போகப் போக இது பழகிக் கொண்டால் உங்களால் விட முடியாத நல்ல பழக்கமாக இது மாறி விடும். அல்லது சூப்பாக சாப்பிடுங்கள்.

நட்ஸ் மற்றும் பேரிச்சை :
ஒரு வாரத்திற்கு தேவையான நட்ஸ் மற்றும் பேரிச்சம் பழத்தை வாங்கிக் கொள்ளுங்கள். அந்த வாரம் முடியும்போது அவற்றை சாப்பிட்டு முடித்திருக்க வேண்டும் என திட்டம் போட்டுக் கொள்ளுங்கள். ஒரு வாரத்தில் அவ்வப்போது கொரித்தாலே போதும். காலியாகிவிடும்.

நீர் :
மிக முக்கியமான விஷயம் இதுதான். தினமும் குறைந்தது 10 டம்ளர் நீரை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுரை குடிக்க வேண்டும் என உறுதி கொள்ளுங்கள். உங்கள் உடலின் ஒட்டுமொத்த செயல்பாடு மற்றும் நச்சுக்கள் வெளியேறவும் நீர் குடிப்பது முக்கியம்.

வாரம் 3 கீரை :
வாரத்தில் 3 நாட்கள் கீரை கட்டாயம் சாப்பிட வேண்டும் என்று முடிவில் உறுதியாக இருங்கள். மூடி வைத்து சமைக்காமல் அதிக நேரம் வேகாமல், சத்துக்கள் அழியாத வண்ணம் சமைத்திடுங்கள்.
இந்த சவால்கள் கேட்பதற்கு சாதரணமாக இருந்தாலும் அதன் பலன்களை கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். நீங்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ மேலே சொன்ன அத்தனை செயல்களும் போதுமானது. முக்கியமாக உங்கள் உடல் மெருகேறி புது தேஜஸாக வலம் வருவீர்கள். ஒரு மாதம் செய்து பாருங்கள் அதன் பின் நீங்களே விட மாட்டீர்கள்.



Click it and Unblock the Notifications
