நீங்க வாங்கும் முட்டையின் மஞ்சள் கரு உண்மையில் என்ன நிறத்தில் இருக்கனும் தெரியுமா? இதாங்க ரகசியம்!!

Posted By:
Subscribe to Boldsky

நீங்கள் சாப்பிடும் முட்டையில் மஞ்சள் கருவிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் , அது ஆரோக்கியமான கோழியிலிருந்து வந்ததா இல்லை பிராய்லர் கோழியிடமிருந்து வந்ததா என.

முட்டை நல்லது என சிறு வயதிலிருந்தே நமக்கு சொல்லிக் கொடுத்தாலும் அதிலேயும் கலப்படம், ஹார்மோன் ஊசி என மண்ணை அள்ளிப் போட்டுவிட்டனர் இன்றைய வணிகஸ்தர்கள்.

ஆரோக்கியத்தையும் எப்போது வணிகம் செய்ய ஆரம்பித்தனரோ அப்போதிருந்து ஆரம்பித்துவிட்டது நமது ஆரோக்கியத்திற்காக கேடு காலம். சாப்பிடும் அரிசியிலிருந்து குடிக்கும் நீர் வரை எல்லாவற்றிலும் ஆபத்து என்றால் எதைத்தான் பின் சாப்பிடுவது என நமக்கு பலக் கவலைகள் சூழ்கின்றன.

ஏழைக் குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை என பள்ளியில் வழங்கப்பட்டதற்கு காரணமே அதன் சத்துக்கள் வளரும் பிள்ளைகளுக்கு சேர வேண்டும் என்பதால்தான். ஆனால் அந்த முட்டைகள் இன்று வெறும் விஷமாகி மாறிப் போகின்றது என்றால் அது எத்தனை துயரமானது.

முட்டை எங்கிருந்து பெறப்படுகிறதென்றால் கோழி. அந்த கோழி ஆரோக்கியமானதா என்று கேட்டால் இல்லை.. ஏனென்றால் ப்ராய்லர் கோழிகளை வளர்க்க விட்டு ஸ்டீராய்டு ஊசி மூலம் முட்டைகளைப் பெறச் செய்து அதனை மிகப்பெரிய வணிகமாகிவிட்டோம். சரி. எப்படி நல்ல முட்டையை கண்டுபிடிப்பது என நீங்கள் யோசிக்கிறீர்களா? இதோ உங்களுக்காக சொல்லப்பட்டுள்ளது தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 உங்களுக்காக ஒரு பரிசோதனை :

உங்களுக்காக ஒரு பரிசோதனை :

நீங்கள் ஒரு லோக்கல் மார்க்கெட்டில் ஒரு முட்டை வாங்குங்கள். பின்னர் சூப்பர் மார்க்கெட்டில் ஒரு முட்டை வாங்குங்கள். அதன் பின் ஒரு ஒரு முட்டை விற்பனையாளரிடம் சென்று நாட்டு முட்டை வாங்குங்கள். உண்மையில் இந்த மூன்று முட்டைகளும் ஒன்றுகொன்று வித்தியாசம் பெற்றவை. எப்படி தெரியுமா.

ரிசல்ட் :

ரிசல்ட் :

இந்த மூன்று முட்டைகளின் மஞ்சள் கருவையும் பிரித்தெடுங்கள். பின்னர் மூன்றின் நிறத்தையும் பாருங்கள்.

லோக்கல் மார்க்கெட் மஞ்சள் கருவின் நிறம் - மஞ்சள்

சூப்பர் மார்கெட் முட்டையில் மஞ்சள் கருவின் நிறம் - மஞ்சள்.

நாட்டுக் கோழி முட்டையின் மஞ்சள் கரு- ஆரஞ்சு.

இதில் எந்த நிறமான மஞ்சள் கரு நல்லது தெரியுமா? ஆரஞ்சு. . ஆரஞ்சு நிற மஞ்சள் கரு இருந்தால் அந்த முட்டை ஆரோக்கியமான கோழியிடமிருந்து வந்திருக்கிறது என்று அர்த்தம்... ஏன்?

ஏன் ஆரஞ்சு நிறம் நல்லது?

ஏன் ஆரஞ்சு நிறம் நல்லது?

முட்டையின் மஞ்சள் கரு ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் அது நல்ல ஆரோக்கியமான கோழியிடமிருந்து வந்திருக்கிறது என்று அர்த்தம். இந்த மாதிரியான கோழிகள் ஆரோக்கியமான புழு புற்களை மேய்ந்து , சூரிய வெளிச்சம் பெற்று இயற்கையான முறையில் அவை வளர்வதால் அவ்ற்றின் முட்டைகள் ஆரோக்கியமாக இருக்கும். எனவே நீங்கள் வாங்கிய முட்டையில் மஞ்சள் கரு ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் தொடர்ந்து அதே கடையில் அதே முட்டையை வாங்குங்கள்.

வெளிர் ஆரஞ்சு நிற மஞ்சள் கரு நல்லதா?

வெளிர் ஆரஞ்சு நிற மஞ்சள் கரு நல்லதா?

மஞ்சள் இல்லாமல் சில முட்டைகளின் மஞ்சள் கரு வெளிர் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். அவைகள் நல்லதா என உங்களுக்கு சந்ததேகம் வரலாம். ஆமாம். அவைகள் மஞ்சள் நிற மஞ்சள் கருவை விட பெட்டரானவை என்று சொல்லலாம் . ஆகவே இவையும் தப்பில்லை சாப்பிடலாம்.

ஆர்கானிக் முட்டை :

ஆர்கானிக் முட்டை :

இந்த வெளிர் ஆரஞ்சு நிற முட்டைகளை ஆர்கானிக் முட்டை எனலாம். காரணம் இவைகள் முற்றிலும் இயற்கையான சூழ் நிலையில் வளர்ந்தவை அல்ல. குறிப்பிட்ட பண்னைகளில் நல்ல இயற்கை தீவனம் மட்டும் போட்டு வளரச் செய்தவை. ஆகவே அவை வெளிர் ஆரஞ்சு நிறத்தில் இருக்கிறது. இவற்றை சாப்பிடலாம் . உடலுக்கு கேடு இல்லை.

மஞ்சள் நிற மஞ்சள் கரு தீமையா?

மஞ்சள் நிற மஞ்சள் கரு தீமையா?

ஆமாங்க. மஞ்சள் நிறத்தில் முட்டையின் மஞ்சள் கரு இருந்தால் அது நல்லதல்ல. அவை முற்றிலும் முட்டை ஃபேக்டரியிலிருந்து வந்திருப்பவை. இவை குறைவான தரம் கொண்டவை. அவை ஹார்மோன் ஊசிகள் மூலம் வளரப்பட்டவை. ஆகவே அவற்றை பயன்படுத்தாதீர்கள்.

எப்படி கண்டுபிடிப்பது ?

எப்படி கண்டுபிடிப்பது ?

உண்மையில் வெளி ஓட்டைப் பார்த்து கண்டுபிடிப்பது சிரமம்தான். ஆனால் ஒரு த்டவை தெரிந்து விட்டால் பின்னர் அந்த மாதிரியான அளவு நிறம் கொண்ட முட்டையை வாங்காதீர்கள். அல்லது கடையை மாற்றுங்கள்.

 வெளிர் பழுப்பு நிறம் ;

வெளிர் பழுப்பு நிறம் ;

இப்படி ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் முட்டைகள் வெளிர் பழுப்பு நிறத்தில் இருக்கும். முற்றிலும் பிரவுனாக இருக்காது. அல்லது வெள்ளையாக இருக்காது. கடைகளில் நாட்டுக் கோழி முட்டையை மட்டும்தான் நீங்கள் வாங்க வேண்டும்.

அளவு :

அளவு :

நாட்டுக் கோழி முட்டைகள் சிறியதாகத்தான் இருக்கும். பெரிய பிரவுன் முட்டைகள் கலப்படமானவை. அளவு சிறியதாகவும் உள்ளே ஆரஞ்சு நிர மஞ்சள் கரு இருந்தால் நீங்கள் நல்ல தரமான நாட்டுக் கோழி முட்டைகளைத்தான் வாங்க்யிருக்கிறீர்கள் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

 தினமும் சாப்பிடலாமா?

தினமும் சாப்பிடலாமா?

தாராளமாக சாப்பிடலாம். சிலர் தினமும் சாப்பிட்டால் உடல் எடை கூடுமோ என நினைப்பார்கள். பொதுவாக முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் 3 அல்லது 4 முட்டைகள் வரை சாப்பிடலாம். மஞ்சள் கருவை சாப்பிடுவதாக இருந்தால், தினமும் ஒன்று சாப்பிட்டால் போதும்.

ஆளுக்கு தகுந்த முட்டை :

ஆளுக்கு தகுந்த முட்டை :

சிலர் ஜிம்மில் வோர்க் அவுட் செய்வார்கள். அல்லது கடுமையான பயிற்சி , வேலை செய்வார்கள். இவர்கள் ஒரு நாளைக்கு 4 முட்டைக் கூட சாப்பிடலாம். இதனால் அவர்களின் கலோரி வேகமாக எரித்துவிடலாம். ஆனால் கணிணி முன் அமர்ந்து கொண்டு வேலை செய்பவர்கள் ஒரு முட்டைக்கு மேல் சாப்பிட வேண்டாம்.

பச்சை முட்டை - வேக வைத்த முட்டை எது நல்லது?

பச்சை முட்டை - வேக வைத்த முட்டை எது நல்லது?

நல்ல தரமான மேலே சொன்னபடி இருந்தால் தாராளமாக பச்சையாகவே சாப்பிடலாம் ஆனால் வேக வைத்து சாப்பிடும்போது அதன் சத்துக்கள் இருமடங்கு கிடைக்கின்றது. ஆகவே அவித்து சாப்பிடுவதால் இன்னும் முழுமையான சத்துக்கள் பெறலாம்.

 நாட்டுக் கோழி முட்டையின் நன்மைகள்!!

நாட்டுக் கோழி முட்டையின் நன்மைகள்!!

நாட்டுக் கோழி முட்டையை நீங்கள் தினமும் எடுத்துக் கொண்டால் உங்களை நோய்கள் நெருங்காது. குறைவான கலோரியே முட்டையில் உள்ளது. வெள்ளைக் கருவில் 17 மற்றும் மஞ்சள் கருவில் 59 கலோரிகள் இருக்கின்றன

நினைவாற்றல் அதிகரிக்கும் :

நினைவாற்றல் அதிகரிக்கும் :

நாட்டுக் கோழி முட்டையை தொடர்ந்து சாப்பிடுவதால் நினைவாற்றல் அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதிலுள்ள அட்டகாசமான மினரல் சத்துக்களே காரணம். கால்சியம், சல்ஃபர், மெக்னீசியம், ஜிங்க் போன்ற மிக முக்கியமான 11 மினரல்கள் இருக்கின்றன.

கர்ப்பிணிகளுக்கு :

கர்ப்பிணிகளுக்கு :

கர்ப்பிணிகள் தினமும் ஒரு நாட்டுக் கோழி முட்டை சாப்பிடுவதால் குழந்தை நல்ல அறிவோடு பிறக்கும் . அதோடு குழந்தைக்கு பின்னாளில் வரும் எந்த எலும்புப் பிரச்சனைகள் உடலில் உண்டாகாது

கேடராக்ட் :

கேடராக்ட் :

கண் புரை வருவது தடுக்க வேண்டுமென்றால் தினமும் ஒரு முட்டை எடுத்துக் கொள்ளுங்கள். இதிலுள்ல சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் கண் புரை உருவாகாமல் தடுக்கிறது.

எலும்பு வளர்ச்சி :

எலும்பு வளர்ச்சி :

உடலுக்கு தேவையான எலும்பு வளர்ச்சிக்கு அத்யாவசியமான உணவுகளில் முட்டையும் ஒன்று. குறிப்பாக குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை கொடுப்பதை எந்த காரணத்திலும் மறக்காதீர்கள். பின்னாளில் எலும்பு தேய்மானம் வராமல் தடுக்கும்.

ரத்த சோகை :

ரத்த சோகை :

ரத்த சோகை இருப்பவர்கள் அவசியம் முட்டையை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. விட்டமின் ஈ, இரும்புச் சத்து, ஜிங்க் போன்ரவை இருப்பதால் ரத்த சோகையை சரிப்படுத்த உதவுகிறது.

யாரெல்லாம் சாப்பிடக் கூடாது ?

யாரெல்லாம் சாப்பிடக் கூடாது ?

இதய நோய் இருப்பவர்கள், கொழுப்பு அதிகம் இருப்பவர்கள் மஞ்சள் கருவை தவிர்த்துவிட்டு வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடலாம். வயதானவர்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருப்பதால் அவர்கள் முட்டையை தவிர்த்தல் நல்லது.

வறுத்து சாப்பிடலாமா?

வறுத்து சாப்பிடலாமா?

முட்டையை அதிக நேரம் வேகவோ அல்லது வறுக்க வைக்கவோ கூடாது. சிலர் வாணிலியில் வறுக்கும்போது அது ஒரு வாசனையை தரும். இதில் அதன் சத்துக்களை இழக்க நேரிடும். ஆகவே முட்டையை நீரில் அவித்து சாப்பிடுவதே நல்லது அல்லது ஆம்லெட்டாக காய்கறிகள் போட்டு சாப்பிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Color of the egg yolk can determine the quality

Color of the egg yolk can determine the quality
Story first published: Friday, December 15, 2017, 15:00 [IST]
Subscribe Newsletter