Latest Updates
-
செவ்வாய் பெயர்ச்சியால் ஜூன் 21 முதல் இந்த 5 ராசிக்கு பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது.. -
ஜூன் 22-ல் சூரியன் ராகுவின் நட்சத்திரம் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இதுல ஒரு புறாவை தேர்ந்தெடுங்க.. அடுத்த 3 நாட்களில் உங்களுக்கு என்ன நடக்கும்-ன்னு சொல்றோம்.. -
மாங்காயுடன் வேர்க்கடலை சேர்த்து இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த 5 ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
உலகின் டாப் 10 பணக்கார குட்டி நாடுகள் என்னென்ன தெரியுமா? இந்த நாடுகளில் சில ஆயிரம் பேரே வாழ்கிறார்களாம் -
இந்த 4 ராசிக்காரங்க எல்லோருக்கும் பிரச்சினைகளை கொடுப்பதற்காகவே பிறந்த ஆபத்தான ஆன்மாக்களாம் -
2 மாம்பழமும் 6 பிரட்டும் இருந்தா.. ஸ்கூல் விட்டு வர பிள்ளைகளுக்கு 10 நிமிஷத்துல இந்த ஸ்வீட் செஞ்சு குடுங்க... -
International Yoga Day 2026: சர்வதேச யோகா தினத்தின் வரலாறு என்ன தெரியுமா? இந்த வருட யோகா தினத்தின் சிறப்பு என் -
சனி பகவான் நிலையால் இனி 2027 வரை இந்த 3 ராசிக்காரங்க நல்ல வளர்ச்சியை காண்பார்களாம்!
எந்த நிற உணவுகள் என்ன மாதிரியான நன்மைகள் தரும் ?
எந்த நிற உணவு என்ன நன்மையைத் தரும் என இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.
உணவுக்கும் வண்ணங்களும் என்றுமே ஒரு தொடர்பு உண்டு. நமது பாரம்பரிய உணவுகள் தொடங்கி இன்றைய பாஸ்ட் புட் உணவுகள் வரை முதலில் கவர படுவது அதன் நிறத்தினால் மட்டுமே.
ஒரு உணவை பார்க்கும் போது முதலில் கண்கள் அதனை சுவைக்கிறது. கண்களுக்கு பிடிக்கும் போது மட்டுமே நாக்கு அதனை சுவைக்கிறது.

இந்த நிறங்கள் உணவை சுவாரஸ்யமாக்குகிறது. வண்ணங்களை வைத்து உணவின் இயல்புகளை அறிந்து கொள்ள முடியும். அதனால் உணவுகளை பற்றிய விளக்கங்கள் நம் மனதிலும் விரைவாக இடம் பிடிக்கிறது.
உணவை நிறங்களின் அடிப்படையில் 6 பிரிவுகளாக பிரிக்கலாம்.அவை என்ன என்பதை பற்றி இப்போது காண்போம்..

பச்சை :
இந்த நிற உணவுகள் உடலின் நச்சு தன்மையை வெளியேற்றுகின்றன. பச்சைப் பட்டாணி, பச்சை பீன்ஸ், கீரை வகைகள், கேப்ஸிகம் என்னும் பச்சை குடைமிளகாய்,கிவி மற்றும் க்ரீன் டீ எனப்படும் பச்சை தேநீர் ஆகியவை இந்த வகை உணவுகள் ஆகும்.
இந்த வகை உணவுகள் உடலுக்கு நலம் சேர்க்கும். உடலுக்கு நல்ல ஊட்டச்சத்துக்களை வழங்கும். இதன் மூலம் உடலில் உள்ள நச்சு பொருட்கள் வெளியேறும்.

மஞ்சள்:
இந்த நிற உணவுகள் உடல் வனப்பிற்கு உதவுகின்றன. வாழைப்பழம், ஸ்குவாஷ் , சோளம், ஆகியவை இந்த வகை உணவுகள். மஞ்சள் நிற உணவுகளில் கரோடெனாய்டு மற்றும் பயோ ஃப்ளாவனாய்டு நிறைந்திருப்பதால் அவை நம் சருமம், எலும்பு மற்றும் பற்களை பாதுகாக்கிறது.

ஆரஞ்சு:
இந்த நிற உணவுகள் உடலில் புற்று நோய் வராமல் தடுக்கிறது. காரட், ஆரஞ்சு,பரங்கி காய் ,ஆகியவை இந்த வகை உணவுகள் ஆகும். இந்த வகை உணவுகள் இதய ஆரோக்கியத்திற்கு உகந்தது. இவை கண்களை பாதுகாக்கிறது. மற்றும் அவை நம் நோயெதிர்ப்பு மண்டலத்தை உறுதியாக்குகிறது.

சிவப்பு:
இந்த வகை உணவுகள் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இவ்வகை உணவுகள் சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இவற்றுள் வைட்டமின் சத்துகள் அதிகமாக உள்ளன. சிவப்பு மிளகாய், சிவப்பு குடை மிளகாய், செர்ரி பழம், தக்காளி, ஆப்பிள் முதலியன சிவப்பு நிற உணவுகளாகும்.

ஊதா :
இந்த வகை உணவுகள் நமது ஆயுளை அதிகரிக்கிறது. வெங்காயம், நாவல் பழம், கத்திரி காய் , திராட்சை ஆகியவை ஊதா நிற உணவுகள் ஆகும். இந்த வகை உணவுகள் அல்சர் நோயை எதிர்த்து போராடுகிறது.
இவை புற்று நோயை கட்டுப்படுத்துகின்றன. சிறுநீரகம் மூலம் நோய் தொற்று ஏற்படுவது தடுக்கப் படுகின்றது. இதயத்திற்கும், கல்லீரலுக்கும் நலம் பயக்கக் கூடியது.



Click it and Unblock the Notifications