Latest Updates
-
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்!
பன்னீர் உடலுக்கு நல்லதா? கெட்டதா?
பனீர் தற்போது எல்லாருமே உணவில் சேர்க்கிறோம். மெத்தென்ற அதன் தோற்றமும் சுவையும் அலாதியானது. உடல் எடையை அதிகரிக்கும். சாப்பிடக் கூடாது என ஒருபாலரும், அதனை சாப்பிடுவதால் ஆரோக்கியமான வளர்ச்சி உண்டாகும் என மற்றொரு பாலரும் சொல்லிக் கொண்டு வருகின்றனர்.
பனீரிலிருக்கும் நன்மைகள் தீமைகளை இங்கே சொல்லப்படுகிறது. சாப்பிடலாமா வேணாமா என நீங்கள் முடிவு செய்யுங்கள்.

பனீர் எப்படி தயாரிக்கிறார்கள்?
நீர் கலக்காத கெட்டிப் பாலில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து கொதிக்க வைத்தால் கெட்டியான பதத்தில் வரும். அதிலிக்கும் நீரை வடிகட்டினால் , திடமான மிருதுவான பன்னீர் ரெடி. ஆனால் அந்த வடிகட்டிய நீரில் அதிக அளவு புரோட்டின் இருப்பதால், அந்த நீரையும் உணவில் உபயோகிப்பது நல்லது என்கிறார்கள்.

பனீரிலுள்ள சத்துக்கள் :
பனீரில் புரோட்டின், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. அதிகமாக கொழுப்பும் புரோட்டினும் சம அளவில் உள்ளது. கார்போஹைட்ரேட் மிகக் குறைவான அளவு உள்ளது.

பனீர் புரோட்டின் உணவா?
புரோட்டின் அதிகம் இருப்பதால் இதனை புரோட்டின் அதிகம் நிறைந்த உணவு என கூற முடியாது. அதே அளவு கொழுப்பும் இருப்பதால் இரண்டும் நிறைந்த உணவு எனக் கூறலாம்.

பனீரின் கொழுப்பு நல்லதா?
பனீரில் உள்ள கொழுப்பு உடலுக்கு நல்லதல்ல. அதில் நிறுவுற்ற கொழுப்பு உள்ளது. இது உடலுக்கு நல்லதில்லை. கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்யும் கொழுப்புகள் கொண்டவை.

ஜீரண சக்தி குறைவு :
இது மெதுவாக ஜீரணிக்கும். ஆகவே அதன் சக்தியும் உடனே உட்கிரகிக்க முடியாது. எனவே உடற்பயிற்சி முடிந்த பின் இதனை சாப்பிடுவதால் வளர்சிதை மாற்றம் துரிதமாக நடக்கும்.

யார் சாப்பிடலாம்?
உடல் மெலிந்து பலஹீனமாக இருப்பவர்கள் தாரளமாக சாப்பிடலாம். மற்றவர்கள் வாரம் ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை சாப்பிடலாம். முக்கியமாக உடற்பயிற்சி செய்பவர்கள் சாப்பிட்டால் சரியான அளவில் இரு சத்துக்களுமே பயன்படும்.

எப்போது சாப்பிடலாம் ?
பனீரை இரவுகளில் சாப்பிடலாம். இது நல்ல தூக்கத்தையும் தரும். ஆனால் சாப்பிட்டு குறைந்தது 1 மணி நேரம் கழித்து தூங்கினால் உடல் பருமனை தடுக்கலாம்.
உங்களுக்கான சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எது, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!



Click it and Unblock the Notifications
