மாதவிடாய் நிறுத்தத்தின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

பெண்கள் வெறுப்பது எது என்று கேட்டால் உடனே வரும் மாதவிடாய் காலமே. உடல் ரீதியாக மட்டுமல்லாது, மன ரீதியாகவும் அவர்கள் இந்நேரத்தில் அவதிப்படுகிறார்கள். அதுவும் கடைசி மாதவிடாயான, அது நிற்கும் நேரத்தில் அவர்களுக்கு உடல் ரீதியாக பல மாற்றங்கள் ஏற்படும். கண்டிப்பாக பல பெண்களும் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.

மாதவிடாய் நிறுத்தம் பற்றி உங்களுக்கு தெரியாத சில சுவாரஸ்யமான தகவல்கள்!!!

இது தவிர்க்க முடியாத இயற்கை செயல்முறை தான் என்றாலும், அதனால் ஏற்படக்கூடிய உடல் மற்றும் மன உளைச்சலை குறைக்க சில வழிகளை கையாளலாம் அல்லவா? அது எப்படி என்று தானே கேட்கிறீர்கள்? அதற்கு பல வழிகள் உள்ளது. அதில் ஒன்று, மாதவிடாய் நிற்கப் போகும் காலத்தில் நீங்கள் சில வகையான உணவுகளை தவிர்க்க வேண்டியது.

இறுதி மாதவிடாய் நடைபெற போவதற்கான 15 அறிகுறிகள்!!!

மாதவிடாய் நிற்கப் போகும் போது சோர்வு, எடை அதிகரிப்பு, மன உளைச்சல், அமைதியின்மை போன்றவைகள் ஏற்படும். இப்படிப்பட்ட நேரத்தில் கேக் அல்லது மதுபானம் போன்றவற்றை உண்ணவோ பருகவோ தோன்றும். ஆனால் அது உங்கள் மாதவிடாய் நிறுத்தத்தை இன்னமும் மோசமடையத் தான் செய்யும். ஏற்கனவே கூறியதைப் போல் மாதவிடாய் நிறுத்தத்தின் போது ஏற்பட போகும் தாக்கத்தை குறைக்க நல்ல உணவு உட்கொண்டு உடற்பயிற்சியில் ஈடுபடலாம். சர்க்கரை நிறைந்த டெசர்ட் உணவுகளுக்கு பதில் பழங்களை உண்ணுங்கள். கண்டிப்பாக இதனால் உங்கள் மனநிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொழுப்பு நிறைந்த இறைச்சி

கொழுப்பு நிறைந்த இறைச்சி

மாதவிடாய் நிறுத்தத்தின் போது, பெண்கள் கவனமாக இல்லையென்றால் முதல் இரண்டு வருடங்களில் 3.5 - 5 கிலோ வரை எடை அதிகரிக்கலாம். உங்களின் மாதவிடாய் நிறுத்தம் உணவில் கொழுப்பின் அளவு 20%-க்கும் குறைவாகவே இருக்க வேண்டும். உங்களது தினசரி கலோரிகளில் கொழுப்பின் பங்கு 25-35% மட்டுமே இருக்க வேண்டும். மேலும் தினசரி கலோரிகளில் கரைகின்ற கொழுப்புகளின் அளவை 7%-க்கும் குறைவாக சேர்த்துக் கொள்ளுங்கள். கரைகின்ற கொழுப்பு உங்கள் கொலஸ்ட்ராலை அதிகரித்து, இதய நோய்களுக்கான இடர்பாட்டை அதிகரிக்கும். உங்களுக்கு கொஞ்சம் பரிசோதனை கண்டிப்பாக அவசியம். உதாரணத்திற்கு, மாட்டிறைச்சிக்கு பதில் கிரில் செய்யப்பட்ட கோழி நெஞ்சுக்கறியை உண்ணுங்கள்.

சர்க்கரை

சர்க்கரை

மாதவிடாய் முடிவு காலத்தினால் ஏற்படும் சோர்வு மற்றும் உடல் எடை அதிகரிப்பை எதிர்த்து போராட இரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்கவும். தினமும் 10 கிராமிற்கு குறைவான அளவிலேயே சர்க்கரையை சேர்த்துக் கொள்ளுங்கள். சின்னதாக ஒரு பிஸ்கட் போன்றவற்றை எல்லாம் எடுத்துக் கொள்ளலாம். ஆனாலும் பெர்ரி வகையிலான பழங்கள் மற்றும் காய்கறிகளே மாதவிடாய் முடிவு காலத்தின் போது பரிந்துரைகக்ப்படுகிறது.

சோடியம்

சோடியம்

உங்கள் உணவில் அளவுக்கு அதிகமாக சோடியம் சேரும் போது இரத்த கொதிப்பு அதிகரிக்கும். அதனால் உப்பு குறைவான, வாட்டிய உணவுகளை உண்ணுங்கள். இவ்வகை உணவுகளில் நைட்ரேட்ஸ் அளவு அதிகமாக இருக்கும். இது புற்று நோயுடன் சம்பந்தப்பட்டதாகும்.

சுத்தரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்ஸ்

சுத்தரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்ஸ்

வெண்ணிற ரொட்டி, பாஸ்தா, அரிசி சாதம், உருளைக்கிழங்கு, சோளம் போன்ற கார்போஹைட்ரேட்ஸ் அதிகமாக உள்ள உணவினால் கூட மாதவிடாய் முடிவு காலத்தின் பொதுவான அறிகுறிகளான சோர்வும் மன அமைதியின்மையும் ஏற்படும். முழு தானியங்கள் அல்லது உணவின் அளவை குறைத்து கொள்ளுதல் அல்லது கார்போஹைட்ரேட்ஸ் அளவை குறைத்துக் கொள்ளுதல் ஆகியவைகளே இதற்கு மாற்றாகும்.

காப்ஃபைன்

காப்ஃபைன்

காப்ஃபைன் உங்களை மந்தமாக வைப்பதுடன் சோர்வடையவும் செய்யும். அதற்கு காரணம் உங்களின் தூக்கத்தை காப்ஃபைன் கெடுக்கும்; முக்கியமாக அதனை மதிய நேரத்தில் பருகினால் தான். இதனால் ஏற்படும் மற்றொரு பிரச்சனை - காப்ஃபைனை நாம் தனியாக குடிப்பதில்லை. அதனுடன் சேர்த்து சர்க்கரை, நுரை போன்றவற்றை சேர்த்து குடிப்போம். இதனால் உங்கள் ஆரோக்கியம் இன்னும் பாதிக்கப்படும். அதனால் இந்த மாதிரியான நேரத்தில் மூலிகை கலந்த புதினா தேநீர் அல்லது காப்ஃபைன் கலக்காத தேநீரை முயற்சி செய்து பாருங்களேன்.

மதுபானம்

மதுபானம்

நண்பர்களுடன் சேர்ந்து எப்போதாவது ஒரு டம்ளர் ஒயின் குடித்தால் அது உங்கள் மாதவிடாய் முடிவு காலத்தை வெகுவாக பாதிக்காது. இருப்பினும் தினமும் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் மதுபானத்தை தொடர்ச்சியாக குடித்து வந்தால், அது உங்கள் மாதவிடாய் முடிவு காலத்தை வெகுவாக பாதிக்கும். இதனால் சோர்வு மற்றும் மந்த நிலையை ஏற்படுத்தும். இதனை தவிர்க்க ஒயின் மற்றும் தண்ணீர் அதிகம் சேர்க்கப்பட்ட மதுபானத்தை அளவாக குடியுங்கள்.

காரசாரமான உணவுகள்

காரசாரமான உணவுகள்

காரசாரமான உணவுகளை உட்கொண்டால், ஹாட் ஃப்ளாஷ் இன்னும் மோசமடையத் தான் செய்யும். இல்லையென்றால் உங்களை சுகவீனம் அடையச் செய்யும். காரமான உணவுகளை உண்ணும் போது, உங்கள் உடலின் வெப்பநிலை அதிகரித்து உங்களுக்கு வியர்க்க தொடங்கும். ஹாட் ஃப்ளாஷின் போதும் இதே தான் நடக்கிறது. இருப்பினும் உங்களுக்கு காரமான உணவுகளின் மீது விருப்பம் இருந்தால், அதனை கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் உடலின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை மறந்து விடாதீர்கள்.

சூடான உணவுகள்

சூடான உணவுகள்

நீங்கள் உண்மையிலேயே ஹாட் ஃப்ளாஷால் அவதிப்பட்டு வந்தால், சூடான சூப் போன்ற சூடான உணவு வகைகளை தொடர்ச்சியாக சாப்பிடாதீர்கள். அதனால் உணவருந்தும் முன் சூப்பிற்கு பதிலாக சாலட் போன்றவற்றை உண்ணுங்கள். குளிர் சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் அல்லது குளிர்ந்த நீரை குடிப்பதால் ஹாட் ஃப்ளாஷ் சற்று குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Foods Should You Avoid During Menopause?

Simple menopause diet choices, such as fruit instead of a sugary dessert, could make all the difference in your day and your mood.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter