For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

போலி உணவுப் பொருள் தயாரிப்பிலும் கைவரிசையை காட்டும் சீனா: உஷார் மக்களே!!!

|

போலிகளுக்கு பெயர்போன நாடு சீனா. எந்த ஒரு புதிய எலக்ட்ரானிக் பொருள் சந்தையில் வந்தாலும் அதை ஓரிரு வாரங்களில் அக்குவேறு, ஆணிவேராக பிரித்து, மேய்ந்து குறைந்த விலையில் சந்தையில் விற்க ஆரம்பித்துவிடும் சீனா. நீண்டநாள் உழைக்காது என்றாலும், பகட்டிற்காக பயன்படுத்துபவர்கள் இதை வாங்குவார்கள்.

சீனாவை பற்றி யாராலும் நம்ப முடியாத அதிர்ச்சிகரமான தகவல்கள்!!!

நீங்கள் பயன்படுத்தும் உபகரணங்களில் போலி என்றால் பரவாயில்லை, ஆனால் நீங்கள் சாப்பிடும் உணவில் கூட மிகவும் தரம் குறைந்த உணவுப் பொருட்களை தயாரித்து உங்கள் உடல் பாகங்களுக்கு தீங்கு விளைவிக்க செய்கிறது சீனா. முட்டை, இறைச்சி, அரிசி, தேன் என அன்றாட உணவுப் பொருட்களில் தான் இவர்கள் நிறைய கலப்படம் செய்து ஏற்றுமதி செய்கிறார்கள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிளாஸ்டிக் அரிசி

பிளாஸ்டிக் அரிசி

நாம் தினமும் உணவில் பயன்படுத்தும் அரிசியில் கூட சீனர்கள் போலியை தயாரிக்கிறார்கள். பிளாஸ்டிக்கை மூலப் பொருளாகக் கொண்டு இந்த பிளாஸ்டிக் அரிசிகள் சந்தையில் விற்கப் படுகின்றன. இவை, இயற்கை அரிசிகளோடு கலப்பு செய்து விற்கப்படுவதால் கண்டறிவது கொஞ்சம் கடினம். எனவே, சீனா தயாரிப்பு அரிசியை எக்காரணம் கொண்டும் வாங்க வேண்டாம்.

போலி முட்டை

போலி முட்டை

ஸ்டார்ச், கோகுலண்ட்ஸ் (coagulants), ஜிப்சம் பவுடர், கால்சியம் கார்பனேட் மற்றும் மெழுகு போன்றவற்றை கொண்டு இந்த போலி முட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. இது சாதாரண முட்டையை விட ருசியாக இருப்பதாய் மக்கள் கூறுகிறார்கள். ஆனால், மக்களின் ஆரோக்கியத்தை இது வலுவாக பாதிக்கிறது.

எலி மட்டன்

எலி மட்டன்

மட்டன் என்ற பெயரில், எலி, நரி போன்ற விலங்குகளின் கறியை சேர்த்து கலப்படம் செய்து சீனாவில் விற்கபடுகிறது. சில வாரங்களுக்கு முன்பு கூட, பல ஆண்டுகள் பழமையான இறைச்சியை விற்று, உலக அளவில் பெரும் அதிர்ச்சியை உண்டாகியது சீனா.

அரிசி நூடுல்ஸ்

அரிசி நூடுல்ஸ்

பூஞ்சணம் (அ) பூசணம் பிடித்த, கெட்டுப் போன தானியங்கள் மற்றும், அரிசியைக் கொண்டு இந்த அரிசி நூடுல்ஸ் தயாரிக்கப் படுகிறது. ஏறத்தாழ 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதைத் தயாரிக்கின்றன. இவை பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு தான் விற்கபடுகிறது.

கலப்படம் செய்யப்பட்ட தேன்

கலப்படம் செய்யப்பட்ட தேன்

சர்க்கரை சிரப், பீட்ரூட் சிரப் போன்றவற்றின் கலப்புடன் போலி தேன் தயாரிக்கப்படுகிறது. இதில் நீர், சர்க்கரை, இரசாயன வண்ணம் மற்றும் படிகாரம் போன்றவை கலப்பு செய்யப் படுகின்றன.

போலி ஒயின்

போலி ஒயின்

சீனாவில் விற்கப்படும் ப்ரீமியம் ஒயின்களில் 90% போலியானவை என சீனாவின் தொலைக்காட்சியே (CTV) வெட்டவெளிச்சமாக கூறியுள்ளது. பல மில்லியன் டாலர்கள் மதிப்பு வாய்ந்த அந்த ஒயின்களை சீனப் போலீஸார் பறிமுதல் செய்து அழித்துள்ளனர். ஆயினும் கூட இன்னும் சந்தைகளில் இந்த போலி ஒயின் விற்பனையில் தான் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Beware Of Fake Food Products From China

People should beware of fake food products from china. Take a look on fake food products from china.
Desktop Bottom Promotion