Latest Updates
-
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்
இரும்புச்சத்து நிறைந்த புளிச்சகீரை
தமிழ்நாட்டில் புளிச்ச கீரை என்றும் ஆந்திரா மக்களால் கோங்குரா என்றும் அன்போடு அழைக்கப்படும் இந்த கீரை பெயரைப்போலவே புளிப்புத்தன்மை உடையது. இதில் வைட்டமின் சத்துக்களுடன் இரும்புச்சத்து மற்றும் தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன.
இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, மத்தியபிரதேசம், அஸ்ஸாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் புளிச்சகீரை அதிக அளவில் நார்களுக்காக பயிரிடப்படுகிறது. புளிச்சகீரையின் இலைகள், மலர்கள் மற்றும் விதைகள் உள்ளிட்டவை மருத்துவ பயன் உடையவை.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
புளிச்சகீரை செடியின் மலர்களில் இருந்து கன்னாபினிடின், கன்னாபிஸ்சிட்ரின், கன்னாபின்னின், ஆகியவை எடுக்கப்படுகின்றன. கரிம அமிலங்களான லினோலியிக் ஒலியிக், பால்மிடிக் அமிலங்கள் விதைகளில் உள்ளன. இலைகளில் ப்ரக்டோஸ், குளுக்கோஸ், மானேஸ் சர்க்கரைகளும், லிக்னோசெரிக், வனிலிக், சிரோடிக் அமிலங்களும் பிரித்தெடுக்கப்படுகின்றன.
உடலை வலுவாக்கும்
வைட்டமின் மற்றும் இரும்புசத்து நிறைந்த புளிச்சகீரை உடலை வலிமையாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சத்து குறைவினால் நோஞ்சானாக தெரியும் குழந்தைகளுக்கு இந்த கீரையை தினமும் உணவோடு சேர்த்து கொடுத்து வர அவர்களின் உடல் புஷ்டியாகும்.
வாத நோய்களை குணமாக்கும் தன்மை புளிச்ச கீரைக்கு உண்டு. சொறி சிரங்கு உள்ளவர்கள் இந்த கீரையை சட்னியாக செய்து சாப்பிட்டால் தோல் தொடர்பான நோய்கள் குணமடையும்.
கோங்குரா சட்னி
ஆந்திராவில் கோங்குரா சட்னி மற்றும் கோங்குரா ஊறுகாய் பிரசித்தி பெற்றது. இந்த கீரையின் மகத்துவம் உணர்ந்த ஆந்திரா மக்கள் இதனை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்கின்றனர்.
இலைகள் வயிற்றுப்போக்கை தூண்டும். கனிகளின் சாறுடன் சர்க்கரை மற்றும் மிளகைச் சேர்த்து உண்டால் மலச்சிக்கல் மற்றும் வயிற்று நோய்கள் குணமடையும். விதைகள் பால் உணர்வு தூண்டுகின்றன.
காசநோய் குணமாகும்
புளிச்சகீரை உடல் உஷ்ணத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. ரத்தத்தை சுத்திகரிக்கிறது. காசநோய் உள்ளிட்ட பல நோய்களை குணப்படுத்தும். அதனால்தான் இந்த கீரையை உடலையும் குடலையும் குணமாக்கும் கீரை என்கின்றனர்.
இது பித்தத்தை அதிகப்படுத்தும் தன்மையுடையது என்பதால் பித்தம் சம்பந்தமுடையவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.உணவில் அதிக அளவு கீரைகள் சேர்ப்பது நல்லது.
இரவில் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. இரவில் கீரையைச் சேர்த்துக் கொண்டால் குளிர்ச்சியாலும், தூக்கத்தினாலும் சீரண சக்தி குறைந்து செரிமானம் பாதிக்கப்படும். இதனால் கீரைப் பூச்சிகள் வயிற்றில் வளர்ந்து பெரும்பாலோருக்கு வயிற்றுப் பொருமல், வயிற்று உப்பிசம், வயிற்றிரைச்சல் போன்றவை ஏற்படும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications