Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
தனிமையின் கொடுமையை விரட்ட கை கொடுக்கும் கோழி சூப்!

இந்த ஆய்வின் முன்னணி ஆய்வாளரும், பபலோ பல்கலைக் கழக மாணவருமான ஜோர்டான் டிராய்சி, “எனது குடும்பத்தைப் பொறுத்தவரை உணவு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது" என்று கூறியுள்ளார். இவருடன் இணைந்து ஷிரா கேப்ரியல் என்பவர் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார்.
தாக்கத்தை ஏற்படுத்தும் உணவுகள்
சமூகவியல் விஷயங்களில், மனிதர்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் மனிதர் அல்லாத விஷயங்களைப் பற்றி அவர்கள் ஆய்வு செய்தனர்.
ஒருவருக்கு நெருக்கமானவர், அன்புக்குரியவர் ஏற்படுத்தும் அதே தாக்கத்தை நலமளிக்கும் உணவும் ஏற்படுத்துமா என்று டிராய்சி யோசித்திருக்கிறார்.
“நாங்கள் செய்த ஆய்வில், பொதுவாக நலமளிக்கும் உணவுகள், நமக்குப் பிடித்தவர்கள் விரும்பிச் சாப்பிடுபவை என்று தெரியவந்துள்ளது" என்று கூறியுள்ளார் டிராய்சி.
தனிமையை விரட்டும்
சிக்கன் சூப்", உருளைக்கிழங்கு மசியல், பாலாடைக்கட்டியுடன் மக்ரோனி" போன்றவை நலமளிக்கும் உணவுகள். தனிமையால் ஏற்படும் வெறுப்பை, விரக்தியை அவை போக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். உளவியல் அறிவியல் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையில் அவர்கள் இத்தகவலைத் தெரிவித்திருக்கிறார்கள்.
திருப்திகரமான உணர்வு
இந்த உணவுகள் ஒருவேளை ரத்த நாளங்களுக்கு நன்மை பயப்பதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால், சலிப்பான உணர்வுகளைத் தணிய வைக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். நன்றாக இருக்கும் அல்லது திருப்திகரமான உணர்வைத் தரும் என்று உறுதி கூறுகிறார்கள்.
குறிப்பிட்ட உணவுகளைப் பற்றி நினைப்பது அல்லது சாப்பிடுவது, நமக்கு நெருக்கமானவர்களை ஞாபகப்படுத்துகிறது. நாம் பிறருடன் எப்போதும் தொடர்பு வைத்திருக்கிறோம் என்று உணர மக்கள் பல வழிகளை வைத்திருக்கிறார்கள் என்பது அந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
அதனால்தானோ என்னவோ போராடித்தால் பெரும்பாலானவர்கள் தம்மடிக்க போகின்றனரோ?
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
