Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
அதிகரிக்கும் தக்காளி விலை: சமையலில் தக்காளிக்கு பதிலாக வேறு எந்த பொருட்களை பயன்படுத்தலாம் தெரியுமா?
Tomato Substitutes In Tamil: தினசரி சமையலில் சுவைக்காகவும், கண்ணைக் கவரும் நிறத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொருள் தான் தக்காளி. ஆனால் தற்போது தக்காளியின் விலை தாறுமாறாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.150 ஆக உயர்ந்துள்ளது. இப்படியே போனால், தக்காளியை நாம் கண்ணால் பார்க்க முடியுமே தவிர, சுவைக்க முடியாமல் போய்விடும். ஆனால் நிச்சயம் ஒரு நாள் தக்காளியின் விலை குறையும்.

அதுவரை தக்காளிக்கு இணையான புளிப்புச் சுவைக்கும், நிறத்திற்கும் ஒருசில மாற்று பொருட்களைப் பயன்படுத்தலாம். இவை நிச்சயம் விலை குறைவாக இருப்பதோடு, தக்காளிக்கு சிறந்த மாற்றாகவும் இருக்கும். கீழே தக்காளிக்கு பதிலாக சமையலில் பயன்படுத்த ஏற்ற சில பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. மாங்காய் தூள்
மாங்காய் தூள் நல்ல புளிப்பு மற்றும் இனிப்பு கலந்த சுவையைக் கொண்டது மற்றும் இது விலை குறைவானதும் கூட. இந்த மாங்காய் தூளை நீங்கள் சமைக்கும் போது ஒரு டீஸ்பூன் அல்லது ஒரு டேபிள் ஸ்பூன் என உங்களுக்கு தேவையான அளவு குழம்பு அல்லது வேறு சமையலில் சேர்த்துக் கொள்ளலாம். இது நிச்சயம் உணவில் நீங்கள் எதிர்பார்க்கும் புளிப்புச் சுவையைத் தரும்.
2. புளி
தக்காளியை விட அதிக புளிப்புச் சுவையைக் கொண்ட பொருள் தான் புளி. புளிக்குழம்பு, சாம்பார் போன்றவற்றில் தக்காளியைப் போடாமல் புளிச்சாற்றினை மட்டும் பயன்படுத்தினாலே போதும், அந்த ரெசிபி நன்றாக இருக்கும். மேலும் புளிச்சாறு குழம்பிற்கு நல்ல நிறத்தையும் தரக்கூடியது. எனவே தக்காளிக்கு மாற்றாக புளியைப் பயன்படுத்தலாம்.
3. புளித்த தயிர்
இந்திய சமையலில் தக்காளி சேர்த்து செய்யப்படும் சமையல்களில், தக்காளிக்கு மாற்றாக புளித்த தயிரை பயன்படுத்தலாம். தயிரை குழம்பு அல்லது கிரேவியில் சேர்க்கும் போது, அந்த கிரேவி சற்று கெட்டியாவதோடு, நல்ல புளிப்பு சுவையுடனும் இருக்கும். ஆனால் அதற்கு தயிரை சமைத்து முடித்த பின் இறுதியில் சேர்த்து கிளற வேண்டும்.
4. நெல்லிக்காய்
நற்பதமான நெல்லிக்காயை தக்காளிக்கு மாற்றாக பயன்படுத்தலாம். ஆனால் நெல்லிக்காய் சற்று கூடுதல் புளிப்புச் சுவையைக் கொண்டது என்பதால் அதைப் பயன்படுத்தும் போது அளவில் சற்று கவனமாக இருக்க வேண்டும். மேலும் நெல்லிக்காயை சமையலில் பயன்படுத்துவதாக இருந்தால், அந்த நெல்லிக்காய் துண்டுகளை சர்க்கரை சேர்த்த நீரில் சிறிது நேரம் ஊற வைத்து அரைத்து, அதன் பின் சமையலில் சேர்க்கவும்.
5. வினிகர்
தக்காளிக்கு அடுத்தப்படியாக தனித்துவமான புளிப்புச் சுவையைக் கொண்ட மற்றொரு பொருள் வினிகர். ஆப்பிள் சீடர் வினிகரில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் இருப்பதால், அவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் குடல் தொற்று பிரச்சனைகள், வயிற்றுப் போக்கு, செரிமான பிரச்சனைகள் போன்றவற்றில் இருந்து விடுவிடுக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications