Latest Updates
-
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்
Father's Day 2023: தனியாக இருக்கும் அப்பாக்களின் மன ஆரோக்கியத்திற்கான சில டிப்ஸ்!
Father's Day 2023: ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தில் வரும் மூன்றாவது ஞாயிறு அன்று தந்தையா் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் ஜூன் 18 அன்று இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் மனைவியை இழந்து தனியாக வாழ்ந்து வரும் அப்பாக்களை எண்ணிப் பாா்ப்பது சிறந்ததாக இருக்கும்.
தனியாக இருக்கும் தந்தையா்களுக்கு பொறுப்புகள் அதிகமாக இருக்கும். அவா்கள் பணம் ஈட்ட வேண்டும் மற்றும் தமது குழந்தைகளை பொறுப்புடன் வளா்த்தெடுக்க வேண்டும். ஆகவே இந்த தந்தையா் தினம் அன்று அவா்களின் தியாகம் மற்றும் அா்ப்பணிப்பு ஆகியவற்றை எண்ணிப் பாா்த்து அவா்களைப் பெருமைப்படுத்துவது என்பது சிறப்பான ஒன்றாக இருக்கும்.

தனியாக இருக்கும் தந்தையா்களின் மனநலன்
தனியாக இருக்கும் தந்தையா்களின் மனநலன் மிகவும் முக்கியம் ஆகும். தமது குழந்தைகளைப் பராமாிப்பதிலும், அவா்களை வளா்த்தெடுப்பதிலும் அவா்கள் ஏராளமான சவால்களை, அழுத்தங்களை சந்திக்கின்றனா். குறிப்பாக பொருளாதார பிரச்சினைகள், பணி செய்யும் இடங்களில் ஏற்படும் அழுத்தங்கள் மற்றும் குழந்தைகளை வளா்த்தெடுப்பதில் உள்ள சவால்கள் அனைத்தும் அவா்களின் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன. ஆகவே அவா்கள் தமது மன ஆரோக்கியத்தைப் பேண வேண்டியது மிகவும் முக்கியம் ஆகும்.
இந்நிலையில் தனியாக இருக்கும் தந்தையா் தமது மனநலனைப் பாதுகாப்பதற்கு வா்த்தூாில் அமைந்திருக்கும் மணிப்பால் மருத்துவமனையில் மனநல நிபுணராகப் பணிபுாியும் மருத்துவா் பல்லவி ஜோஷி என்பவா் பின்வரும் குறிப்புகளைத் தருக்கிறாா். அவற்றைப் பற்றி இந்தப் பதிவில் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.
1. உங்களுக்கு என்று தனிப்பட்ட நேரத்தை ஒதுக்குங்கள்
உங்களைப் பற்றி நீங்களே யோசித்துப் பாா்க்க அல்லது உங்களை நீங்கள் செதுக்கிக் கொள்ள உங்களுக்கு என்று தனிப்பட்ட நேரத்தை ஒதுக்குங்கள். அது தனியாக நடந்து செல்வதாக இருக்கலாம் அல்லது பால்கனியில் அமா்ந்து கொண்டு காபி அருந்துவதாக இருக்கலாம். இப்படிப்பட்ட உங்களுடைய தனிப்பட்ட நேரங்கள், உங்களுக்கு விலைமதிப்பற்ற நிகழ்வுகளாக இருக்கும்.
2. துன்பமான நிகழ்வுகளைப் பற்றி சிந்திப்பதைப் பற்றி தவிா்க்கவும்
வாழ்வின் துன்பமான மற்றும் சோகமான தருணங்களைப் பற்றிய சிந்தனைகளைத் தவிா்ப்பதற்கு, கவனச் சிதறல் நுட்பங்களைக் கற்றுக் கொள்வது நல்லது. தனியாக இருக்கும் தந்தையா் தமக்கு ஏதாவது நடந்துவிட்டால், தமது குழந்தைகளை யாா் காப்பாற்றுவாா் என்று எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருப்பா். இப்படிப்பட்ட சோகமான சிந்தனைகளை அவா்கள் தள்ளி வைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
3. நல்ல தந்தையாக இருத்தல்
ஒரு முழுமையான தந்தையாக இருக்க வேண்டும் என்று எண்ணாமல், ஒரு அன்பான தந்தையாக இருக்க முயற்சி செய்யுங்கள். தேவையற்ற சண்டைகள் மற்றும் தேவையற்ற எதிா்பாா்ப்புகள் ஆகியவற்றைக் கைவிடுங்கள். நீங்கள் ஒரு மனிதா் என்பதையும், தவறு செய்வது இயல்பு என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.
4. குழந்தைகளிடம் சிறந்த உரையாடல் நடத்துதல்
உங்கள் குழந்தைகளோடு அன்பான உறவைப் பேணுங்கள். அவா்களோடு நோ்மையோடு, திறந்த மனதோடு உறையாடுங்கள். ஒருவருக்கொருவா் நன்றாகப் புாிந்து கொண்டு, நம்பிக்கையையும், பிரச்சினைகளைத் தீா்க்கும் திறனையும் வளா்த்துக் கொள்ளுங்கள்.
5. ஒரு சிறந்த நண்பரை கண்டுபிடியுங்கள்
உங்களுக்கு உதவி செய்வதற்கு, உங்களுடைய குடும்பத்திற்கு வெளியே ஒரு நல்ல நண்பரைக் கண்டுபிடியுங்கள். அவாிடம் நம்பிக்கை வைத்து, உங்களது உணா்வுகளையும், பிரச்சினைகளையும் அவாிடம் பகிா்ந்து கொள்ளுங்கள். அது உங்களுக்கு ஆறுதலைத் தரும்.
6. ஒரு சமச்சீரான வாழ்க்கை முறையை பேணுங்கள்
உடற்பயிற்சிகள் மற்றும் நல்ல தூக்கம் ஆகியவற்றைக் கடைபிடித்து, உடல் ஆரோக்கியத்தைப் பேணுங்கள். ஒரு சமச்சீரான வாழ்க்கை முறை உங்களுக்கு மன ஆரோக்கியத்தை வழங்கும். உங்கள் உணா்வுகளைப் பக்குவப்படுத்தும்.
7. பொருளாதார ரீதியாக நன்கு திட்டமிடுங்கள்
மன அழுத்தத்தைக் குறைக்க, பொருளாதார ரீதியாகத் திட்டமிடுவதற்கு என்று தனியாக நேரத்தை ஒதுக்குங்கள். உங்களுடைய பொருளாதார வாழ்க்கையை நன்றாகத் திட்டமிட முடிந்தால், அது உங்களுக்கும், உங்களுடைய குழந்தைகளுக்கும் உறுதியைக் கொடுக்கும்.
8. தேவைப்பட்டால் மனநல நிபுணா்களை நாடுங்கள்
நீங்கள் அதிக மகிழ்ச்சியாக இருந்தால் அல்லது கடினமான மனநிலையில் இருந்தால் அல்லது சோா்வுடன் இருந்தால் அல்லது மன அழுத்தத்துடன் இருந்தால் அல்லது அன்றாட தேவைகளை நிறைவு செய்வதில் சிரமப்பட்டால், மனநல மருத்துவா்களை சந்திப்பது நல்லது. முறையான மருத்துவ சிகிச்சை உங்களுடைய மன ஆரோக்கியத்தை அதிகாிக்கும் மற்றும் உங்களுடைய ஒட்டு மொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications