Latest Updates
-
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா?
Exclusive: பெண்களின் கருவுறும் திறனை பாதிக்கும் பிசிஓஎஸ் எதனால் வருகிறது? விளக்குகிறார் டாக்டர் வனிதா..!
Polycystic Ovary Syndrome: உலகளவில் லட்சக்கணக்கான பெண்களை பாதிக்கும் ஒரு பிரச்சனை தான் பிசிஓஎஸ் (PCOS) என்று அழைக்கப்படும் சினைப்பை நோய்க்குறி. இப்பிரச்சனை குண்டாக இருக்கும் பெண்களிடம் அதிகம் காணப்படுகிறது. பிசிஓஎஸ் பிரச்சனையைக் கொண்ட பெண்களால் கருத்தரிப்பது என்பது சற்று சவாலாகவே இருக்கும். இது தவிர, பிசிஓஎஸ் பிரச்சனையானது ஒரு பெண்ணின் ஆரோக்கியத்தை பலவாறு பாதிக்கும் என்பது தெரியுமா?
நிறைய பெண்களுக்கு இந்த பிசிஓஎஸ் பிரச்சனை பரவலாக அறியப்படாத ஒன்றாகவே உள்ளது. இருப்பினும், இதனால் ஏற்படும் தீவிரமான விளைவுகளின் காரணமாக இதுக்குறித்து சரியான புரிதல் அவசியம் தேவைப்படுகிறது. எனவே பிசிஓஎஸ் என்றால் என்ன, அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து அடையாரில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் சென்டரைச் சேர்ந்த டாக்டர். ஆர். வனிதா ஸ்ரீ அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையிடம் விரிவாக கூறியுள்ளார். இப்போது இதுக்குறித்து காண்போம்.

சினைப்பை நோய்க்குறி (PCOS) என்றால் என்ன?
சினைப்பை நோய்க்குறி அல்லது PCOS என்பது, கருத்தரிக்கும் வயதுள்ள பெண்களிடம் காணப்படுகின்ற ஹார்மோன் சுரப்பு சார்ந்த ஒரு கோளாறு ஆகும். வாழ்நாள் முழுவதும் இருக்கக்கூடிய இப்பாதிப்பு நிலை பல்வேறு அறிகுறிகளை வெளிப்படுத்தும். அதில் சீரற்ற மாதவிடாய், உடல் எடை அதிகரிப்பு, அளவுக்கதிகமான முடி வளர்ச்சி, முகப்பரு / கொழுப்புக்கட்டிகள் மற்றும் உச்சந்தலைமுடி மெலிதல் ஆகியவை இந்த அறிகுறிகளுள் குறிப்பிடத்தக்கவை.
எப்படியெல்லாம் பாதிக்கிறது?
PCOS பாதிப்புள்ள பெண்கள் பெரும்பாலும் இன்சுலின் எதிர்ப்புத்திறனை வெளிப்படுத்துகின்றனர். அதாவது இது டைப்-2 நீரிழிவு என்னும் இன்சுலினை திறம்பட பயன்படுத்த உடல் சிரமப்படுகிற ஒரு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது. ஆன்ட்ரோஜென்கள் அல்லது ஆண் ஹார்மோன்களின் அளவுகளில் உயர்வு ஏற்பட்டால், அது கருமுட்டை வெளியீட்டில் இடையூறை ஏற்படுத்தி, சீரற்ற மாதவிடாய் சுழற்சிக்கு வழிவகுக்கும்.
குறிப்பாக PCOS உடன் அதிக உடல் எடை கொண்ட பெண்களுக்கு இதன் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். அதுவும் கர்ப்ப கால நீரிழிவு, இதய நோய், உயர்இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால் அளவுகள், தூக்கத்தில் மூச்சுத்திணறல் மற்றும் பக்கவாதம் போன்ற தீவிர உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.
PCOS-ன் காரணங்கள்
சினைப்பை நோய்க்குறி (PCOS)தோன்றுவதற்கு சரியான, துல்லியமான காரணம் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், அதிகளவிலான ஆன்ட்ரோஜென் அளவுகள் இதற்கு பங்களிப்பு செய்யும் ஒரு குறிப்பிடத்தக்க காரணி என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதோடு அளவுக்கு அதிகமான உடல் எடை மற்றும் குடும்பத்தில் யாருக்கேனும் PCOS அல்லது டைப் 2 நீரிழிவு இருந்தால், அவர்களுக்கு இந்த பிரச்சனை வருவதற்கு வாய்ப்புள்ளது.
PCOS-ஐ எப்படி கண்டறிவது?
PCOS-ன் அறிகுறிகள் பரவலாக மாறுபடுகின்றன. PCOS பாதிப்பை உறுதி செய்வதற்கு, சீரற்ற மாதவிடாய்கள், அதிகரித்திருக்கும் ஆன்ட்ரோஜென் அளவுகள் மற்றும் சினைப்பைகளில் அதிக எண்ணிக்கையில் சிறிய நீர்க்கட்டிகள் என்ற மூன்று முக்கிய அறிகுறிகளுள், குறைந்தது இரண்டாவது இருக்க வேண்டும். முக்கியமாக ஒரு PCOS பாதிப்பு நிலையை உறுதிசெய்வதற்கு சினைப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பது மட்டும் போதுமானது அல்ல; ஏனெனில் PCOS பாதிப்பு இல்லாத பல பெண்களுக்கும் இத்தகைய சினைப்பை நீர்க்கட்டிகள் இருக்கின்றன.
PCOS-க்கான சிகிச்சை
சீரற்ற மாதவிடாய்கள், கருத்தரிக்க இயலாமை பிரச்சனைகள் அல்லது அதோடு தொடர்புடைய அறிகுறிகளின் காரணமாக PCOS இருப்பதாக நீங்கள் சந்தேகப்பட்டால். ஒரு மருத்துவரை உடனே கலந்தாலோசியுங்கள். தொடக்கத்திலேயே இப்பாதிப்பு இருக்கிறதா என்று கண்டறிந்து, உடனே சிகிச்சையை மேற்கொள்வது மிகவும் முக்கியம்.
அதோடு உடல் எடையை குறைப்பது மற்றும் உடலுழைப்பை அதிகரிப்பது மற்றும் மனஅழுத்த அளவுகளை குறைப்பது, போதுமான நேரம் உறங்குவது, உரிய காலஅளவுகளில் உணவு உண்ணும் பழக்கம் ஆகியவை வகை 2 நீரிழிவுக்கான இடர்வாய்ப்பை குறைக்கும் மற்றும் PCOS அறிகுறிகளை நீக்கும் என்பதால் இப்படியான வாழ்க்கைமுறை மாற்றங்களை செய்ய வேண்டும். ஒவுலேசனை தூண்டிவிடுவதற்கும் மற்றும் அளவுக்கு அதிகமாக முடி உடலில் வளர்வது மற்றும் முகப்பருக்கள் தோன்றுவது போன்ற அறிகுறிகளுக்கு தீர்வு காண்பதற்கும் மருந்துகள் கிடைக்கின்றன.
எனவே உங்களுக்கு உங்களுக்கு PCOS இருக்கிறது என்று நீங்கள் சந்தேகித்தால், அதை உறுதி செய்ய உடனே மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனையையும், வழிகாட்டலையும் பெறுங்கள் என்று டாக்டர் வனிதா கூறினார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications