Latest Updates
-
1 கப் வரகரிசியும், வாழைப்பழமும் இருந்தா இந்த ஆரோக்கியமான பணியாரத்தை செய்யுங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
பார்லர் போகாமலேயே முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? இந்த 5 ஃபேஸ் பேக்கை போடுங்க போதும்.. -
ஆகஸ்ட் கடைசியில் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களின் வேலையில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும்! -
செப்டம்பரில் இரண்டு முறை ராசி மாறும் புதன்: சகல சௌபாக்கியத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
1 கப் ரவையும், 1 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. அள்ளும்.. -
கழிப்பறையில் ஐஸ் கட்டிகளை கொட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தமாம்.. எச்சரிக்கும் எய்ம்ஸ் டாக்டர்! -
இட்லி அரிசியும், அப்பளமும் இருந்தா இந்த கேரளா ஸ்டைல் அப்பள வடையை செய்யுங்க - வேற லெவலில் இருக்கும் -
சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 5 ராசிகளின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
10 கிராம் 1 கோடிக்கு விற்கப்படும் உலகின் விலையுயர்ந்த மரம் எது தெரியுமா? இதுல அப்படி என்னதான் இருக்கு?
தொடர்ந்து 1 மாதம் வெறும் வயிற்றில் முருங்கைக்கீரை நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Drumstick Leaves Water Benefits In Tamil: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறந்த வழி நல்ல சத்தான உணவுப் பொருட்களை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது தான். வெறும் வயிற்றில் நல்ல சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது, அந்த உணவில் உள்ள சத்துக்களை உடல் முழுமையாக உறிஞ்சும்.
அப்படி ஏராளமான அத்தியாவசிய வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளைக் கொண்ட ஒரு உணவுப் பொருள் தான் முருங்கைக்கீரை. பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் இந்த முருங்கைக்கீரையானது அதன் மருத்துவ குணங்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இன்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க முருங்கைக்கீரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுவும் முருங்கைக்கீரை நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது உடலினுள் ஏராளமான மாற்றங்களை ஏற்படுத்தும்.
குறிப்பாக உடல் எடை, இரத்த சர்க்கரை போன்றவற்றைக் குறைக்க பெரிதும் உதவி புரிகிறது. இப்போது முருங்கைக்கீரை நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால் என்னென்ன அற்புதங்கள் உடலில் நிகழும் என்பதைக் காண்போம்.
உடல் சுத்தமாகும்
உங்கள் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள அழுக்குகளை தினந்தோறும் வெளியேற்றிவிட்டாலே, உடல் ஆரோக்கியமாக இருக்கும். அப்படி உடலில் உள்ள அழுக்குகளை முழுமையாக வெளியேற்றும் திறன் முருங்கைக்கீரை நீருக்கு உள்ளது. அதற்கு ஒரு ஸ்பூன் முருங்கைக்கீரை பொடியை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, சருமமும், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும்.
உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும்
உங்கள் உடலின் மெட்டபாலிசம் நாள் முழுவதும் சிறப்பாக இருக்க வேண்டுமானால், அதற்கு முருங்கைக்கீரை நீர் உதவி புரியும். ஆய்வு ஒன்றில் கூட, முருங்கைக்கீரை உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவி புரிந்து, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுவது தெரிய வந்துள்ளது. அதுவும் முருங்கைக்கீரை நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலின் மெட்டபாலிசம் தூண்டப்படுவதோடு, உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளும் எரிக்கப்படும்.
எடை இழப்பை ஊக்குவிக்கும்
நீங்கள் உங்கள் உடல் எடையைக் குறைக்க நீண்ட நாட்களாக முயற்சித்தும், எந்த பலனும் தெரியவில்லையா? அப்படியானால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் முருங்கைக்கீரை நீரைக் குடித்து வாருங்கள். இதனால் அது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, வேகமாக உடல் எடையைக் குறைக்க உதவி புரியும். ஒருவரது உடலில் மெட்டபாலிசம் சிறப்பான அளவில் இருந்தால், உடல் எடையைக் குறைக்க அவதிப்பட வேண்டிய அவசியம் இல்லை.
அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்தது
முருங்கைக் கீரையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் ப்ரீ ராடிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தால் ஏற்படும் சேதத்தைத் தடுத்து பாதுகாப்பளிக்கிறது. முக்கியமாக முருங்கைக்கீரையில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, கால்சியம், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன. இந்த கீரை அல்லது அதன் நீரை தினமும் எடுத்து வந்தால், நோயெதிர்ப்பு மண்டலம், எலும்புகள், பற்கள், உடலின் ஆற்றல் போன்றவை வலிமையாக இருககும்.
MOST READ: ஒரு கைப்பிடி முருங்கைக்கீரை இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
இரத்த சர்க்கரையைப் பராமரிக்கும்
ஆயுர்வேதத்தின் படி, முருங்கைக்கீரை நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது உடலின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும். ஏனெனில் முருங்கைக்கீரையில் இன்சுலின் சென்சிட்டிவிட்டியே மேம்படுத்தும் கலவைகள் உள்ளன. எனவே சர்க்கரை நோயாளிகள் இந்த நீரைக் குடித்து வந்தால், இரத்த சர்க்கரையைக் கட்டுப்பாட்ல் வைத்துக் கொள்ளலாம்.
செரிமானம் மேம்படும்
நீங்கள் அடிக்கடி செரிமான பிரச்சனைகளை சந்திக்கிறீர்களா? உங்கள் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்த நினைக்கிறீர்களா? அப்படியானால் அதற்கு சிறந்த வழி முருங்கைக்கீரை நீரைக் குடிப்பது தான். இந்த நீரை தினமும் காலையில் குடித்து வந்தால், அதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து செரிமான மண்டலத்தின் செயல்பாடை அதிகரித்து, குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் பிரச்சனையைத் தடுக்கும்.
உடல் சோர்வு தடுக்கப்படும்
நீங்கள் மிகுந்த உடல் சோர்வை சந்திக்கிறீர்களா? எப்போதும் சுறுசுறுப்பில்லாதவாறு உணர்கிறீர்களா? அப்படியானால் காலையில் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக, வெறும் வயிற்றில் முருங்கைக்கீரை நீரைக் குடியுங்கள். இதனால் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் கிடைத்து, உடல் நன்கு சுறுசுறுப்புடன் இருக்கும்
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications